siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

தம்மடிக்க இனி தடையில்லை!

13.08.2012.உலகில் புகைப்பிடிக்கும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருவதால், பல மாநில அரசாங்கங்களும் பொதுமக்களின் நலன்கருதி புகைப்பிடிக்கும் பழக்கத்தி நிறுத்தக்கோரி மக்களுக்கு அறிவுரை வழங்கியும், தங்களது மாநிலங்களில் புகையிலை பொருட்களை தடை செய்தும் வருகிறது. திரைப்படங்களில் பிரபல நடிகர், நடிகைகள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் வருவதால் ரசிகர்களாகிய இளைஞர்கள் சிறு வயதிலேயே அவற்றை கற்றுக்கொண்டு பாதிக்கப்படுகின்றனர் என்று சமூக நல ஆர்வலர்கள் கூறிவந்தனர்.
புகையிலை எதிர்ப்பில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து மத்திய அரசும் திரைப்படங்களில் இது போன்ற காட்சிகள் வரும்போது அதன் பாதிப்பையும் சேர்த்து அறிவிக்க வேண்டும் எனவும் பிரபல நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளை தாங்கள் நடிக்கும் படங்களில் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது. இதன் அடிப்படையில் தான் சமூக ஆர்வலர்கள் பலரும் பிரபல ஹீரோக்களின் படங்களில் இது போன்ற காட்சிகள் வரும் போது வழக்கு பதிவு செய்தோ அல்லது அதன் பாதிப்பை எடுத்துரைத்து அந்த
காட்சிகளை படங்களில் இருந்து நீக்கச் செய்து வந்தனர்.
சமீபத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் ‘துப்பாக்கி’ படத்தில் கூட இது போன்ற பிரச்சனை வந்தது குறிப்பிடத்தக்கது.பிகைப்பிடிப்பதற்கு தடை என்ற அறிவிப்பைக் கேட்டு பல திரையுலகினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.ஆனாலும் தனது முடிவில் எவ்வித மாற்ற்மும் எடுக்காத மத்திய அரசு திடீரென தனது நிலையை மாற்றி சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்குத் தடையில்லை என
அறிவித்துள்ளது.”கதைக்கு தேவைப்பட்டால் புகைப்பிடிப்பது போன்ற காட்சியை வைத்துக்கொள்ளலாம்.
ஆனால் படத்தின் துவக்கத்திலும் இடைவேளை முடிந்து படம் துவங்கும்போதும் புகைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடானது என்ற வாசகம் சிறிய அளவிலும், புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் நேரத்தில் பெரிய அளவிலும் இருக்க வேண்டும்” என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

0 comments:

கருத்துரையிடுக