siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 19 அக்டோபர், 2012

விக்கிலீக்ஸ் விவகாரம்: குற்றம் சாட்டப்பட்டவரின் மின்னஞ்சல்களை ஒப்படைக்க உத்தரவு

வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah.
விக்கிலீக்ஸ் இணையத்தளத்துக்கு அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிராட்லே மேனிங் தொடர்பான மின்னஞ்சல்களை ஒப்படைக்கும் படி, அரசுத்தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விக்கிலீக்ஸ் இணையத்தளத்துக்கு இராணுவம் மற்றும் அரசுத் துறைகளின் ஆவணங்களைக் கொடுத்து உதவியதாக, அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லே மேனிங் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக மேனிங்கின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து 1,300 மின்னஞ்சல்கள் அரசுத் தரப்பில் கைப்பற்றப்பட்டது.
இதில் 700 மின்னஞ்சல்களின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே மேனிங் கைது செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 12 மின்னஞ்சல்களைத் தவிர ஏனையவற்றை, குற்றம்சாட்டப்பட்டவர் வசம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி டேனிஷ் லிண்ட் உத்தரவிட்டுள்ளர்.
இந்நிலையில் 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிராட்லே மேனிங் குவாண்டிகோ கப்பற்தளத்தில் வைத்து மிக மோசமாக துன்புறுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சட்டவிரோதமான இச்செயலைக் கண்டித்து மனித உரிமைகள் அமைப்பினரும், பிராட்லேவின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்