siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 8 ஆகஸ்ட், 2012

தரம் குறைந்த எரிபொருளுக்கு காரணம் அரசியல் தலைவர்களின் அசமந்தப் போக்கு: அநுரகுமார

 
08.08.2012.
அரசியல் தலைவர்கள் மற்றும் கனியவளக் கூட்டுத்தாபன அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் மீண்டும் ஒருமுறை நாட்டில் தரம் குறைந்த எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார். கொள்வனவு செய்யப்பட்ட டீசலில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அரசாங்கமும் கனியவளக் கூட்டுத்தாபனமும் கூறிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களை பழுதாக்கிய டீசலை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை என கனியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளதாக அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும், கனியவளக் கூட்டுத்தாபனத்தால் விநியோகிக்கப்பட்ட டீசலை பயன்படுத்திய வாகனங்கள் பயண இடைநடுவில் செயலிழந்து விடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்துக்கு பதிலளித்த கனியவளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, தரம் குறைந்ததாக கருதப்படும் டீசல் வெளிநாட்டுக்கு பரிசோதனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அந்த பரிசோதனை அறிக்கையின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்

0 comments:

கருத்துரையிடுக