siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 8 ஆகஸ்ட், 2012

கடமை தவறிய பொலீஸ் உத்தியோகத்தர்கள் கடமையிலிருந்தே நீக்கப்பட்டனர்; அஜித் ரோகண தெரிவிப்பு

08.08.2012.
news
மது போதையில் கடமை நேரத்தில் இருந்த மற்றும் கடமையை செய்யத் தவறிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உற்பட ஐவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண ஒன்லைன் உதயன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

நேற்று முந்தினம் இரவு மிகிந்தலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன், இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலீஸ் சாரதி ஆகியோர் நடமாடும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இவர்கள் மது போதையில் இருப்பதாக அநுராதபுரம் பொலிஸ் அதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பதில் பொலிஸ் அதிகாரி ஒருவரை அவ்விடத்திற்கு அனுப்பி சோதனை செய்தபோது இரு கான்ஸ்டபிள்கள் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர்கள் நால்வரும் மிஹிந்தளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு இரவு பணியில் இருந்து உப பொலிஸ் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எனினும் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக மது போதையில் இருந்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் பொலிஸ் நிலையத்தைவிட்டு வெளியில் சென்றுள்ளனர்.

இதனையடுத்து உப பொலிஸ் பரிசோதகர், இரவு நடமாடும் சேவைக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன், இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலீஸ் சாரதி ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ் ஐவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

0 comments:

கருத்துரையிடுக