siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 22 ஆகஸ்ட், 2012

பயண எச்சரிக்கையில் மாற்றம் செய்க: பிரித்தானியாவிடம் பீரிஸ் கோரிக்கை

புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012,பிரித்தானிய பிரஜைகள் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் விடுத்த பயண எச்சரிக்கை தொடர்பாக பிரித்தானிய உயர் ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துரையாடியுள்ளார்.

இவ்விடயம் குறித்து கலந்துரையாடிய அமைச்சர்,
வடபகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு ஏற்ப மேற்படி பயண எச்சரிக்கையில் மாற்றம் செய்யுமாறு கோரினார்.
நாட்டில் ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும் ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி எச்சரிக்கையை நியாயப்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் அதிக இராணுவ பிரசன்னம் காணப்படுவதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாகவும் மேற்படி பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நாட்டில் பாலியல் வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கூட்டங்கள் வன்முறைகளாக மாறுவது குறித்தும் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது