siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிப்பு

20.08.2012.ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு நிறைய உள்ளன. ஆனால், ஆண்களுக்கு, காண்டத்தைத் தவிர வேறு கருத்தடை சாதனங்கள் பிரபலமாகவில்லை.

இதற்கிடையே, அமெரிக்க விஞ்ஞானிகள், ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளைக் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு மூலக்கூறுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள, "ஜெக்யூ1' என்ற பெயரிலான இந்த மாத்திரை, எலிகளுக்குக் கொடுத்து பரிசோதிக்கப்பட்டதில் அவை மலட்டுத்தன்மையுடன் காணப்பட்டன.

இது குறித்து, இந்த மாத்திரையை உருவாக்கியுள்ள விஞ்ஞானி ஜேம்ஸ் பிராட்னர் குறிப்பிடுகையில், "இம்மாத்திரையை உட்கொண்டால், விந்தணு உற்பத்தி கணிசமாகக் குறைந்து விடும். இருக்கக்கூடிய விந்தணுக்களின் நகரும் தன்மையும் தடைப்படும். இதனால், கருத்தரிப்பு நடப்பதற்கு வாய்ப்பில்லை. சோதனைக் கட்டத்தில் உள்ள இந்த மாத்திரை, விரைவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்துள்ளார்