siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 25 ஜூலை, 2012

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல முயன்ற 2 பேர் திருமலையிலும், 8 பேர் மன்னாரிலும் கைது

 
புதன்கிழமை, 25 யூலை 2012
திருகோணமலை, சல்லிசம்பல் தீவு கடற்பரப்பு வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குத் செல்ல முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை ஆண் மற்றும் பெண் ஆகியோர் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிவேக கட்டளை 15 என்ஜின் பூட்டப்பட்ட படகு மற்றும் உயிர் பாதுகாப்பு அங்கி 7, என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, படகுமூலம் இந்தியாவுக்குச் சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் இலங்கையர் எட்டுப் பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் அடங்குகின்றனர். இவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அவுஸ்திரேலியா வரும் அகதிகளை கட்டுப்படுத்தக் கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

 
புதன்கிழமை, 25 யூலை 2012
இலங்கையில் இருந்து அகதிகள் வருவதை அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தக் கூடாது என, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அதன் நிறைவேற்று பணிப்பாளர் பில் லின்ச் த மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து அகதிகள் வருகின்றமையை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவை கண்டனத்துக்கு உரியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு அகதிகளுக்கு தடை விதிக்கப்படுவது என்பது, அகதி அந்தஸ்த்து கோருதல் உள்ளிட்ட சர்வதேச உரிமை மீறலாக கணிக்கப்படும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை அகதி அந்தஸ்த்து கோரிய நிலையில் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடுகடத்தப்படுவதும், பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றவர்கள் பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு ஆளாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஆட்கடத்தல் என்பது, சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு முரணானது என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்தர மாணவர்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

 
புதன்கிழமை, 25 யூலை 2012,
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளால் தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு தெரிவித்துள்ளனர்.
முதல்கட்டமாக 150 மாணவர்கள் இந்த முறைபாட்டை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இது தொடர்பில் முறையிட்டுள்ளதாக, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் இந்த பிரச்சினைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என, அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் இணைப்பாளர் சஞ்சிவ பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ்.நகரில் இரண்டு புடவைகள் கடைகள் எரிந்து நாசம் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் நாசம்



 
புதன்கிழமை, 25 யூலை 2012,
யாழ்.நகரிலுள்ள நடைபாதை புடைவைக் கடைகள் இரண்டு இன்று அதிகாலை திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளதால் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. ஆயினும் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
குறித்த கடைகளிலுள்ள மின்னொழுக்கு இவ்விபத்திற்கு காரணமாயிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்ற போதும் இதனை உறுதி செய்ய முடியவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் வர்த்தகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மட்டு. காத்தான்குடி இளைஞர் ஒருவர் சவுதியில் மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்

 
புதன்கிழமை, 25 யூலை 2012,
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞரொருவர் சவூதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி விடுதி வீதி 5ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த பதுர்தீன் முகம்மது நிப்றாஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
இவ் இளைஞர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தார்.
ஜித்தா நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிவந்த இவர், அக் ஹோட்டலின் 5 வது மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் கூறினர்.
சடலம் ஜித்தா நகரிலுள்ள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்

மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

 
25.07.2012.
இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோர் ஏமாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொழில் வாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, சுற்றுலா விசாக்களின் மூலம் இலங்கையர்கள், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. மலேசியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக இரண்டு லட்ச ரூபா வழங்கியதாக 20 இலங்கையர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தொழில் வாய்ப்பு இன்றி நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறித்த இலங்கையர்கள், உயர்ஸ்தானிகராலயத்தில் சரணாகதி அடைந்துள்ளனர்.
எனவே மலேசியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் இலங்கையர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது

சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்புடைய த.தே. கூட்டமைப்பின் வேட்பாளர் கைது

 
புதன்கிழமை, 25 யூலை 2012
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் சட்டவிரேோத ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சுரேஷ்குமார் என்பவரே நேற்றிரவு திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்

சம்பூரில் அணுமின் நிலையம் அமைப்பது குறித்து பாகிஸ்தான் இலங்கையுடன் பேச்சு!– அதிர்ச்சியில் இந்தியா

 
புதன்கிழமை, 25 யூலை 2012,
திருகோணமலை, சம்பூரில் அணுமின் நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து இலங்கையுடன் பாகிஸ்தான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளமையானது, இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா ரூடே செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் சவுத் புளொக்கிற்கு கிடைத்துள்ள இந்தச் செய்தி இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஆதரவுடன், இலங்கையில் தலையீடுகளை அதிகரிக்கும் பாகிஸ்தானின் பாரிய திட்டத்தின் ஒரு பகுதியே இந்தத் தந்திரோபாயமாகும்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா கடந்தவாரம் புதுடெல்லியில் இருந்தார்.
அவர், இலங்கையில் பாகிஸ்தானின் அண்மைய நகர்வுகள் குறித்த விபரங்களை உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
கொழும்புடன் பாதுகாப்பு வர்த்தகத்தை விரிவாக்கவும் பாகிஸ்தான் முனைகிறது.
இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வைத்துக் கொள்வதற்கு, தமிழ்நாட்டில் உள்ள தமது பங்காளிக்கட்சியின் எதிர்ப்பை காங்கிரஸ் கூட்டணி அரசு எதிர்கொள்ளும் நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் சத்தமின்றி இலங்கைக்குள் நுழைந்துள்ளது.
அதேவேளை, பாகிஸ்தானின் உதவியுடன் ரி-55 டாங்குகளின் இயந்திரங்களை மறுசீரமைத்தல், மற்றும் டாங்குகளின் பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளின் சூட்டுக் கட்டுப்பாட்டுக் கருவிகளை நவீனமயப்படுத்துவது குறித்தும் சிறிலங்கா கலந்துரையாடியுள்ளது.
கொழும்புக்கு எந்தவொரு பாதுகாப்பு உதவிகளையோ அல்லது தளபாடங்களையோ வழங்கக் கூடாது என்று சென்னைப் பங்காளிகள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இலங்கையின் பாதுகாப்புத்துறைக்குள் பாகிஸ்தான் காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்த அழுத்தத்தினால் இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு செய்து கொள்ளப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கை எதிராக இந்தியா வாக்களித்தது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்தியா ரூடே மேலும் குறிப்பிட்டுள்ளது

வவுனியா ஹோட்டல் ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

 
புதன்கிழமை, 25 யூலை 2012,
வவுனியாவில் ஹோட்டலொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
தொழிலதிபரான கேதாரலிங்கம் விசாகினி (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

விற்பனையில் சாதனை படைத்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்

25.07.2012.சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான 2 மாதத்தில், 1 கோடிக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. போட்டி நிறைந்த உலகில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான பின்பு, எத்தனையோ ஸ்மார்ட்போன்களும் வெளியாகிவிட்டன.
ஆனாலும் வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வாங்கி வருகின்றனர் என்பது, இந்த ஸ்மார்ட்போனின் புதிய தொழில்நுட்பத்தினையே குறிக்கிறது.
இதனையடுத்து சாம்சங் நிறுவனம் அடுத்ததாக கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
கடந்த மே மாதம் 3ஆம் திகதி லண்டனில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.