siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட 18 வயசு படம்

சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் ஊடகத்தினருக்காக 18 வயசு படம் திரையிடப்பட்டது.
நிக் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள 18 வயசு படத்தை ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார்.
இதில் ஜானி, காயத்திரி, ரோஹிணி, சத்யேந்திரன், மறைந்த எழுத்தாளர் கிருஸ்ணா டாவின்சி, யுவராணி, டொக்டர் சூரி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
சக்தி ஒளிப்பதிவு செய்ய தினேஷ், சார்லஸ் போஸ்கோ இசையமைத்துள்ளனர்.
சண்டைப் பயிற்சியை ராஜசேகர் கவனிக்க திரைப்படத்தை ஆண்டனி தொகுத்து வழங்கியுள்ளார்.
குடும்ப சூழலால் மன நிலை தவறும் இளைஞனின் வாழ்க்கையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் பன்னீர் செல்வம்.
அம்மாவின் பாசத்துக்கும் தோழியின் அன்புக்கும் ஏங்கித் தவிக்கிறார் இளம் நாயகன் ஜானி. காடும், நட்சத்திர வான் வெளியும் தான் சுகமளிக்கும் உறுதியாக ஜானி நம்புகிறார்.
நண்பன் சொன்னதால் தோழி காயத்ரியின் காதல் நெருக்கத்தை ஜானி விரும்புகிறார். அம்மா யுவராணியையும், அவரின் அந்தரங்க நண்பனையும் தீர்த்துக் கட்டுகிறார்.
நண்பன் சத்யேந்திரன் உதவ, தோழி காயத்ரியோடு ஜானி தான் விரும்பிய காட்டுக்கு பயணமாகிறார். ஜானியை வேட்டையாட பொலிஸ் துரத்துகிறது.
மரண வாசலை நோக்கி வேகமாக செல்லும் நாயகன் ஜானியை காப்பாற்ற டொக்டர்கள் கிருஷ்ணா டாவின்சியும் ரோகிணியும் போராடுகிறார்கள்.
பொலிஸின் துப்பாக்கிக்கு ஜானி பலியாகிறாரா? தோழி காயத்ரியின் அன்பு ஜானிக்கு கிடைத்ததா? என்பதை பரபரப்பாக இயக்குனர் பன்னீர் செல்வம் சொல்லியிருக்கிறார்.
சவாலான கதாபாத்திரத்தில் ஜானி மிருகத்தனமான நடிப்பைக் காட்டியிருக்கிறார். சீரியசான காட்சிகளில் காயத்ரி அழுத்தமான நடிப்பைக் காட்ட முயற்சித்துள்ளார்.
தொழில் நுட்ப அளவில் ரசிகர்களை கவரும் வகையில் '18 வயசு' படம் வந்துள்ளது