siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சந்நிதி முருகன் ஆலயத்தில் பறந்தது புலிக்கொடி! இராணுவத்தின் சதியா?: பதற்றத்தில் மக்கள்

BY.rajah.
செவ்வாய்க்கிழமை,  28 ஓகஸ்ட் 2012,
 
சந்நிதி முருகன் ஆலயத்தின் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் ஆலயச் சூழலில் புலிககொடி பறக்கவிட்டிருந்தததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. பூங்கா திருவிழாவான நேற்றைய தினம் ஆலயத்தில் உள்ள தேர் முட்டியிலேயே இவ்வாறு புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.
பெருமளவு பொலிஸாரும் படையினரும் புலானாய்வாளர்களும் சூழ்ந்திருக்கும் இவ்விடத்தில் புலிக்கொடியைப் பறக்க விட்டது. யார்? என்ற சந்தேகம் ஏற்பட்டதோடு, இதனை படையினரே பறக்க விட்டிருக்கலாம் என்னும் சந்தேகம் வெளியிடப்படுகின்றது
குறிப்பாக வலிகாமம் வடக்கு பாதுகாப்பு வலயத்தின் எல்லையை அண்மித்திருப்பதாலும், தொண்டமனாறு துருசு மற்றும் புதிதாக நிர்மானிக்கப்படும் பாலத்திற்கு பாதுப்புக்கு படையினர் நிலை கொண்டுள்ள நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கடும் பாதுகாப்பு மற்றும் கெடுபிடிகளுக்கு மத்தியில் பறக்க விடப்பட்ட கொடியை படையினரும் பொலிஸாரும் புடைசூழ வந்து எடுத்துச் சென்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் குழப்பபும் ஏற்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்