siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 25 ஜூலை, 2012

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின்: ஜேர்மன் நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை

 
புதன்கிழமை, 25 யூலை 2012ஸ்பெயின் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை பூர்த்தி செய்வது குறித்து, ஜேர்மன் நிதியமைச்சர், ஸ்பெயின் நாட்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.
யூரோ நாணயத்தை பயன்படுத்தும் இந்த நாடுகளை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க, உலக வங்கியும், ஐரோப்பிய வங்கியும், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கடுமையான சிக்கன நடவடிக்கைகளான மானியங்கள் ரத்து, சம்பள குறைப்பு, ஆட் குறைப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு வங்கிகளில், போதுமான நிதி இல்லாததால் சில வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் இந்த நெருக்கடியை சமாளிக்க 300 பில்லியன் யூரோ தேவைப்படுகிறது.
இதனையடுத்து பொருளாதார மீட்பு நிதியை ஸ்பெயினுக்கு வழங்குவது குறித்து, ஜேர்மன் நிதியமைச்சர் உல்பகேங்க், ஸ்பெயின் நிதியமைச்சர் லூயிஸ் டி குயின்டோசை நேற்று சந்தித்து பேசினார்.
ஸ்பெயின் நாடு கடந்த 10 ஆண்டுகளில் வாங்கியுள்ள கடனுக்கான வட்டி 7.59 சதவீதம் அதிகரித்துள்ளது. மேட்ரிட் நகர பங்கு சந்தை 5 சதவீதம் குறைந்துள்ளது.
நாளுக்கு நாள் நிலைமை மோசமாவதால் உலக வங்கி, ஐரோப்பிய வங்கி உள்ளிட்டவை விதிக்கும் நிர்பந்தத்தை ஏற்று பொருளாதார மீட்பு நிதியை பெற ஸ்பெயின் முன்வந்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக