This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
வியாழன், 19 ஜூலை, 2012
மைக்ரோசாப்டின் நவீன Office 2013 இவ்வளவும் சாத்தியம் - வீடியோ தொகுப்பு
யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
| ||||||||
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, உயிரிழந்தவரும் வே.அழகுராஜா என்பவரும் மொட்டையால் வயல் பிரதேசத்தில் வயல் வேலை முடிந்து இருவரும் நேற்று காலை வீடு நோக்கி வர ஆயத்தமான போது மூன்று யானைகள் அவர்களது வேளாண்மையை நோக்கி வந்துள்ளன. இருவரும் சேர்ந்து மூன்று யானைகளையும் விரட்டி குளக்கட்டுக்கு அப்பால் விட்டு விட்டு திரும்பி வரும் போது அதில் ஒரு யானை இருவரையும் துரத்தி வர அழகுராஜா என்பவர் வேளாண்மைக்குள் கீழே விழுந்துள்ளார். அவருக்கு முன்னால் ஓடி சென்ற கணேசசிங்கத்தை யானை துரத்தி சென்று அடித்துள்ளது. அவ்விடத்தில் இருந்து யானை சுமார் 20 நிமிடங்களுக்கு பின்பே சென்றுள்ளது. இதனையடுத்து கீழே விழுந்து கிடந்த அழகுராஜா எழும்பி அருகில் வயல் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் சொல்லி அவர்களையும் கூட்டி வந்து பார்த்த போது கணேசசிங்கம் உயிர் இழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து உயிர் இழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது. உயிர் இழந்தவர் மொட்டையான்வெளி வயல் பிரதேசத்துக்குரிய நீர் முகவராக (அதிகாரி) கடமையாற்றி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று கோளாவில் 3 ஆம் பிரிவை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே உயிர் இழந்தவராவார். பிரேத பரிசோதனையின் பின்பே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நேற்று பிற்பகல் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார் |
வரலாற்று சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி தேர்திருவிழா(படங்கள்)
18.07.2012
இலங்கையின் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்று பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றது.
நேற்றைய தினம் காலை 8 மணிக்கு நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து உள் வீதிஉலா வந்த முருகப்பெருமான் 9.30 மணியளவில் தேரில் ஆரோகணித்தார்.
தேர்த் திருவிழாவில் இம்முறை வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)