இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் சமீபகாலமாக மோசமாக ஆடிவருகிறார். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்து தற்போது சொந்த மண்ணில் நடந்துவரும் டெஸ்ட் தொடரிலும் சொதப்பி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக தற்போது நடந்து வரும் டெஸ்டில் சச்சின் 7 இன்னிங்சில் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தொடர்ச்சியாக மோசமாக ஆடிவருவதால் நாக்பூர் டெஸ்டுடன் சச்சின் ஓய்வுபெற வேண்டுமென முன்னாள் வீரர்கள் பலரும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே சச்சின் கடந்த 28-ந் தேதி தனது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பிசிசிஐ நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் போட்டி நடைபெறும் நாக்பூருக்கு சச்சினின் மனைவி அஞ்சலி நேற்று திடீரென வருகை தந்துள்ளார். இதனால் சச்சின் ஓய்வு முடிவை அறிவிக்ககூடும் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக அஞ்சலி கிரிக்கெட் போட்டிகளை மைதானத்திற்கு நேரில் சென்று பார்ப்பது கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் 50வது சதத்தை அடித்தபோது கூட அதனை நேரில் காண அஞ்சலி செல்லவில்லை. தற்போது அவர் சென்றுள்ளதால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது