
ஈராக்கில் தொடர்ச்சியாக 12 இடங்களில் குண்டு வெடித்ததில் 47க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.ஈராக்கில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே உள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஷியா பிரிவு மக்கள் கூடும் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து கார் குண்டுகள் வெடித்தன.
தொடர்ந்து வெடித்த 12 கார் குண்டுகளால், 47 பேர் உடல் சிதறி பலியாயினர், பலர் படுகாயமடைந்தனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த வீடுகள், கடைகள் முற்றிலுமாக...