siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

போராடும் பெண் சிங்கம்

ஆண் சிங்கத்திடம் இருந்து மனிதனை காப்பாற்ற போராடும் பெண் சிங்கம்

 22 July 2012,

அகாலமரணம் செல்வி அனுர்யா இலட்சுமிகாந்தன்

செல்வி அனுர்யா இலட்சுமிகாந்தன்
(Grade 11 மாணவி SATEC @ W.A Porter)
அன்னை மடியில் : 29 டிசெம்பர் 1995 — ஆண்டவன் அடியில் : 14 யூலை 2012


கனடா Scarborough வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அனுர்யா இலட்சுமிகாந்தன் அவர்கள் 14-07-2012 சனிக்கிழமை அன்று சிங்கப்பூரில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, மீனாட்சிப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
கரணவாய் மேற்கு சோழங்கனைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன்(காந்தன்), சிறுப்பிட்டி தெற்கை சேர்ந்த சந்திரலீலா(சந்திரா) தம்பதியினரின் அன்பு மகளும்,
அனிசன் அவர்களின் ஆசைத் தங்கையும்,
கமலாதேவி(இலங்கை), கங்காதரன்(இலங்கை), காலஞ்சென்ற கணேசகுமார், மஞ்சுளேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகளும்,
இராதாகாந்தன்(இலங்கை), வனிதா(இலங்கை), பரமேஸ்வரி(சுவிஸ்), ஜெயலோகராஜா(சுவிஸ்), மகேஸ்வரி(இலங்கை), பரமேஸ்வரன்(இலங்கை), மாசிலாமணி(சுவிஸ்), கதிர்காமநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
குமரதாஸ்(இலங்கை), சதீஸ்வரதாஸ்(இலங்கை), சாயிதேவதாஸ்(இலங்கை), கஜானனி(இலங்கை), அதீசன்(ஜேர்மனி), வினுசன்(ஜேர்மனி), விமல்(இலங்கை), ஜெயமுகன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கானப்பிரியா(இலங்கை), யனூஜா(சுவிஸ்), அசோயன்(சுவிஸ்), அபிரன்(சுவிஸ்), அஜீர்(சுவிஸ்), ஜீவிதா(இலங்கை), கார்த்திகா(இலங்கை) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
14 Wanwart Dr,
Scarborough, Ontario,
M1G 1G7, Canada
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 20/07/2012, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre, 3280 Sheppard Avenue East, Toronto, ON M1T 3K3
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/07/2012, 08:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Highland Funeral Home & Cremation Centre, 3280 Sheppard Avenue East, Toronto, ON M1T 3K3
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/07/2012, 12:00 பி.ப
முகவரி: Bowmanville Crematorium, 1200 Haines, Bowmanville, ON L1C 3K5 (Liberty Street & Baseline Road)
தொடர்புகளுக்கு
இலட்சுமிகாந்தன் — கனடா
தொலைபேசி: +14164312515
செல்லிடப்பேசி: +14168457103
பரமேஸ்வரன் மகேஸ்வரி(சிறுப்பிட்டி) — இலங்கை
தொலைபேசி: +94212230503
கங்காதரன் கமலாதேவி — இலங்கை
தொலைபேசி: +94212226891
இராதாகாந்தன் வனிதா(கொழும்பு) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777563678
ஜெயலோகரஜா பரமேஸ்வரி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41628245345
கணேசகுமார் மஞ்சுளேஸ்வரி — ஜெர்மனி
தொலைபேசி: +496341144619
நாதன் பாப்பா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +418715569
பரமேஸ்வரன் மகேஸ்வரி — இலங்கைதொலைபேசி
+94213219279

ஸ்நுபா சுழியோட்டத்தை திருகோணமலை சாயா புளூ வரை கொண்டுவந்துள்ள மரகூஸ்

22.07.2012.விளையாட்டுகளில் சாதனை படைப்பதில் முன்னோடிகளான இலங்கை ‘மங்கூஸ் அட்வென் சர்ஸ்' அமைப்பினர் ஸ்நூபாவை திருகோணமலைக்கு அறிமுகம் செய்து கிழக்கின் சுற்றுலாப் பயணிகளுக்கு பரபரப்பூட்டும் புதிய அனுபவமொன்றினை தொடக்கி வைத்துள்ளனர். Snorlding இதற்கும் ஸ்கியூபா சுழியோட்டத்திற்குமிடையே குறுக்குத் தாவல் விளையாட்டானது கிழக்கின் கரையோரத்தில் கடலில் வாழும் பல்வகை உயிரினங்களை ஆய்வு செய்வதற்கான இலகுவானதும் பாதுகாப்பானதுமான ஒரு வழியாகும்.

மேலும், மிகவும் ஆழமான நீரடிப்பு பகுதியில் சுழியோடல் சான்றிதழ் இல்லாத நிலையிலும் நீச்சல் காரர் நீரடிப்பகுதியை சென்று பார்த்து அனுபவிப்பதற்கு ஒரு நல்வாய்ப்பினை ஸ்நுபா வழங்குகிறது. சரியான முறையில் மேற்கொள்ளப்படும் ஒரு ஸ்நூபா சுழியோட்டமானது பெருமளவு நீர்வாழ் உயிரினங்களை தரிசிக்கத்தக்கதான சுமார் ஆறு மீற்றர்கள் வரையான ஆழத்திற்கு செல்வதற்கு துணைபுரிகிறது.

“திருகோணமலை, புறாத்தீவு (Pigeon Island) இடங்கள் பெருந்தொகையான, பல வர்ணங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதனால் நீச்சல் காரர்கள் திகைப்பூட்டும் பல அனுபவங்களைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறை வளர்ச்சி கண்டுவரும் இவ் வேளையில் மங்கூஸ் அட்வெஞ்சர்ஸ் அமைப்பு உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஸ்நுபா போன்ற பரபரப்பூட்டும் செயற்பாடுகளை ஏற்படுத்தி வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது." இவ்வாறு தெரிவிக்கிறார் ஸ்நுபா ஏற்பாட்டாளரான மங்கூஸ் அதிபர் நிஷான் சில்வா.

ஸ்நுபா ஆனது ஸ்கியூபா சுழியோட்டத் தினையும் Snorkling ஐயும் இனைத்து செயற்படுத்துவதால் நீச்சல் தெரிந்திருக்கும் எவருக்கும் இது மிகவும் இலகுவானதும் பாதுகாப்பானதும் ஆகும். ஸ்நுபா விளையாட்டு ஸ்கியூபா விளையாட்டில் பயன்படும் சாதனங்கள் பலவற்றை பயன்படுத்தும் அதே வேளை ஒட்சிசன் தாங்கியை மட்டும் தனியாக மிதக்கவிடுகிறது. ஸ்கியூபாவில் அதனை முதுகுப்புறத்தில் வைப்பதுண்டு. ஒரு ரியூப் மூலமும் சீராக்கி மூலமும் நீச்சல் காரருடன் இது இணைக்கப்பட்டிருக்கும். இதனை பொருத்தி அறிமுகப் படுத்தியும், செயற்படுத்தியும் 15 நிமிடங்களின் பின்னரேயே இவர்கள் நீருக்கடியில் செல்வதற்கு விடப்படுகின்றார்கள்.

மங்கூஸ் அட்வெஞ்சர்ஸ் அமைப்பே இவ்வாண்டின் தொடக்கத்தில் ஸ்நுபாவை ஹிக்கடுவவிலுள்ள Chaya Tranz பகுதியில் தொடக்கி வைத்ததன் மூலம் தென்னாசிய பிராந்தியத்திற்கே அறிமுகம் செய்துள்ளது. இலங்கையை வீரதர விளையாட்டுக்களின் ஒரு மையமாக பிரபலப்படுத்தும் ஒரு நோக்கில் இதனை இப்பொழுது திருகோணமலைக்கு விரிவாக்கியுள்ளது.

“இலங்கை வீரவிளையாட்டுக்கள் செழித்து வளர்வதற்கான வாய்ப்புகள், பரப்பெல்லை, சுவாத்தியம் என்பனவற்றை கொண்டுள்ளது. கடல், தரை, வான் சார்ந்த பல்வெறு விளையாட்டு வகைகளை அறிமுகம் செய்து இலங்கையை மென்மேலும் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் ஒரு நாடாக மாற்றுவதை நாம் நோக்கான கொண்டுள்ளோம். விளையாட்டு வகைகள் பலவற்றை ஏற்படுத்தித்தருவதனால் பயணிகள் அதிககாலம் இங்கு தங்கியிருப்பார்". இவ்வாறு அவர் தெரிவிக்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கு முன் ஸ்நுபா சுழியோட்ட விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து உலகின் பல பாகங்களிலிருமிருந்து சுமார் ஐந்து மில்லியன் பேர்கள் இங்கு வந்து ஸ்நுபா விளையாட்டுகளில் பங்குபற்றியுள்ளனர். ஆயினும் இது தொடர்பில் மோசமான ஏதேனும் காயங்கள் ஏற்பட்டதாக இது வரை முறைப்பாடுகள் ஏதுமில்லை. இதனை இலகுவாக செயற்படுத்த முடிவதும் பாதுகாப்பு தொடர்பில் நம்பிக்கையூட்டும் முன் வரலாறும் ஸ்நுபாவை மிகுவளர்ச்சி கண்டு வரும் நீர் விளையாட்டாக முன்நிறுத்துகிறது.

கண்டி சிறை முஸ்லிம் கைதிகளுக்கு கஞ்சி, பேரீச்சம்பழம் இலவசமாக வழங்கப்படும்

22.07.2012 கண்டியிலுள்ள சிறைச்சாலைகளில் நோன்பு நோற்கும் முஸ்லிம் சிறைக்கைதிகளுக்கு நோன்பு திறப்பதற்காக கஞ்சி, பேரீச்சபழம் என்பனவற்றை வழங்க சிறைச்சாலைகளுக்கு அருகிலுள்ள பள்ளி வாசல்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

கடந்த வருடங்களைப் போலவே இவ்வருடமும் கஞ்சி, பேரீச்சம் பழங்களை வழங்க பள்ளி வாசல்களின் நிர்வாக சபைகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிருவாகச் சபையினர் தெரிவித்தனர்.

குறிப்பாக கண்டி போகம்பறை சிறைச்சாலையிலுள்ள முஸ்லிம் கைதிகளுக்கு கண்டி மத்திய சந்தைக் கருகிலுள்ள பள்ளிவாசல் இராஜ வீதியிலுள்ள சிறைச்சாலை முஸ்லிம் கைதிகளுக்கு இராஜவீதி தைக்கா பள்ளி வாசலுடனும் பல்லேகல திறந்தவெளிச் சிறைச்சாலை முஸ்லிம் கைதிகளுக்கு தென்னக்கும்புர பள்ளிவாசலும் இவ்வாறு நோன்பு திறப்பதற்கான கஞ்சி, பேரீச்சம்பழம் என்பனவற்றை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

வீடியோ கமராவில் மாட்டிய உண்மையான வீடியோ

22.07.2012.அன்றாடம் பல விபத்துகள் நடப்பது நமக்குத் தெரியும். படித்திருக்கிறோம். ஆனால் சாலையில் செல்லும்போது வாகனம் வந்து மோதும் காட்சியை மிகவும் அருமையாகவே காணமுடியும். இதுபோல ஒரு விடையத்தையே நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். நியூயோர்க்கில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு வீதியில் சென்றவேளை படுவேகமாக வந்த கார் ஒன்று 19 வயது இளைஞன் ஒருவர் மீது அப்படியே மோதி தூக்கி எறிந்துள்ளது. ஆனால் அவ்வாகனத்தை செலுத்தியவர் அதனை நிறுத்தாமலே சென்றுவிட்டார். CCTV கமராவில் இவை பதிவாகியுள்ளது. ஆனால் அதிஷ்டவசமாக இந்த இளைஞர் சிறிய காயங்களுடன் தப்பித்துவிட்டார். காணொளியைப் பாருங்கள்..