siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 30 ஜூலை, 2012

மெய் சிலிர்க்கிறது தோழி.. - ஒரு ஈழத்தமிழன்

30.07.2012சட்டம் சட்டம் என இக்குழந்தை உச்சரித்த இச்சட்டம் எனும் வார்த்தை காதில் தேனாய் பாய்கிறது. வாழ்க நீவிர் பல்லாண்டு                                     ...

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களைப்;; பார்த்த நால்வர் கைது

 _ 30.07.2012.இளவயது இளைஞர்கள் நான்குபேர் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமைச்சோந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.குறிப்பி;ட்ட முகாமில் உள்ள பொது மண்டபத்தில் மாலை வேளையில் இவர்கள் குறிப்பி;ட்ட ஆபாசப்படங்களைக் கையடக்கத் தொலைபேசியில் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்கள். ரோந்துக்...

இலங்கை அணியில் சங்கக்கார நீக்கம்

30.07.2012.இந்தியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் அசோக் டிண்டா வீசிய பந்து வீச்சில் இலங்கை அணியன் வீரர் சங்கக்காரவின் கையில் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவருக்கு ஸ்கேன் பரிசோதனை எடுத்து பார்த்த போது, விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் இந்த தொடரில் எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். அவர் 4 முதல் 6 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில்...

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 25 பேர் பலி

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 25 பேர் பலி _ 30.07.2012.புது டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நெல்லூர் அருகே வந்த போது ரயிலின் ஒரு பெட்டியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25 பயணிகள் பலியாயினர்.புது டில்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 10.30க்குப் புறப்பட்டு இன்று காலை சென்னைக்கு வந்து சேரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்இ இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஆந்திர மாநிலம்...

பெண்கள் உதைப்பந்தாட்ட லீக் சுற்று: பிரேசில், ஜப்பான், இங்கிலாந்து அணிகள் வெற்றி

30.07.2012.லண்டன் ஒலிம்பிக் போட்டி பெண்கள் உதைப்பந்தாட்ட லீக் சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி, கெமரூன் அணியை வீழ்த்தியது. லண்டன் ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் உதைப்பந்தாட்ட போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. ஈ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் பிரேசில் அணி, கெமரூன் அணியை சந்தித்தது. இதில் சிறப்பாக விளையாடிய பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில்,...

இலங்கையரது பயணங்களின் போக்கினை மீள் வரையறை செய்யும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ள Expo Rail

_ 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் Expo Rail ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அச்சேவையானது இலங்கையின் ரயில் பயணங்களின் போக்கினை மீள் வரையறை செய்யும் முயற்சியில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது பதுளை, கண்டி, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய நான்கு இடங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ள Expo Rail சேவையானது கடந்த எட்டு மாதங்களில் மொத்தமாக 25,000 இற்கும் மேற்பட்டோருக்கு தனது சொகுசு ரயில் பெட்டிகளில் பயண...

கட்டாரில் அந்நியத் தொழிலாளர்கள் நடத்தும் சோக நாடகம்

_ 30.07.2012.டோஹா விமான நிலையத்தின் வரவுப் பகுதியில் காத்துக்கொண்டிருந்தேன். மத்தியான நேரம். நிறைய விமானங்கள் இறங்கியிருந்தன. மக்கள் அலையலையாக வெளியே வந்து கொண்டிருந்தனர். பொதுவாக அரபு நாட்டினரும் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுமே பயணிகள். இதில் ஏறத்தாழ எழுபத்தைந்து வீதத்தினர் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலானோர் சாதாரண திறனிலாத் தொழிலாளர்கள்தாம். வண்டி வண்டியாக பெட்டிகளையும் விலையுயர்ந்த பொருட்களையும்...

செலான் வங்கியின் 'பரிசு மேல் பரிசு' வெகுமதி சீட்டிழுப்பின் ஐந்தாவது கோடீஸ்வரராக நுகேகொடை வாடிக்கையாளர் தெரிவு

செலான் வங்கியின் 'பரிசு மேல் பரிசு' வெகுமதி சீட்டிழுப்பின் ஐந்தாவது கோடீஸ்வரராக நுகேகொடை வாடிக்கையாளர் தெரிவு _ 30.07.2012.செலான் வங்கியின் 'பரிசு மேல் பரிசு' (Seylan Thegi Pita Thegi) வெகுமதி வழங்கல் திட்டத்தின் ஐந்தாவது சீட்டிழுப்பு அண்மையில் இடம்பெற்றபோது, ரூபா 01 மில்லியன் பணப் பரிசினை வென்றெடுக்கும் அதிர்ஷ்டசாலி வெற்றியாளராக நுகேகொடை கிளையின் வாடிக்கையாளரான திரு. என்.எஸ்.கே. ஆராச்சிகே தெரிவு செய்யப்பட்டார்....

பகலில் தூங்குபவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

, 30. யூலை 2012, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. அதே சமயம் பகலில் தூங்குபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. உடல் பருமனாக இருப்பவர்கள் எளிதில் சோர்வடைவதோடு பகலில் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் 20 சதவிகித இளைஞர்கள் பகல் நேர தூக்கத்தை விரும்புகின்றனராம். இதுதொடர்பாக பகலில் தூங்கும்...

கணக்குகளுக்கு மிக எளிதான வகையில் தீர்வுகளை காண

 திங்கட்கிழமை, 30 யூலை 2012, புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதில் கூகுளுக்கு நிகர் கூகுள் தான் என்றே சொல்ல வேண்டும். தற்போது கூகுள் பயனாளர்களுக்காக கால்குலேட்டர்(Calculator) வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கால்குலேட்டரை கூகுளின் முகப்பு பக்கத்தில் பார்க்க முடியாது. ஆனால் தேடல் பக்கத்தில் எளிதான கணக்கு(For Ex: 12+34) ஒன்றை செய்து, Search என்று கிளிக் செய்தால் கால்குலேட்டர் வருகிறது. 34 வகையான பட்டன்களை கொண்ட இந்த கால்குலேட்டரில்...

Advanced SystemCare v6.1 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

 திங்கட்கிழமை, 30 யூலை 2012, ஒவ்வொருவரின் கணணியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருள்களில் ஒன்று தான் Advanced SystemCare v6.1. இந்த மென்பொருள் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், Disk Defragment, Malware Removal, Registry Fix போன்ற ஏராளமான வசதிகள் உள்ளது. தற்போது இந்த மென்பொருளில் சில மாற்றங்களை செய்து புதிய பதிப்பாக Advanced SystemCare v6.1 என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளனர் iobit நிறுவனத்தினர். இந்த...

வாழை இலையின் மருத்துவ குணங்கள்

 திங்கட்கிழமை, 30 யூலை 2012, முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தை நாம் சாப்பிட்டால் உடலின் உட்பகுதிக்கு சிறந்தது. ஆனால் அதன் இலைகளை உடலின் வெளிப்புறத்திற்கு, அதாவது சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் சருமத்திற்கு மெருகேற்ற பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த அழகுப்பொருளும் கூட. 1. அழகை கெடுக்கும் வகையில், சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள்...

இயற்கையாகவே எலும்புகளை உருவாக்கலாம்: ஆராய்ச்சியில் தகவல்

30யூலை 2012, மனிதனின் உடலில் எலும்புகள் சேதமடைந்தால் அதற்கு பதிலாக செயற்கையான பிளேட்டுகளை பொருத்தி சீர்செய்யும் மருத்துவ முறை தற்போது உள்ளது. இதற்கு பதிலாக இயற்கையாகவே எலும்பை உருவாக்கி சிகிச்சை அளிக்கலாம் என்று அயர்லாந்தில் உள்ள றொயல் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மரபணுக்கள் மூலமாக, அதாவது ஒரு வித புரோட்டீன் மூலமாக எலும்பு திசுவை உருவாக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலமாக எந்த விதமான எலும்பையும்...