siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில் வாழணும்

02.09.2012.BY.rajah.

 

 
பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோடி ஒன்று வழமைக்கு மாறாக நீர்தாங்கியின் வடிவில் வீடு ஒன்றினை மிகவும் நேர்த்தியான முறையில் அமைத்துள்ளனர்.
தரை மட்டத்திலிருந்து 21 மீட்டர்கள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந் நீர்த்தாங்கி வீடானது ஜேர்மனியின் கிழக்குப்பகுதியில் காணப்படும் எனும் Yoahimshtal பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது.








"போர்டோ' அணு சக்தி நிலையத்தின் உற்பத்தி ஆற்றலை ஈரான் இரு மடங்காக்கியுள்ளது

01.'09.2012.BYrajah.ஈரானானது தனது போர்டோ அணுசக்தி தளத்திலான உற்பத்தி ஆற்றலை இருமடங்காக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் பிந்திய காலாண்டு அறிக்கையிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈரானின் பார்சின் இராணுவத்தளத்தை தனது முகவர் நிலையம் பரிசோதிப்பதற்கு அந்நாடு குறிப்பிடத்தக்க அளவில் தடையை ஏற்படுத்தியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் 2010ஆம் ஆண்டிலிருந்து 189 கிலோ கிராம் நிறையுடைய உயர் மட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தனது அணு சக்தி நிகழ்ச்சித் திட்டம் இராணுவ நோக்கம் எதனையும் கொண்டிருக்கவில்லை என ஈரான் வலியுறுத்தி வருகிறது.

புனித நகரான குவோமுக்கு அருகிலுள்ள மனையின் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள பொர்டோ அணுசக்தி நிலையத்திலுள்ள யுரேனிய செறிவூட்டல் உபகரணங்களின் தொகையானது கடந்த மே மாதத்திலான 1064இலிருந்து 2140ஆக இரு மடங்கு தொகைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்தது.

மேற்படி அணுசக்தி தளத்தில் யுரேனியம் 27 சதவீதத்திற்கு செறிவூட்டப்படுவதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி முகவர் நிலையம் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த அணு சக்தி தளத்திலுள்ள புதிய யுரேனிய செறிவூட்டல் உபகரணங்கள் இதுவரை செயற்படுத்தப்படாத போதும் கவலைக்குரியவையாக உள்ளதாக கூறப்படுகிறது

ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டிற்கு எச்சரிக்கை

02.09.2012.BYrajah.
சுவிட்சர்லாந்தில் பனிக்காலத்திற்கான வானிலை எச்சரிக்கையை தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்ப காற்றின் அளவு அதிக அளவில் வீசியது. இந்த வாரம் முதல் பனியும், குளிர்காற்றும் வீசத்தொடங்கியுள்ளது. 60 செ.மீ. முதல் ஒரு மீற்றர் வரையிலான பனிப்பொழிவு ஆல்ப்ஸின் வடபகுதியில் பெய்யக்கூடம் என சுவிஸ் ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
வலாய்ஸ், திசினோ, கிராபூண்டென் ஆகிய மாநிலங்களில் 30 செ.மீ உயரத்திற்குப் பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளில் உச்சிப்பனிச் சறுக்கு விளையாட்டுக்கு எவரும் போக வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆல்ப்ஸ் மற்றும் ஆல்ப்பைன் வடக்குச் சமவெளியில் 2.5 முதல் 3 டிகிரி வரை வெப்பம் உயரக்கூடும்.
திசினோ, வலாய்ஸ் மாநிலங்களின் மலைப்பகுதியில் 35 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கலாம் என சுவிஸ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது

மாணவர்களுக்கு எயிட்ஸ் கிருமியை புகுத்திய பாட்டு வாத்தியார்

02.09.2012.BY.rajah.
சுவிஸில் பாட்டு வாத்தியார் ஒருவர், 16 பேருக்கு எயிட்ஸ் நோய் கிருமியை(HIV) செலுத்தியமைக்காக கைது செய்யப்பட்டார். தன்னை அக்குப்பஞ்சர் டொக்டர் என அறிமுகப்படுத்திக் கொண்ட இவர், மற்றவர்களுக்கு ஊசி போடுவதன் மூலமாக அவர்களது மூன்றாவது கண்ணைத்(அகக்கண்ணை) திறப்பதாக கூறியிருக்கிறார்.
51 வயதாகும் இந்த பாட்டு வாத்தியார் மக்களை கவரும் வகையில் பேசும் திறன் கொண்டவர்.
ஆனால் இவர் தொடக்கத்தில் HIV பாதிப்பு இல்லாமலே இருந்துள்ளார். பின்னர் சிலர் மூலமாக தனக்குள் HIV கிருமியை செலுத்தியுள்ளார்.
இதன் பிறகே தன்னுடைய மாணவர்களுக்கு HIV கிருமியை செலுத்தினார்.
இவரால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த 2004ம் ஆண்டு பெர்னில் உள்ள இன்செல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இந்த உண்மையை தெரிவித்தார்.
இவரைப்போல வேறு இரண்டு பேரும் தங்களுக்கு இந்த பாட்டு வாத்தியார் மூலமாக HIV நோய்த் தாக்குதல் ஏற்பட்டிருக்கும் என்றனர்.
இது வரை 18 பேருக்கு இவ்வாறு HIV நோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரித்து வருகின்றனர்

கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியின் காணியை இராணுவத்தினரிடம் ஒப்படைக்க அதிகாரிகள் முயற்சி

02.09.2012.BY.rajah.கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆனைவிழுந்தான் காணியை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பதற்கு சில அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொழில் வாய்ப்பு ஏதுமின்றி இருந்த பெரும் எண்ணிக்கையான இளைஞர், யுவதிகளுக்கு தொழில்திறனை விருத்தி செய்யும் நோக்குடன் பத்து வருடங்களுக்கு முன் கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரி உருவாக்கப்பட்டது. அங்கு ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில்சார் கற்கை நெறியைப் பெற்றிருந்தனர்.
இந்த கல்லூரிக்குரிய ஆனைவிழுந்தானில் உள்ள 3 ஏக்கர் காணி மற்றும் ஊனமுற்றோர் புனர்வாழ்வுச் சங்கத்துக்குரிய காணிகளை ஏற்கனவே இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது. அங்கு 652 ஆவது படைப் பிரிவு முகாமிட்டுள்ளது. அந்தக் காணிகளைத் தான் இராணுவம் கையகப்படுத்த முயற்சிக்கிறது.
அதற்கான கோரிக்கையையும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. பிரதேச காணிப் பயன்பாட்டுக் கலந்துரையாடல்களிலும் அதனை வலியுறுத்தி வந்துள்ளது.
கடந்த மே 25 ஆம் திகதி கரைச்சிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற காணிப் பயன்பாட்டுக் குழுக்கூட்டத்திலும் இராணுவத்தின் இந்தக் கோரிக்கையை பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பிரதேச சபைத் தலைவர் உட்பட அனைவரும் (90 வீதமானோர்) ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அடியோடு மறுத்தும் விட்டனர்.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் 6 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த காணியைஇ இராணுவத்துக்கு இரகசியமான முறையில் வழங்குவதற்கு அதன் தற்போதைய நிர்வாகத்தின் முக்கிய பிரதிநிதிகள் முனைந்துள்ளனர் என்றும் இந்தக் காணிக்கு மாற்றீடாக ஜெயபுரம் வீதியில் உள்ள பொருத்தமற்ற காணி ஒன்றில் நூறு அடி நீளமான அரைநிரந்தரக் கட்டடம் ஒன்றை அமைத்துத் தொழில் நுட்பக் கல்லூரிக்கு தருவதாக இராணுவம் கூறியுள்ளது என்றும் அதன் அடிப்படையில் குறித்த காணியை அவர்களுக்குத் தாரை வார்க்கத் தயாராகி வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் இயக்குநர் சபை ஏனைய நிர்வாக அலகுகள் என்பவற்றின் அனுமதியின்றி ஒரு சில அடிவருடிகளின் செல்வாக்குடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதேவேளை, மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான ஆனைவிழுந்தான் கிராமத்தில், ஒரு உப தொழில்நுட்பக் கூடத்தை அமைத்து அங்கு கடந்த காலங்களில் தொழில் கற்கை நெறிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்தக் கூடம் 2009 ஆம் ஆண்டின் பின்னர் செயலிழந்துவிட்டது

வடக்கு கிழக்கு இணைந்தால் தமிழர் தனித்துவம் பேணப்படும்; மட்டக்களப்பில் சுரேஷ் எம்.பி.

02.09.2012.BY.rajah.வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுமாக இருந்தால் தமிழ் மக்கள் தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கக் கூடிய நிலை ஏற்படும். அத்துடன் தமிழர்களது தனித்துவமும் பாதுகாக்கப்படும்.
அதன் காரணமாகவே வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகிறது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஒரு நாட்டில் மக்களின் பலத்துடன் தான் ஓர் அரசு தெரிவு செய்யப்பட்டு, அதற்கென அமைச்சரவையும் உருவாக்கப்படுன்றது. அந்த அமைச்சரவைக்குத்தான் அதிகாரங்கள் போய்ச்சேரும். மாகாணத்தில் முதலமைச்சரும் அங்கிருக்கும் ஏனைய அமைச்சர்களும்தான் தமக்கிருக்கும் அதிகாரங்களைக் கொண்டு நிர்வாகத்தை நடத்துவார்கள். இதுதான் வழிமுறை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும். அப்படி ஆட்சியமைத்தால் அபிவிருத்தியே எமது நோக்கமாக இருக்கும். இருக்கக்கூடிய அதிகாரங்களுக்குள் மக்களுக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதனைச் செய்தே தீருவோம். அதிகாரங்களை மேலும் மேலும் பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்றத்திலும் வீதிகளில் இறங்கியும் போராடுவோம்.
வடக்கும் கிழக்கும் இணைக் கப்பட்டால் தமிழ் பே_ம் மக்கள் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிக்கக்கூடிய சூழல் ஏற்படும். அத்துடன் அவர்களுடைய தனித்துவம் பாதுகாக்கப்படும். அதனால் தான் நாங்கள் ஒரே நிர்வாக அரசியல் அலகாக வடக்கும் கிழக்கும் இணைக்கப்படவேண்டும் என்று கேட்கின்றோம்.
இலங்கை அரசு ஒன்பது மாகாணங்களை ஏழு மாகாணங்களாகக் குறைக்க இருக்கிறது. அந்த ஏழு மாகாணங்களின் அடிப்படை என்னவென்றால் கடலுடன் தொடர்பு இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் வடமத்திய மாகாணத்திற்கு கடலுடன் தொடர்பு இல்லை.
வெலிஓயாவுடன் அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற மாவட்டங்களை இணைக்கும் போது வடக்குக்கும் கிழக்குக்குமான நிலத் தொடர்பு துண்டிக்கப்படும். இந்த நிலை ஏற்படும்போது வடக்கு வேறு, கிழக்கு வேறு என்ற நிலை உருவாகும்.
மத்திய மாகாணத்துக்கு ஒரு கடல் தொடர்பு கிடையாது. திருகோணமலை மாவட்டத்தை மத்திய மாகாணத்துடன் இணைப்பது என்ற திட்டமும் அரசாங்க நிகழ்ச்சி நிரலில் இருக்கின்ற விடயமாகும். திருகோணமலை மாவட்டத்தை கபளீகரம் செய்துவிட இவ்வளவு மோ\மான கபடமான நிகழ்ச்சி நிரலை இந்த அரசு கொண்டு இயங்குகின்ற பொழுது தமிழ் மக்கள் இவர்களுடன் இணைந்திருக்க முடியாது.
யார் எவ்வாறு தலைகீழாக நின்றாலும் 17ஆசனங்கள் பெற்று நிச்சயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும். இத்துடன் நிறுத்திவிடாது முழுமையான தீர்வை நோக்கிய எமது போராட்டம் தொடர்ந்து நடக்கும். அதற்கு மாகாணசபையும் கைகொடுக்கும் என்றார்.

மிகப் பெரிய ஜெனரேற்றர் சுன்னாகம் வந்து சேர்ந்தது

02.09.2012.BY.rajah.இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் மின் நிலையத்துக்குப் பெரிய ஜெனரேற்றர் ஒன்று எடுத்துவரப்பட்டுள்ளது. கப்பல் மூலம் எடுத்து வரப்பட்ட இந்த ஜெனரேற்றர் காங்கேசன் துறைமுகத்தில் இறக்கப்பட்டது.

அங்கிருந்து சுன்னாகத்துக்கு தரை வழியாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்தப் பெரிய ஜெனரேற்றரைக் கொண்டு செல்வதற்கு 72 சில்லுகளைக் கொண்ட "கெண்டெய்னர்' வாகனம் பயன்படுத்தப்பட்டது.


இந்த ஜெனரேற்றரைச் சுன்னாகம் கொண்டு சென்று சேர்ப்பதில் இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் பெரும் சிரமப்பட்டனர்.


ஜெனரேற்றர் அளவில் பெரியதாகவும் மிக உயரமானதாகவும் இருந்தமையால் வீதியால் அதனைக் கொண்டு செல்வதில் சிரமங்கள் எதிர் நோக்கப்பட்டன. வீதிகளுக்குக் குறுக்காகச் சென்ற மின்சார வயர்கள் அகற்றப்பட்டு மின் விநியோகம் நிறுத்தப் பட்டே ஜெனரேற்றர் எடுத்துச் செல்லப்பட்டது

தீபாவளிக்கு, வாலு, துப்பாக்கியுடன் மோதவிருக்கும் கும்கி

02.09.2012.BY.rajah.பிரபுசாலமன் ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அதில் பர்பெக்‌ஷன் பார்க்காமல் ஓயமாட்டார்.
கும்கியின் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதற்கும் தற்போது பிரபுசாலமன் பர்ஃபெக்‌ஷன் என்று பிடிவாதமாக இருப்பதுதான் காரணம் என்கிறார்கள் அவரது உதவியாளர்கள்! ஆமாம்! யானைக்கு தீனி போட முடியாது என்பர்கள். அதுபோல யானைப்படமான கும்கி படத்துக்கு கிராஃபிக்ஸ் வேலைகள் பார்த்து கட்டுபடியாகவில்லையாம்!

தாமதம் ஆக ஆக தமிழ் ரசிகர்களும், தமிழ் திரையுலகமும் கும்கி படத்தினை எதிர்பார்த்து காத்து இருக்கிரார்கள். காரணம் படத்தின் டிரெய்லரும், பாட்டுகளுக்கும் கிடைத்து இருக்கும் வரவேற்பு. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்து இருக்கும் கும்கி படத்தினை பிரபு சாலமன் இயக்க லிங்குசாமி தயாரித்து இருக்கிறார்.
ஶ்ரீதேவி நடிக்கும் இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்பட ட்ரெயிலர் வெளியீடு வீடியோ இங்கே
ஶ்ரீதேவி நடிக்கும் புதிய திரைப்படம் இங்கிலிஷ் விங்கிலிஷ் ட்ரெயிலர் லாஞ்ச் படங்கள்
நமீதா Dr BatraS Annual Charity Photo Exhibition படங்கள்

ஜீவா ரசிகர்கள் முகமூடி திரைப்பட ரிலீஸ் கொண்டாட்டம் படங்கள்


ஒரு காலத்தில் காடுகளுக்குள் இருந்த யானை தற்போது உள்ள காலத்தில் ஏன் ஊருக்குள் வருகின்றன என்று திரைக்கதை அமைத்து இருக்கிறாராம் பிரபு சாலமன். மதம் பிடித்த யானைகளை கட்டுப்படுத்தும் கும்கி யானைகளின் வாழ்க்கையையும் பதிவு செய்து இருக்கிறார் பிரபு சாலமன். கும்கி படத்தில் ஒரு வித்தியாசம் அமைந்து இருக்கிறது. ஒரு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் நாயகன், நாயகி, வில்லனை சுற்றியே இருக்கும்.
நடிகை சதா நடிக்கும் மைதிலி திரைப்படத்தின் புதிய படங்கள் சில

ஜெயம் ரவி அமலாபால் - நிமிர்ந்து நில் திரைப்படத்தில் படங்கள்

தமிழக முதல்வர் , எம் எஸ் வி, இளைஞராஜா கலந்துகொண்ட ஜெயா டிவி 14வது வருட விழா முழுமையான படங்கள்
ஆர்ட் கேலரியை தொடக்கிவைக்கும் நமீதா: வீடியோ

ஆனால் கும்கி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி அப்படத்தில் நடித்து இருக்கும் கும்கி யானை சுற்றி அமைந்து இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் இரண்டு யானைகள் மோதும் காட்சியை கிராபிக்ஸில் அமைத்து வருகிறார்கள். அக்காட்சி தத்துரூபமாக அமைய வேண்டும் என்று ஒரு குழுவே உழைத்து வருகிறது. அதனாலே படம் தாமதம் ஆகிறது.

தீபாவளிக்கு வாலு, துப்பாக்கி படத்துடன் கும்கி மோத இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்களுடன் மோதினால் கவலையில்லை எனக்கு கும்கி படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்து வருகிறார் லிங்குசாமி. கும்கி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் படம் பார்க்கும் அனைவருமே கண் கலங்க இருக்கிறார்கள். ஏன் தெரியுமா அப்படத்தில் நடித்து இருக்கும் யானை இறுதி காட்சியில்...........(மீதியை திரையில் பாருங்களேன்) அடப்பாவமே

50 வது பிறந்த நாள் விழா….சிதம்பரநாதன்(சந்திரன்)

02.09.2012.byrajah.
சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்பவருமான சிதம்பரநாதன் என்ற (சந்திரன்) அவர்களின் 50 வது பிறந்த நாள் விழா[01.09.2012.]
சூரிச் மிகவும் சிறப்பாக நடை பெற்றது இவரை நவற்கிரிஇணையங்களும் அன்புடன் பல்லாண்டு காலம் வாழவாழ்த்துகின்றோம்

முகமூடி-திரை விமர்சனம் [காணொளி,]

02.09.2012.BY.rajah.
 
இதுவரை ஹாலிவுட் சூப்பர் கதாநாயகர்களை பார்த்து வந்த தமிழக மக்களுக்கு, தமிழக சூப்பர் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் விதத்தில் மிஷ்கின் இயக்கியிருக்கும் படம் முகமூடி.
இந்தியாவில் பல மாநிலங்களில் பெரிய பெரிய பணக்கார வீடுகளில் கொள்ளையடிக்கும் முகமூடி கும்பல் ஒன்று சென்னையிலும் தங்களது கைவரிசையை காட்டுகிறார்கள்.
இந்த நிலையில் குங்பூ கற்று வரும் இளைஞன் லீ, தனது குருவுக்கு உதவி செய்வதற்காக குங்பூ பயிற்சிக்கு ஆட்களை தேடி அலைகிறான். மீனவர்களிடம் சென்று குங்பூ பயிற்சி கற்றுக் கொள்ள வருமாறு அழைக்கிறான்.
ஆனால் அவர்கள் தங்களுக்கு குங்பூ பயிற்சி தேவை இல்லை. எங்களுடைய ஆயுதமே எங்களுக்கு பாதுகாப்பு என்று கூறுகிறார்கள். அதற்கு லீ அந்த ஆயுதத்தால் என்னிடம் சண்டை போட்டு நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு பயிற்சி தேவை இல்லை. நான் வெற்றி பெற்றால் கட்டணம் செலுத்தி நீங்கள் பயிற்சி பெறவேண்டும் என்று அவர்களிடம் கூறுகிறான்.
இந்த சவாலை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் அவனுடன் மோதுகிறார்கள். இறுதியில் தோல்வியடைந்து தப்பி செல்லும் ஒருவனை லீ விரட்டிச் செல்கிறான். அப்போது அங்கு வரும் உதவி கமிஷனரின் மகள் சக்தி, லீயின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து அவனை பொலிசில் பிடித்துக் கொடுக்கிறாள்.
பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் லீ, தன்னை பிடித்துக் கொடுத்த சக்தியை பழிவாங்குவதற்காக அவளது வீட்டுக்குச் செல்கிறான். அவளைப் பார்த்த பிறகு மனம் மாறி அவள் மீது காதல் வயப்படுகிறான். ஒருநாள் சக்தியை பார்ப்பதற்காக இரவில் முகமூடி அணிந்து அவளுடைய வீட்டுக்குச் செல்கிறான்.
திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக திருடன் ஒருவனை பொலிசாரிடம் பிடித்துக் கொடுக்கிறான். இதனால் முகமூடி மனிதன் மீது மக்களுக்கு ஒரு தனி மரியாதை வருகிறது.
மற்றொரு நாள் முகமூடி அணியாமல் சக்தியின் வீட்டுக்குச் தனது காதலை சொல்ல லீ செல்கிறான். அப்போது கமிஷனரை கொலை செய்ய வரும் ஒருவன் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விடுகிறான்.
அவர் மீது குண்டு பாய்கிறது. இதை பார்த்துவிடும் லீ அவனை பிடிக்க முயற்சி செய்கிறான். ஆனால் துப்பாக்கியை லீயின் கையில் விட்டுவிட்டு கொலைகாரன் தப்பிவிடுகிறான்.
சத்தம் கேட்டு அங்கு வரும் பொலிசார் லீயின் கையில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு இவன்தான் கமிஷனரை சுட்டான் என்று முடிவு செய்கிறார்கள். லீயை பிடிக்க பொலிசார் வரும்போது தப்பித்து ஓடி தலைமறைவாகி விடுகிறான்.
பின்னர் தன் மீது விழுந்த பழியை போக்குவதற்காகவும், கொள்ளைக் கும்பலை பிடிப்பதற்காகவும், தன் காதலை காதலிக்கு உணர்த்துவதற்காகவும் லீ என்ன செய்கிறான் என்பதே மீதிக்கதை.
படத்தின் ஆரம்பத்திலே நம்மை சீட் நுணியில் அமரவைக்கும் மிஷ்கின், ஒவ்வொரு காட்சியையும் உற்றுநொக்க வைத்திருக்கிறார்.
முதலில் கொள்ளை கும்பலை அறிமுகப்படுத்தி விட்டு அவர்கள் யார், எப்படிபட்டவர்கள் என்பதை பொலிஸின் மூலம் தெரியப்படுத்தி விட்டு அடுத்ததாக கதாநாயகன் யார் அவர் எப்படி பட்டவர் என்பதை காட்டும் திரைக்கதை, ஜீவா சூப்பர் கதாநாயகன் ஆவது என பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் முதல் பாதியை பயணிக்க வைக்கிறது.
பெரும் ஆவலோடு இடைவேளை முடிந்து அதே சுவாரஸ்யத்தோடு சீட் நுனியில் அமந்த ரசிகர்களை படத்தின் இரண்டாம் பாதி சற்று சலிப்படைய செய்கிறது.
கொள்ளையர்கள் யார் என்பதை ஜீவாவும், ஜீவா யார் என்பதை வில்லனும் சுலபமாக தெரிந்து கொள்வதால் முதல் பாதியில் பரபரப்பாக நகர்ந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஜீவா இந்த படத்திற்காக ரொம்பவே உழைத்திருக்கிறார். குங்பூ மாணவன் என்பதை ஜீவா தனது அறிமுக காட்சியிலேயே நிரூபித்து விடுகிறார்.
வெட்டியாக ஊர் சுற்றும் இளைஞனாக இருந்து சூப்பர் கதாநாயகனாக மாறும் ஜீவா இரண்டு கதாபாத்திரத்திற்கும் கஞ்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
புதுமுகம் பூஜா ஹெக்டேவுக்கு அழகான தோற்றத்தில் பளிச்சிடுகிறார். நாசர் எப்போதும் போல தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.
நரேனின் தோற்றம் வில்லன் கதாபாத்திரத்திற்கு கஞ்சிதமாக பொருந்தியிருக்கிறது. முதன்முதலாக வில்லன் வேடம் ஏற்றிருக்கும் நரேன் அதற்கு பொருத்தமானவர் என்பதை காட்சிக்கு காட்சி மெய்ப்பித்திருக்கிறார். அழகான வில்லனாக வலம் வரும் அவர் அங்குச்சாமி என்ற கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளார்.
கே இசையில் "வாயை மூடி சும்மா இருடா..." பாடல் இந்த ஆண்டு அதிகப் பேர் முனுமுனுத்த பாடலாக இருக்கும். பார் ஆன்தமும் பட்டையை கிளப்ப போகும் பாடலாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சத்யாவின் உழைப்பு அறுமை. ஒவ்வொரு காட்சியும் மிரட்டும் வகையில் படமாக்கியிருக்கிறார்.
பட்ஜெட் ரீதியாக படத்தில் பிரமாண்டம் இல்லை என்றாலும், காட்சி ரீதியாக படத்தை பிரமாண்டமாக மிஷ்கின் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமையும் மிஸ் பண்ணாம பார்க்கனும் என்று ரசிகர்கள் எண்ணும் அளவுக்கு காட்சிகளை நகர்த்தியிருக்கும் மிஷ்கின், தனது முந்தையப் படங்களைப் போலவே இதிலும் கால்களை காட்டி சில ஷாட்களை வைத்திருந்தாலும், காட்சிகளுக்கு சற்று வேகத்தை கொடுத்திருக்கிறார்.
வில்லன் யார், அவனுடைய பின்புலம் என்ன என்பதை கதாநாயகன் கண்டுபிடிப்பதற்கு முன்பே பொலிஸ் ரொம்ப சுலபமாக கண்டுபிடித்து விடுகிறது.
அதற்குப் பிறகு வில்லனின் செயல்பாடுகள் பயங்கராமாக இருக்கும் என்றால், அங்கேயும் இயக்குநர் சற்று தடுமாறியிருப்பதால் படமும் சற்று தடுமாறியிருக்கிறது.
என்னதான் சூப்பர் கதாநாயகன் படமாக இருந்தாலும், இதிலும் தனது எதார்த்த பாணியை பின்பற்றியிருக்கும் மிஷ்கின், இதன் மூலம் சில இடங்களில் ஜீவா போட்டுகொண்டிருந்த முகமூடியை அவர் போட்டுகொண்டது போல இருக்கிறது.
"அதிகமான எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல் இந்த படத்தைப் பார்த்தால் முகமூடி உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும்." என்று நிகழ்ச்சி ஒன்றி முகமூடி படத்தைப் பற்றி மிஷ்கின் சொன்னார். அவர் கூறியதை ரசிகர்கள் மனதில் வைத்துகொண்டு படத்தைப் பார்த்தால் இந்த முகமூடி உண்மையிலே தமிழக சூப்பர் கதாநாயகன் தான்.


சட்டம் ஒரு இருட்டறையில் நான் தான் கதாநாயகி: பியா

02.09.2012.BY.rajah.
சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் பிந்து மாதவி, ரம்யா கிருஷ்ணன் நடித்தாலும் நான் தான் கதாநாயகி என்கிறார் பியா.
கோ படத்துக்கு பிறகு சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடித்து வருகிறார் பியா.
இது குறித்து பியா கூறுகையில், தமிழில் நான் நடித்த படங்களில் எல்லாமே கவர்ச்சி வேடமாக அமைந்து விட்டது. இதனால் எனக்கு கவர்ச்சி இமேஜ் வந்து விட்டது.
பொது நிகழ்ச்சிகளுக்கும் நான் கவர்ச்சி உடையில் செல்வதாக சொல்கிறார்கள். நான் மும்பை கலாச்சாரத்தில் வளர்ந்தவள்.
கவர்ச்சியான உடையும், வாழ்க்கையும், சினிமாவும் எனக்கு சகஜமானது. இது மற்றவர்கள் கண்ணுக்கு தவறாக தெரிந்தால் நான் என்ன செய்ய முடியும். கவர்ச்சி நடிகை என்று என்னை குறிப்பிட்டால் சந்தோஷம்தான்.
சட்டம் ஒரு இருட்டறையில் ரம்யாகிருஷ்ணன், பிந்து மாதவியுடன் நடித்தாலும் நான் தான் கதாநாயகி. எனக்குத் தான் நாயகனுடன் 3 டூயட் பாட்டு இருக்கிறது. அப்படியென்றால் நான்தானே கதாநாயகி.
இந்தப் படத்திலும் கிளாமராகத்தான் நடித்திருக்கிறேன். கோ படத்துக்கு பிறகு தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் இந்திப் படத்துக்கு போய்விட்டேன். அதனால் நடிக்க முடியவில்லை.
தமிழில் அதிகமாக நடிக்காவிட்டாலும் தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இனி தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்துவேன் என்று கூறியுள்ளார்

கொலிவுட்டில் படம் தயாரிக்கும் ரம்பாவின் அண்ணன்

02.09.20.12.BYrajah.
கொலிவுட்டில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா.
ரஜினி, கமல், அஜித், கார்த்திக் என்று முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்த ரம்பா சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து திரைத்துறையிலிருந்து விலகினார்.
தற்போது அவரது அண்ணன் லக்ஸ்மி ஸ்ரீநிவாஸ் என்கிற வாசு கொலிவுட்டில் சிறிய இடைவெளிக்கு பின்பு படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார். பட உலகில் ஐந்து வருட அனுபவத்தோடு படங்களை தயாரித்தவர்.
சிரஞ்சீவி, பரிசுரி பிரதர்ஸ், இயக்குனர் சித்திக் ஆகியோரிடம் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் என்பவரை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் இயக்குனராக அறிமுகப்படுத்துக்கிறார்.
இதில் நாயகனாக நகுல் நடிக்கிறார். இப்படத்தை காதல் கலந்த நகைச்சுவை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்.
தற்போது நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களின் தெரிவு நடைபெற்று வருகிறது.
 

நீ தானே என் பொன் வசந்தம் இசை வெளியீடு கோலாகலம்

02.09.2012.BY.rajah.
நீ தானே என் பொன் வசந்தம் படத்திற்கான இசை வெளியீடு நேற்று கோலாகலமாக நடந்தது.
கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான 'நீ தானே என் பொன் வசந்தம்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்தது.
விழாவில் படத்தின் நாயகன் ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் படக்குழு ஐரோப்பிய இசைக்கலைஞர்கள், திரையுலக பிரபலங்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
விழா நாயகன் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் 'நீ தானே என் பொன் வசந்தம்' பட பாடல்கள் உருவான விதம் பற்றி பேசினர்.
கௌதம் விரும்பிக் கேட்ட பாடல்களை இளையராஜா பாட, அரங்கம் அதிர்ந்தது.
திரையுலகினர் உள்ளிட்ட ரசிகர்கள் பாடல்களை ரசித்து கை தட்டினர். இளையராஜா தலைமையில் ஐரோப்பிய இசைக்கலைஞர்களின் இசையில் 'ராசாவின் பாடல்கள்' ஒலித்தன.
நீ தானே என் பொன் வசந்தம் படத்தின் இசைக்குறுந்தகடை இயக்குனர் கே.பாலச்சந்தர் வெளியிட, சூர்யா பெற்றுக்கொண்டார்.
விழாவில் கே.பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, சுந்தர்ராஜன் உள்ளிட்ட இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய கொலிவுட் பிரபல இயக்குனர்கள் தங்களின் பட உலக அனுபவங்களைக் கூறி இளையராஜாவுக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர்.

ரஜினி, கமலுடன் மீண்டும் நடிப்பேன்: ஸ்ரீதேவி

02.09.2012,BY.rajah.
 
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன் என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார்.
கொலிவுட்டில் தொடங்கி பாலிவுட்வரை முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.
திருமணத்திற்கு பின்னர் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீதேவி 14 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் இங்கிலீஷ்-விங்கிலீஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.
அதில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி ஊடகத்தினரிடம் கூறுகையில், இத்தனை காலம் நடிக்காமல் இருந்ததற்குக் காரணம், என் மகள்கள் இருவரும் சின்ன குழந்தைகளாக இருந்தார்கள்.
அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. தற்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன், என்றார்.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீதேவி, நிச்சயமாக நடிப்பேன்.
இரண்டு பேரையும் சமீபத்தில் கூட சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நியாயமாக இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றும் பொருத்தமான சூழல் அமைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்

மலேசிய நண்பர்களோடு பிறந்தநாளை கொண்டாடிய மோனிகா

02.09.2012.BY.rajah.
கொலிவுட்டில் நஞ்சுபுரம், வர்ணம் மற்றும் குறும்புக்காரப் பசங்க படங்களில் நடித்தவர் 'அழகி' மோனிகா.
தற்போது மலையாளப் படவுலகிலும் நன்கு அறியப்பட்ட நாயகியாக '916' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
மலேசியாவிலேயே எடுக்கும் மலேசியத் தமிழ்ப் படத்தில் இவர் நாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் மாயன் டிரீம் சிட்டியினை தொடங்கி வைக்க மலேசியா சென்றிருந்தார் மோனிகா. அங்கேயே அவரது மலேசிய ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மோனிகாவைத் தங்களுடன் பிறந்த நாள் கொண்டாட வேண்டும் என்று வற்புறுத்தினர்.
அதற்கு மோனிகாவும் சம்மதிக்கவே பிறந்த நாளை அமர்க்களமாக அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வட்டம் கொண்டாடி மகிழ்ந்தது.
இது குறித்து மோனிகா கூறும் போது, மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதே பெரிய சந்தோஷம் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அவர்கள் ஆவலாக இருந்தார்கள். அவர்களது சந்தோஷத்திற்காக நானும் சம்மதித்தேன்.
எனது பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடியதில் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாது என்றார்.

காலி சிறையில் தாக்கப்பட்ட கணவனைக் காப்பாற்றும்படி ஜனாதிபதிக்கு மனைவி கடிதம்

02.09.2012.BY.rajah.காலி சிறைச்சாலையில் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் காலி கராபிட்டிய வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட தனது கணவர் சுந்தரம் சதீஷ்குமாரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை ௭டுக்கும்படியும் காலி சிறைத் தாக்குதல் குறித்து நடவடிக்கை ௭டுக்கும் படியும் சதீஷ்குமாரின் மனைவி கவிதா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

௭னது கணவர் சுந்தரம் சதீஷ்குமார் 2008 ஆகஸ்ட் 15 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ௭துவித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். புதிய மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் 2012 ஆகஸ்ட் 21 ஆம் திகதி காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவென காலி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மீது மிருகத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அவருக்கு ௭துவிதமான சுகயீனமும் இருக்கவில்லை. நல்ல சுகதேகியாகக் காணப்பட்டார். 2012 ஆகஸ்ட் 23 ஆம் திகதி காலி பொலிஸார் காலி சிறைச்சாலைக்கு வரும்படி ௭னக்கு தகவல் அனுப்பினர். ௭னது ௭ட்டு வயது மகனுடன் காலி பொலிஸ் நிலையம் சென்றேன். அவர்கள் ௭ன்னை சிறைச்சாலைக்கு செல்லும்படி கேட்டனர். நான் அங்கு சென்றேன். சிறைச்சாலை அதிகாரி ௭ன்னை ௭னது கணவர் காலி கராபிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

௭ன்ன நடந்ததென நான் அவரிடம் கேட்டேன். அவர் அதற்கு வாயே திறக்கவில்லை. கராபிட்டிய வைத்தியசாலைக்கு நான் சென்று ௭னது கணவரைப் பார்த்து அதிர்ந்து போனேன். மூக்கிலும் வாயிலும் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன. நானும் மகனும் ஐயோ, ஐயோ ௭ன்று அழுதோம். அவர் ௭துவித அசைவுமின்றி இருந்தார். தலையிலும் வலது காலிலும் பெரிய கட்டுகள் போடப்பட்டிருந்தன. வவுனியா சிறைச்சாலையிலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். அதே பாணியில் ௭னது கணவரும் தாக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் ௭னது கணவர் காலி சிறையில் தனக்கு பிரச்சினை இருப்பதாக கொழும்பு நீதிமன்றத்தில் மூன்று தடவைகள் தெரிவித்துள்ளார். இதே விடயத்தை புதிய மகஸின் சிறை அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து கவலைப் படாமல் அவரை காலி சிறைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

௭னது கணவரது உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை ௭டுக்கும்படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

யுத்தத்தின் பின்னர் ஐந்து நாட்களுக்கு ஒருவர் ௭ன்ற ரீதியில் காணாமல் போகும் சம்பவங்கள்

02.09.2012.BY.rajah.இலங்கையில் யுத்தத்தின் பின்னர் ஐந்து நாட்களுக்கு ஒருவர் ௭ன்ற ரீதியில் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்வதாக கிறவுண்ட் வியூவ்ஸ் ௭ன்னும் இணையத்தளம் இலங்கை ஆங்கில ஊடகங்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. 2012 ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் 57 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலக காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நடைபெற்ற போராட்டமொன்றில் கலந்து கொண்டோரி டம் இந்தத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட காணாமல் போனோரின் குடும்ப உறுப்பினர்கள் இந்தப் போராட் டத்தில் கலந்து கொண்டனர். வவுனியாவைச் சேர்ந்த வசந்தமாலா ௭ன்ற 32 வயது பெண், தம்மை குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை செய்து வருவதாக உறவினருக்கு செல்லிடப் பேசியில் குறுஞ்செய்தி அனுப்பி வைத்துள்ளார். ௭னினும்.

வசந்தமாலா காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப் பாடு செய்யச் சென்ற அவரது பெற்றோரின் முறைப்பாடு முதலில் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை ௭னத் தெரிவிக்கப்படுகிறது. ‘உங்களது மகள் யாருடனாவது ஓடி யிருப்பாள்’ ௭ன பொலிஸார் தெரிவித்து முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை ௭ன பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை ௭ன பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் 56 பேரில் 18 பேரே உண் மையில் காணாமல் போயுள்ளதாகத் தெரி வித்துள்ளது. சர்வதேசத்தில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற் படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது

ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு கோழி, ஆடுகள் ஒப்படைப்பதற்கான தடை நீக்கம்

02.09.2012.BY.rajah.
முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு கோழிகள், ஆடுகளை பக்தர்கள் ஒப்படைப்பதற்கு நேற்றுக்காலை பொலிஸார் விதித்திருந்த தடை சிறிது நேரத்தில் ஜனாதிபதியின் இந்து சமய இணைப்பாளர் சிவஸ்ரீ பாலரவிச்சங்கர சிவாச்சாரியாரின் தலையீட்டை அடுத்து நீக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பா ளர் சிவஸ்ரீ பாலரவிச் சங்கர சிவாச்சாரியார் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்துக்குச் சென்று வேள்வி மற்றும் மிருக பலி தொடர்பாக கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தர்மகர்த்தா காளிமுத்து சிவபாதசுந்தரம் மற்றும் சிலாபம் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புனித கபிலவஸ்து இலங்கையின் முக்கிய விகாரைகளில் மக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படுவதால் ஜனாதிபதி மிருக பலியை இடை நிறுத்தும்படி கோரியுள்ளதை ஏற்று மிருகபலியை பின் போடுவதாக இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிர்வாகத்துறை உறுதியளித்தது.

அத்துடன் இன்றைய தினம் பக்தர்கள் தமது நேர்த்திக் கடனைச் செலுத்துவதற்காக ௭டுத்து வரும் கோழி, ஆடுகளை ஆலயம் பொறுப்பேற்றுக் கொள்ளுமெனவும் இந்தக் கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டது. இருந்தும் நேற்றுக் காலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தில் ஒப்படைக்கவென பக்தர்கள் ௭டுத்து வந்த ஆடு, கோழிகளை பொலிஸார் ஆலயத்துக்குள் ௭டுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

இதையடுத்து ஆலய நிர்வாகம் ஜனாதிபதியின் இந்து சமய விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ பாலரவிசங்கர சிவாச்சாரியாருடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்தது. சிவாச்சாரியார் உடனடியாக பொலிஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் ௭ட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்து விளக்கியதும் பொலிஸார் தடையை நீக்கினர். நேற்று ஆலயத்தில் மிருக பலி இடம்பெறவில்லை. ௭னினும் பூஜைகள் வழமை போல நடைபெற்றன.
 

காத்தான்குடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினரின் வாகனம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

 
ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012,BY.rajah.
மட். காத்தான்குடியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம். பலுளுள் ஹக்கின் வாகனம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
காத்தான்குடியிலுள்ள வாகனத் திருந்தும் நிலையமொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேற்படி வாகனம் சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வாகன திருத்த நிலையத்தின் உரிமையாளரால் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 



ஆண்ட்ராய்ட் கைபேசிகளை முழுமையாக பக்கப் செய்வதற்கு

 ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, BY.rajah.
தற்போது ஆண்ட்ராய்ட் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துள்ளது. அதில் சேமிக்கப்படும் தகவல்கள் அப்பிளிகேஷன்கள் அதிகரித்துச் செல்லும் போது, ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்ட்ராய்ட் டிவைஸை பக்கப் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம். ஏற்கனவே ரூட்டிங்க் செய்து அல்லது Bootloader Unlock மூலம் பக்கப் செய்வது அனைவருக்கும் ஏற்ற முறையல்ல. ஏனெனில் சிறிய பிழை ஏற்பட்டால் கூட முழுமையாக டிவஸை ரீஸெட் செய்தே மீண்டும் பயன்படுத்த முடியும்.
இவற்றுக்கெல்லாம் தீர்வாக Gigadroid என்ற பிரபல ஆண்ட்ராய்ட் கருத்துக்கள டெவெலப்பர்கள் Ultimate Backup Tool ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
விண்டோஸில் இயங்கும் இந்த டூலைக்கொண்டு ஆண்ட்ராய்ட் 4.0 டிவைஸ்களை முழுமையாக பக்கப் செய்து பின்னர் ரீஸ்டார் செய்யவும் முடியும் என்கிறார்கள்.
Galaxy Nexus, Galaxy S II தொலைபேசிகளிலும் பரிசோதனை செய்துள்ளனர்.
Ultimate Backup Tool பின்வரும் முறைகளில் பக்கப் செய்கின்றது.
• Backup all without system apps.
• Backup all with system apps.
• Backup app and device data.
• Backup apps.
• Backup device shared storage/SD card contents.
முழுமையாக பக்கப் செய்ய முன்னர் உங்கள் ஆண்ட்ராய்ட் டிவைஸில் setting இல் இருக்கும் Developer option சென்று USB debugging ஐ தெரிவு செய்யுங்கள். அதன் பின்னர் Desktop Backup password ஆப்ஸனில் பாஸ்வேர்ட் தந்து சேமிக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
அவ்வாறு செய்த பின்னர் கணனியில் ஆண்ட்ராய்ட் டிவைஸின் யுஎஸ்பியை செருகியதும் கிடைக்கும் ஸ்கீரினில் பக்கப்பை செயற்படுத்த அல்லது நிறுத்துவதற்கு முடிகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச்செல்ல இலங்கை தீர்மானம்

 ஞாயிற்றுக்கிழமை, 02 செப்ரெம்பர் 2012, BY.rajah.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச் செயற்படுவது என்று இலங்கை அறிவித்துள்ளது.
கடந்த மார்ச்சில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம் நிறைவேற்றியமையை அடுத்து இலங்கை குறித்த தீர்மானத்தை ஆட்சேபித்து கருத்துக்களை வெளியிட்டு வந்தது.
இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஆணைக்குழு அமர்வில் ஆராயப்படவுள்ளது.
இதன்போது தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணங்கிச்செல்வது என்று இலங்கை தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் முன்னேற்ற அறிக்கை, ஐக்கிய நாடுகளின் இணையத்தளத்திலும் கடந்த வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரவிநாத் ஆரியசிங்க, கடந்த வாரங்களி;ல் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளித்த மற்றும் எதிர்ப்பு வெளியிட்ட அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைக்குறித்து விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு செல்லவுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்