siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

"போர்டோ' அணு சக்தி நிலையத்தின் உற்பத்தி ஆற்றலை ஈரான் இரு மடங்காக்கியுள்ளது

01.'09.2012.BYrajah.ஈரானானது தனது போர்டோ அணுசக்தி தளத்திலான உற்பத்தி ஆற்றலை இருமடங்காக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் பிந்திய காலாண்டு அறிக்கையிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈரானின் பார்சின் இராணுவத்தளத்தை தனது முகவர் நிலையம் பரிசோதிப்பதற்கு அந்நாடு குறிப்பிடத்தக்க அளவில் தடையை ஏற்படுத்தியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் 2010ஆம் ஆண்டிலிருந்து 189 கிலோ கிராம் நிறையுடைய உயர் மட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தனது அணு சக்தி நிகழ்ச்சித் திட்டம் இராணுவ நோக்கம் எதனையும் கொண்டிருக்கவில்லை என ஈரான் வலியுறுத்தி வருகிறது.

புனித நகரான குவோமுக்கு அருகிலுள்ள மனையின் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள பொர்டோ அணுசக்தி நிலையத்திலுள்ள யுரேனிய செறிவூட்டல் உபகரணங்களின் தொகையானது கடந்த மே மாதத்திலான 1064இலிருந்து 2140ஆக இரு மடங்கு தொகைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவர் நிலையம் தெரிவித்தது.

மேற்படி அணுசக்தி தளத்தில் யுரேனியம் 27 சதவீதத்திற்கு செறிவூட்டப்படுவதாக ஐக்கிய நாடுகள் அணுசக்தி முகவர் நிலையம் கடந்த மே மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த அணு சக்தி தளத்திலுள்ள புதிய யுரேனிய செறிவூட்டல் உபகரணங்கள் இதுவரை செயற்படுத்தப்படாத போதும் கவலைக்குரியவையாக உள்ளதாக கூறப்படுகிறது