காலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன...
கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள், கருத்தரங்குகளில் அறிந்துகொண்ட விடயங்கள் ஆகியவற்றை, உசாத்துணையாக கொண்டு பின்வரும் பத்து விடயங்களை சுருக்கமாக
குறிப்பிடுகின்றேன்.
காலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன.
தகவல்களையும் விண்ணப்பங்கள் போன்ற விடயங்களையும் இணையத்தளத்தினூடாகவும், மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கனடிய அரசின் பிரதிநிதித்துவ காரியாலயமாகவுள்ள கனடிய தூதரகங்கள் மூலமாகவும் விபரமாக பெற்றுக்
கொள்ளலாம்.
1) தற்காலிக விசாப்பெற்று உல்லாசப் பிரயாணியாக பிரவேசித்தல்(Visiting by tourist Visa )
சில குறிப்பிட்ட, கனடாவினால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டு மக்கள் தங்கள் நாட்டு கடவுச்சீட்டுடன் கனடாவிற்கு பிரயாணம் செய்வதற்கு எதுவிதமான விசாவும் முன்கூட்டியே பெறவேண்டிய அவசியம் இல்லை. கனடாவிற்கு வந்திறங்கிய இடத்தில் வைத்து ஆறு மாதத்திற்கு தற்காலிகமான விசா வழங்குவார்கள்.
உதாரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள், அவுஸ்திரேலியா, கொங்கொங் , ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், தாய்வான், என 51 நாடுகளை குறிப்பிடலாம்.
இலங்கை இந்தியா உட்பட ஏனைய நாட்டு மக்கள் இந்த வழியில் கனடாவிற்கு வர வேண்டுமானால், முற்கூட்டியே தமது நாட்டில் உள்ள கனேடிய தூதராலயத்திற்கு விண்ணப்பித்து தற்காலிக விசா பெற்றுக் கொள்ளவேண்டும்.
விசா வழங்க முன்பு கனேடிய தூதராலயம் பின்வரும் விடயங்களை கூர்ந்து பரிசீலனை செய்து கொள்ளும்
தற்போது மின்னஞ்சல் மூலமாகவும் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். (ETA - Electronic Travel Authorization )
* தமது சொந்த நாட்டில் தொழில்,வடு,நிதியியல் ரீதியான சொத்துக்கள் குடும்ப உறவுகள் யாவற்றினையும் வைத்திருக்கும் ஒருவர் தற்காலிகமாக கனடாவிற்கு போய் குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பி வருவதே நோக்கம் என்பது நம்பக்கூடிய அளவிற்கு தூதராலய விசா அதிகாரிகளினால் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.
* ஆரோக்கியமான உடல் நிலை, குற்றவியல் பதிவு எவையும் இல்லாதிருத்தல் நிரூபிக்கப்படல் வேண்டும்.
* கனடாவில் தங்கப் போகும் இடம் அதற்குரிய நிதி நிலைமைகள் காட்டப்பட வேண்டும்.
உறவினர்கள், நண்பர்களுடன் தங்குவதாக இருந்தால் அவர்களின் விபரங்கள், நிதி நிலைமைகள், அவர்களின் ஆதரவுப் பத்திரம், மற்றும் அழைப்புக்கு கடிதம் (Letter of Invitation ) என்பன தேவை.
இங்கு இருவகையான விசாக்கள் வழங்கப்படும்.
1) ஒருமுறை மட்டும் பிரவேசிக்கும் விசா (Single Entry Visa) இது குறிப்பிட்ட ஆறு மாதங்களுடன் நிறைவடைந்து விடும்.
2) பலமுறை பிரவேசிக்கும் விசா (Multiple entry visa ) சுமார் பத்து வருடங்களு பலமுறை போய் வரலாம்.
ஒருமுறை சென்றால் ஆறு மாதங்களுக்கு மட்டுமே
கனடாவில் தங்கி நிற்கலாம்.
2)கல்வி, தொழில் துறைகளின் திறமைசாலிகளுக்கு வழங்கும் விசா (Federal Skill worker visa )
பல்கலைப் பட்டப்பிடிப்புகளுடன் சேர்ந்த தொழித்துறை சார்ந்த புலமையாளர்களை ஏனைய உலக நாடுகளில் இருந்து கனடாவிற்கு குடிவருவதற்கான வழங்கப்படும் நிரந்தர குடியுரிமை விசாவே இதுவாகும்.
இங்கு கனேடிய குடிவரவு அமைச்சு பின்வரும் ஆறு விடயங்களை கருத்தில் கொண்டு, ஒரு புள்ளி விபர மதிப்பீட்டின் அடிப்படையில் நிரந்தர குடியுரிமை விசா வழங்குவது பற்றி முடிவு செய்கின்றது.
*கல்வி Maximum 25%
*கனேடிய மொழிகளில் ஒன்றில் திறமை (Skill in English or french ) 16-18%
*தொழில் அனுபவம் 9-15%
*வயது (Age ) Maximum 12% 18-35 வயதிற்கு இடைப்பட்டோர். மேலதிக ஒவ்வொரு வயதிற்கு ஒவ்வொரு புள்ளி 47 வயது வரை குறைக்கப்படும்.
* கனடாவில் உடனடியாக உகந்த தொழில்வாய்ப்பு 0-10%
* கிடைக்கும் ஆதரவுகள் & வாய்ப்புக்கள் மற்றும் ஆரம்ப நிலையில் பண வசதி
தற்போது உள்ள குடிவரவு ஒழுங்கு விதிகளின் படி 67% புள்ளிகள் கிடைத்தால் சாதகமான முடிவு கிடைக்கும்.
இவற்றில் இறுக்கங்கள் பல்வேறு காலங்களிலும் ஏ
ற்படுவது வழமையாகும்.
3) துறை சார்ந்த சிறப்பு தொழில் திறமையுள்ளவர்களுக்கு வழங்கும் நிரந்தர குடியுரிமை விசா
கல்வி தொழில் துறைகளில் திறமைசாலிகளுக்கு வழங்கும் நிரந்தர குடியுரிமை விசாவில் இருந்து இக் குடியுரிமை விசா சற்று வேறுபட்டது. அதாவது கல்வித் தகமை என்பது இங்கு பெரிதாக
கருத்தில் கொள்வது இல்லை.
இங்கு குடியுரிமை விசாவினைப் பெறுவதற்கு பின்வரும் தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
*கைத்தொழில், மின்னியல்,இயந்திரவியல், கட்டிட துறைகள், சமையல்துறை, வேளாண்மைத்துறை, போன்ற துறைகளில் இரு வருடங்களிற்கு மேலாக முழுநேரமாக தொழில் செய்த
அனுபவம் இருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தொழில் துறை என்பது அரச துறை சார்ந்த நிறுவனங்களின் சான்றிதழ் பெற்ற தொழில் சார்ந்த நிபுணராக இருத்தல் வேண்டும்.
கனேடிய மொழிகளான ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிகளில் ஓரளவேனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
*கனடாவில் வந்து சேர்வதற்கும் கால்ஊன்றுவதற்கும் ஓரளவிற்கேனும் ஆரம்பகட்ட நிதி வசதி இருக்க வேண்டும்.
4)கனடாவில் கல்விகற்கும் மாணவர்களுக்கான விசா
ஒவ்வொரு வருடமும் சுமார் 200,000 மாணவர்கள் உலகின் பல பாகங்களிலும் இருந்தும் கனடாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வதற்காக வருகின்றனர் என்பது புள்ளிவிபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உட்பட பல்வேறு வகையான கல்வி நிறுவனங்கள் சர்வதேச மாணவர்களை
அனுமதிக்கின்றன.
முதலில் இந்தக் கல்வி நிறுவனத்தில்? எந்த துறையில்? கல்வி பயில விரும்புகின்றீகளோ அந்த நிறுவனத்தில் அடர்க்குரிய கட்டணங்களை செலுத்தி அனுமதி பெறுதல் வேண்டும். அனுமதி அவரவர் நாடுகளின் கனேடிய தூதராலயங்களினூடாகவும்
பெற்றுக்கொள்ளலாம்.
கனடாவில் வாள்பவரின் உதவி மூலமும் பெற்றுக்கொள்ளலாம். அனுமதியின் பின் அவர்களின் நாடுகளில் உள்ள கனேடிய தூதராலயத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கனேடிய தூதராலயம், விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவர் குறிப்பிட்ட துறையில் கல்வி பயில தகுதி, ஆர்வம் உட்பட,
கல்வி கற்பதற்கு தான் செல்கின்றாரா? அவருக்குள்ள நிதி வசதிகள் என்பவற்றினை பரிசீலனை செய்து அவர்களின் நேர்முகப் பரீட்சையில் கனடா பாதுகாப்புக்கு ஆபத்து இல்லாதவர் என்பதை உறுதிப்படுத்திய பின்னர் விசா வழங்குவார்கள். கற்கை நெறியினை கனடாவில் முடித்தவர் அதே துறையில் தொழில் செய்யும் அனுமதி பத்திரம் பெற்று தாற்காலிகமாக தொழில் கிடைத்தால் தொழிலும் செய்யலாம்.
இரு வருடங்கள் கனடாவில் தொழில் செய்த பின்னர் நிரந்தர பதிவுரிமைக்கும் விண்ணப்பிக்கலாம். மூன்று வருட நிரந்தர வதியுரிமைக்கு பின்பு கனேடிய குடியுரிமைக்கும் விண்ணப்பிக்கலாம்.
5) கனடாவின் மாகாண அரச வதிவிட நியமனங்களினூடாக பெரும் நிரந்தர வதியுரிமை
கனடாவுக்கு நிரந்தர வதியுரிமை பெற்று குடியேறும் வெளிநாட்டவர் எவரும் பொதுவாக தத்தமது வசதிகள் வாய்ப்புக்களுக்கு ஏற்றமாதிரி கனடாவின் எந்தவொரு மாகாணத்திலும் குடியேறலாம். மத்திய அரசு என்ற பேரரசின் கீழ் உள்ள சிற்றரசுகள் போல் பத்து மாகாணங்களும் மூன்று பிரதேசங்களும் தங்களுக்குரிய இறைமைகளுடன் ஆட்சி செய்கின்றன. இங்கு ஏனைய நாடு ஒன்றிலிருந்து குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் தொழில் செய்து அந்த மாகாணத்திலேயே நிரந்தரமாக குடியேறுவேன் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கும் நிரந்தர வதியுரிமை
விசாவே இதுவாகும்.
ஒவ்வொரு மாகாண அரசும் இந்தப் பிற நாட்டவர்கள் குடியுரிமை விடயங்களில் தங்களுக்குரிய கொள்கை, திட்டங்களை தங்களின் தேவைகளுக்கு ஏற்றமாதிரி தாங்களே
வகுக்கின்றன.
மாகாணங்களின் பொருளாதார வளர்சிக்காக வெளிநாட்டிலிருந்து குடியேறுபவர்களை பரவலாக்கம் செய்வதற்காக இத்தகைய வதிவுரிமை விசாக்களை கனேடிய அரசு வழங்குகின்றது. இங்கு முதலில் குறிப்பிட்ட மாகாண அரசிற்கு நேரடியாக விண்ணப்பித்து தங்களின் கல்வித் தராதரம், தொழித் திறமைகள் அனுபவங்களிற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். குடியேறப் போகும் மாகாணத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்பு பின்வரும் விலாசத்திற்கு விண்ணப்பபங்களை அனுப்புதல் வேண்டும்.citizenship &immigration Canada
provincial Nominee Program
Centralized Intake Office
P.O .Box. 1450
Sydney, NS, B1P 6k5
Canada
அவருடைய நாட்டில் உள்ள கனேடிய தூதராலயத்தின் இறுதி பரிசீலனையில் பின்பு குடியுரிமை விசா வழங்கப்படும்.
கனடாவில் எந்த மாநிலத்தில் குடியேறலாம் என அங்கீகாரம் கிடைத்ததோ அந்த மாகாணத்தில் குடியேறி அவரின் வாழ்வினை ஆரம்பிக்கலாம்.
6) தனியார் வீடுகளில் தங்கி இருந்து தொழில் செய்யும்
பணியாளர்களுக்குரிய விசா
கனடாவில் பல்வேறு வகையான வசதிகளோடு வாழ்பவர்கள் தங்கள் வீடுகளில் தங்கியிருந்து, விட்டு வேலைகளுடன், குழந்தைகளை பராமரிப்பது, முதியோரை பராமரிப்பது, உடல் இயங்க முடியாதவர்களுக்கு உதவுவது போன்ற தொழில்களுக்கு எவராவது தேவைப்பட்டால்
வழங்கப் போகும் சம்பளங்கள், சலுகைகள் எவ்வளவு
என்ற சட்டரீதியான ஒப்பந்தங்களுடன் ஏனைய நாடு ஒன்றிலிருந்து வருவித்து இரு வருடங்களிற்கு கனடாவில் நியமனம் வழங்கிக் கொள்ளலாம்.
இரு வருடங்கள் தொடர்ந்து ஒரு வீட்டில் பணிபுரிந்தவர் இரு வருடங்களின் பின்பு நிரந்தர வதிவுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து சில வருடங்களின் பின்பு நிரந்தர குடியுரிமையும்
பெறலாம்.
குறிப்பிட்ட வேலைக்கு கனடாவில் இருந்து எவரையும் நியமனம் செய்ய முடியாதுள்ளது என்பதை மத்திய அரசிற்கு விண்ணப்பித்து உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அதற்குரிய உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டே ஏனைய நாட்டில் இருந்து பணியாளரை வருவிக்க முயற்சிக்கலாம்.
தொடர்ந்து ஏனைய நாடு ஒன்றிலிருந்து ஊதியம் வழங்கிப் பணியாளரை நியமனம் செய்யும் அளவிற்கு வலிமை உடையவர் என்பதும் அவருக்கு பணியாளர் ஒருவர் தேவை என்பதும் கனேடிய குடிவரவுத்துறை அமைச்சுக்கு விண்ணப்பித்து நிரூபிக்கும் போது தொழில் அனுமதி
வழங்குவார்கள்.
தொடர்ந்து விண்ணப்பங்களை முன்னெடுக்கும் போது குறிப்பிட்ட தொழிலை கனடாவிற்கு சென்று பணியாற்றுவதற்கு பணியாளராக செல்பவர் தகுதியானவரா என்பதனை நேர்முகப் பரீட்சையின் போது அந்தந்த நாடுகளில் கனேடிய அரசின் பிரதிநிதியாக உள்ள தூதராலயங்கள் முடிவுபண்ணி விசாவினை வழங்கும்.
7) இன்னொரு நாட்டில் இருந்து பிள்ளைகளை சட்டரீதியாக தத்தெடுத்தல் .
சர்வதேச ரீதியாக தங்களின் பிள்ளைகளை போன்று இன்னொரு பிள்ளையை தத்தெடுத்து, அந்தப் பிள்ளையை கனடாவுக்கு எடுப்பது இன்னொரு வழியாகும். கனடாவில் வாழும் ஒருவர் இன்னொரு நாட்டில் இருந்து பிள்ளை ஒன்றினை சட்டரீதியாக தத்து எடுப்பது என்பது
இன்னொரு கட்டம்.
கனேடிய மத்திய அரசு தத்து எடுப்பவர் குடியிருக்கும் மாகாண அரசு தத்து எடுக்கப் போகும் பிள்ளை பிறந்த நாட்டின் சட்ட திட்டங்கள், அவர்களின் நிபந்தனைகள், ஒழுங்குவிதிகள் எனப் பல படிமுறைகளில் அங்கீகாரங்களை பல்வேறு வகையான நிலைப்பாடுகளில் இருந்து இவ் விடயத்தில் பூரணமான வெற்றியினை அடையலாம்.
8) கனடாவில் அகதி அந்தஸ்து கோரல்
தமது சொந்த நாட்டில் போர் கால சூழல்களால் கொடுமைகள், துன்பங்கள், துயரங்களை எதிர்கொண்டு உயிர் வாழ அச்சமாக உள்ளவர் என்பது நிரூபிக்கப்பட்டு கனடாவில் அகதி நிலை கோரலாம்.
இவ்வாறு அகதி நிலை கூறுபவர்களை இரு
வகையாக பிரிக்கலாம்.
1. கனடாவுக்கு வெளியே இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு கனடாவில் புகலிடம் கோருவது.
உதாரணமாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்
1. சிரியா போன்ற நாட்டில் உள்ள அகதிகளை கனேடிய அரசே பொறுப்பேற்று புகலிடம் வழங்கியது.
2. ஐந்துபேர் இணைந்து குழுவாக ஒரு அகதியின் புகலிடத்திற்கு
ஸ்பொன்சர் செய்வது.
3. ஒரு நிறுவனம் அல்லது சமூகம் ஒரு அகதியின் புகலிடத்திற்காக ஸ்பொன்சர் செய்வது
2) கனடாவில் இருந்துகொண்டு அகதி நிலை கோருவது.
எதோஒரு வழியில் கனடாவிற்குள் வந்து சேர்ந்த தமிழர் பலர் கனடாவில் நிரந்தர வாழ்வினை அமைத்துக் கொண்டதனை இங்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
9) குடும்ப ஸ்பான்சர்
கனடாவில் நிரந்தரமாக குடியேறி தமக்கென ஒரு வாழ்வினை உருவாக்கிக் கொண்ட ஒருவர், ஏனைய நாடுகளில் இருக்கும் தங்கள் குடும்ப உறவுகளுக்கு பொன்சர் பண்ணி கனடாவிற்குள் அழைக்கு
ம் முறையே இதுவாகும்.
குடும்ப உறவுகளுக்கு பின்வருவோருக்கு
ஸ்பொன்சர் செய்யலாம்
1. மனைவி அல்லது கணவன், பிள்ளைகளுக்கு செய்யும் ஸ்பொன்சர்
2.பெற்றோர் பேரன்மார்க்கு ஸ்பொன்சர் செய்தல்
3.தற்காலிகமாக பெற்றோர், பேரன்மார் சேர்ந்து வாழ வழங்கும் விரைவான சுப்பர் விசா
4. தகுதியான உறவினர்களுக்கு ஸ்பொன்சர். உதாரணமாக 1983 ஆம் ஆண்டு இலங்கையில் உருவான பாரிய இனக்கலவரம் உட்பட பல உள்நாட்டு கலவரங்கள், பாதிப்புக்குட்பட்டவர்களுக்கு இந்த வலியின் மூலம் மேற்கொண்ட ஸ்பொன்சர் பலருக்கு
வெற்றியினை தந்தது.
10) வர்த்தகர்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் விசா
கனடாவில் குடியேறும் உலகம் எங்கும் வாழும் மிகப் பெரும் செல்வந்தர்களுக்கே இம்முறை சாதகமாக
அமையலாம்.
வர்த்தக முதலீடு செய்ப்பவர் குறைந்தது இரண்டு கனேடிய மில்லியன் டொலர் பணத்தினை கனடாவிற்குள் கொண்டுவர வேண்டும்.
குடியேற விரும்புபவரின் தெரிய வருமானம் பத்து மில்லியனாக இருக்க வேண்டும் என்பது இவை தொடர்பான சட்டப்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அண்மையில் உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற சட்டமூலம் (Bill C -31) இந்த விசாவுக்கு
தடை விதித்துளளது.