
ஜேர்மனியில் 650 வருட பழமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஜேர்மனியின் நூரெம்பெர்க் நகரில் அமைந்துள்ள 650 வருட பழமையான செயிண்ட் மர்தாஸ் தேவாலயம் தீ விபத்தில் சேதம் அடைந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் மிக வேகமாக செயல்பட்டு தீயை அணைத்துள்ளனர், தேவாலயத்தின் கூரை தீப்பிடித்து எரிந்து, மேலும் கட்டிடத்தின் உள்பகுதியில் சேதம் அடைந்தது.
இந்த தேவாலயத்தில், கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடதக்கது.
...