siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இப்படியும் ஒரு வில்லங்கமான போட்டியா?[காணொளி,]

 

Published:Tuesday, 18 September 2012, By.Rajah.
நண்பர்கள் தமக்கிடையே சுவாரஸ்யமான போட்டிகளை ஏற்படுத்தி ரசிப்பது வழக்கம். அவ்வாறே இங்கும் இரு இளைஞர்கள் தமக்கிடையே வினோதமான போட்டி ஒன்றை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.
அதாவது ஒரு கரண்டி கறுவாத்தூளினை தமது வாயில் போட்டு சாப்பிட வேண்டுமாம். சாப்பிட்டார்களா இல்லையா என்பதுதான் இந்தக் காணொளியின் கிளைமாக்ஸ்.

 

ஏன் இந்த யானைக்கு இப்படியொரு கோபம்?[ காணொளி ]

18.09.2012.By.Rajah.

 

 
ஜேர்மனியின் தலைநகரான பேர்லின் நகரில் காணப்படும் மிகவும் பிரபல்யமான மிருகக்காட்சிச் சாலையில் உள்ள யானை ஒன்று அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணினை நோக்கி தனது தும்பிக்கையினால் தனது கழிவினை வீசியுள்ளது.
ஏன் இப்படிய ஒரு செயலை குறித்த யானை செய்தது என்று தெரியாத போதிலும் அது குறி பார்த்து சரியாக எறிந்தமை அங்கு கூடியிருந்தவர்களை வியக்க வைத்துள்ளது.

 

நடிகர்களின் மறு ஜென்மத்தைக் காண ஆவலா?[காணொளி,]

18.09.2012.By.Rajash.

சிகரெட் பிடித்த 15 நிமிடத்தில் மரபணு பாதிக்கும்



18.09.2012.By.Rajah.


சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கா னது. புற்றுநோய் ஏற்படும் என பிரசாரங்கள் செய்யப் படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடித்த 15 நிமிடத்திற்குள் புற்றுநோய் தூண்டப்படுகின்றது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சிகரெட் புகைத்தவுடன் புகையிலையில் உள்ள பாலி சைக்ளிக் அரோமேடிக் நைட்ரோ கார்பன் என்ற நச்சுப் பொருள் ரத்தத்தில் கலக்கிறது. அது மரபணு வில் பாதிப்பை ஏற்படுத் துகிறது. இதை தொடர்ந்து சிகரெட் பிடித்த 15 முதல் 30 நிமிடங்களில் புற்றுநோய் தூண்டப்படுகிறது.

இதன்மூலம் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகிறது. நுரையீரல் புற்று நோயி னால் உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் உயிரிழக் கின்றனர். இதுதவிர 18 வகையான புற்றுநோய் ஏற்படவும் சிகரெட் காரணமாக உள்ளது. எனவே சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்

பட்டதாரி பயிலுனர்கள் மேலும் ஆறுமாதம் பயில வேண்டுமாம்; பொது நிர்வாகம்

18.09.2012.By.Rajah.
 மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தகவல்
 
பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகளை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.பி.அபேகோன் தெரிவித்துள்ளார்.

பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு அபிவிருத்து உத்தியோகத்தர் சேவை கொள்கைகளின் கீழ் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவிருந்தன.

எனினும் இந்த கொள்கைகளுக்கு எதிராக சிலர் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் இதன் காரணமாக சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதனால், பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்குமான பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்

விவசாய ஓய்வூதியம் 8 மாதங்களாக இல்லை; நிதி இல்லாததே காரணமாம்

18.09.20120By.Rajah.
 
தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள விவசாய ஓய்வூதியர்களுக்குக் கடந்த எட்டு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட காலம் தொடக்கம் தமக்கு மாதாந்தம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்ததாகவும் கடந்த ஜனவரி தொடக்கம் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது ஓய்வூதியம் வழங்குவதற்கு நிதி இல்லாததால் வழங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதேவேளை இந்த வருடத்தில் விவசாய ஓய்வூதியம் பெற தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கும் இன்னமும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஈழத்தமிழருக்காய் தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

 
18.09.2012.By.Rajah.ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் தீக்குளித்த விஜயராஜ் இன்று உயிரிழந்துக்கதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
நேற்று காலை அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், போர்க்குற்றவாளியான அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தினார்.அத்துடன் திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார்.
80 வீத உடல் எரிகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்தநிலையில் அவர் இன்று சிகிச்சை பயனின்றி வாவடைந்துள்ளார்.
தமிழ் ஈழ ஆதரவாளரான விஜயராஜ், பெரியார் பற்றாளர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
விஜயராஜ் தினம் டயரி எழுதும் பழக்கமுடையவர். வைகோ, சீமான், கொளத்தூர் மணி கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கும்போது, அங்கு ஏற்படும் உணர்வுகளை தனது டயரியில் பதிவு செய்து வந்துள்ளார். தீக்குளிப்புக்கு முன்பு அவர் தனது டயரியில் எழுதியிருப்பதாகக் கூறியதாவது,
இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், போர் விமானங்கள் என்பவற்றைக் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம் இழைத்துள்ளது.
இந்திய மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும். என்னுடைய உயிர் ஆயுதத்தைப் பார்த்து தமிழர்கள் ராஜபக்ஷவை செருப்பால் அடிக்க வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன்.
ராஜபக்ஷவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. இத்தனை வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபக்ஷவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. என தீக்காயங்களுடன் நேற்று அவர் தனது வேதனையை வெளியிட்டிருந்தார்.
அத்துடன்‘’இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிப்பதே ராஜபக்ஷவின் வேலை. ஈழத்தமிழர்களின் வீழ்ச்சிக்கு இந்திய அரசும், அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசும்தான் காரணம். என்னைப் பற்றி யாரும் கவலைகொள்ள வேண்டாம்.ஈழ மக்கள்மீது அக்கறை கொள்ளுங்கள்’’ இவ்வாறு நேற்று அதிகாலை சேலத்தில் தன்னைத்தானே தீ மூட்டிக்கொண்ட விஜயராஜ் எழுதிய 36 பக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘’இலங்கை தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு முழு பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைத்தால் தான் என் ஆத்மா சாந்தியடையும். ராஜபக்ஷ இந்தியா வரக்கூடாது’’ என அவர் தனது கடிதத்தில் இந்திய மத்திய அரசு,தமிழக முன்னாள் அரசு,இலங்கை ஜனாதிபதி ஆகியோரை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.
விஜயராஜ் எழுதிய 36 பக்ககடிதம் ஒன்று பொலிஸாரிடம் கிடைத் துள்ளது. இந்த கடித புத்தகத்தை ஓட்டோவில் இருந்து கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விஜய்ராஜ் தாம் எந்த அமைப்பிலு உறுப்பினர் இல்லை என்றும் தாம் அனைத்து தமிழின உணர்வு கொண்ட அமைப்பினருக்கும் ஆதரவாளன் என்றும் தமது மரண வாக்குமூலத்தில் கூறியுள்ளார்

இந்திய இராணுவ இரகசிய இறுவட்டுடன் இலங்கைக்கு தப்பமுயன்றவர் கைது



18.09.2012.By.Rajah.இந்திய இராணுவ இரகசியங்கள் அடங்கிய சீ.டி.யுடன் (இறுவட்டு) இலங்கைக்குத் தப்பிவர முயன்றதாகக் கூறப்படும் நபரொருவர் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இந்திய பொலிஸாரால்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் ௭ன்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்துவரும் மேற்படி நபரிடம் இந்திய இராணுவ இரகசியங்கள் அடங்கிய சீ.டி இருப்பதாக ்கியூீ பிரிவுப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததை அடுத்தே அவர் விமான நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து செயற்படும் தீவிரவாத அமைப்புக்களுடன் தனக்குத் தொடர்பிருப்பதாகவும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் குறித்த சீ.டி.யை கொடுக்கவே தான் இலங்கை பயணிக்கமுயன்றதாகவும் பொலிஸாரிடம் சந்தேக நபர் கூறியுள்ளார். இதையடுத்து, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குப் பின்னர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ௭திர்வரும் ரஅக்டோபர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சிரியா போர்க் குற்றவாளிகளின் ரகசிய பட்டியலை தயாரித்தது ஐ.நா

18.09.2012.By.Rajah.சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தொடர்பாக தனி நபர் மற்றும் குழுக்கள் அடங்கிய ரகசியப் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. ஐ.நா.வின் முண்ணனி புலனாய்வு அதிகாரி பௌலோ சேர்ஜியோ பின்ஹெயிரோ இது பற்றிக் கூறுகையில், ஐ.நா அதிகாரிகளிடம் உறுதியான மற்றும் அசாதாரணமான சான்று கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஐ.நா.வின் பாதுகாப்புப் பிரிவு சர்வதேச குற்றவாளிகளுக்கான நீதிமன்றத்தில் (International Criminal Court - ICC) சிரியாவின் தற்போதைய நிலைமை குறித்து வாதிட வேண்டும் என கோரியுள்ளார்.
இதேவேளை சிரியாவில் தங்கியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புக் கூறுகையில், சிரியாவில் ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்கள் தம்மிடம் அகப்பட்டுள்ள கைதிகளை சித்திரவதை செய்து வருவதாகவும், சிலருக்கு மரண தண்டனை கூட விதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அரசின் ஆதரவு படைகள் மேற்கொள்ளும் போர் நிறுத்த மீறல்களே மிக அதிகளவில் பரவியிருப்பதாகவும் இவர் கூறியுள்ளார்

தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்களவர்களின் ஆதிக்கம்! இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்! இலங்கை அகதிகள் கோரிக்கை

 
 
18.09.2012.By.Rajah,இலங்கையில் தமிழர்களின் பூர்வீக இடங்கள் சிங்கள மக்களின் ஆதிக்கம் பெற்ற பகுதிகளாகி வருவதாகக் கேள்விப்படுகிறோம். அதனால் நாங்கள் இலங்கைக்கு செல்ல விரும்பவில்லை. இந்திய அரசு எங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்தனர்.
புதுடில்லியில் சனி, ஞாயிறு இரு தினங்களாக தினமணியும், டில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய அகில இந்திய தமிழ் அமைப்புகள் மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், காண்டியபுரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி அமைப்பில் இருந்து அதன் தலைவர் எஸ்.ஆர். அந்தோனி, செயலர் பாலகிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கர் என்கிற ஏசுதாஸ், உதவிச் செயலர் பிரான்ஸிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநாடு குறித்தும், தங்களுடைய எதிர்பார்ப்பு குறித்தும் "தினமணி' செய்தியாளரிடம் அவர்கள் கூறியது:
அகதிகள் முகாமை விட்டு நாங்கள் வெளிமாவட்டம் செல்வதற்கே முகாம் ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் தினமணியும், டில்லித் தமிழ்ச் சங்கமும் உலகத் தமிழர்களை ஒன்றுசேர்க்க ஒரு மாநாட்டை நடத்துகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்வுற்றோம்.
மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற எங்களது ஆவலைப் பூர்த்தி செய்ய சட்ட ஆலோசகர் புனித தேவகுமார் ஆலோசனை அளித்தார். அதன் பேரில் முகாமின் ஆணையரிடம் உரிய அனுமதி பெற்று இந்த மாநாட்டில் பங்கேற்றோம்.
வெளிநாடுகளில் வாழும் எங்களது உறவுகளைச் சந்திப்பதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து வந்தோம். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களைப் பார்த்தபோது மனம் நெகிழ்ந்தது.
1983-ம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின்போது அகதிகளாக இந்தியா வந்த தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து ஆதரவுக் கரம் நீட்டிய இந்திய அரசையும், தமிழக அரசையும் எங்களால் மறக்க முடியாது.
தமிழகத்தில் உள்ள 117 முகாம்களில் சுமார் 70,000 அகதிகள் இருக்கிறோம். வெளிப்பதிவாக 50,000 அகதிகள் உள்ளனர். இவர்களில் 32,000 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் இருந்தவர்கள்.
அகதிகளாக தமிழகம் வந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் அளித்தாலும் குடியுரிமை, வாக்குரிமை இல்லாததால் நாடற்றவர்களாக உணர்கிறோம்.
கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை என பலவற்றையும் முறைப்படி பெற முடியாதவர்களாக இருந்து வருகிறோம்.
இலங்கையில் சூழல் மாறுவதாகத் தெரியவில்லை. அப்படியே மாறினாலும் அங்கே செல்ல விரும்பவில்லை.
காரணம், அகதிகளாக இங்கு வந்த பலரும் முதியவர்களாகிவிட்டனர். அவர்களது குழந்தைகள் வளர்ந்துவிட்டனர். அவர்களுக்கு இலங்கையும், அங்கிருக்கும் பழக்கம், கலாசாரம் தெரியாது. அவர்கள் இந்தியக் கலாசாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டனர்.
ஆகவே, எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களின் பூர்விக இடங்கள் சிங்கள மக்களின் ஆதிக்கம் பெற்ற பகுதிகளாகி வருவதாகக் கேள்விப்படுகிறோம்.
நாங்கள் மீண்டும் இலங்கைக்குச் சென்றால் எங்களை இந்தியர்களாகத்தான் பார்க்கின்றனர். அங்கிருந்து இங்கே வந்தால் இலங்கை அகதிகளாகப் பார்க்கின்றனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலரும் இந்தியக் குடியுரிமை பெற விரும்புவதால் இக்கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்.
இது குறித்து தமிழக முதல்வரையும், மத்திய அரசையும் அணுக டில்லித் தமிழ்ச் சங்கம் மூலம் முயற்சி மேற்கொள்ள இருக்கிறோம் என்றனர்

InBox Pause: ஜிமெயிலின் பயனுள்ள வசதி

18.09.2012.By.Rajah.உலகில் பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையில் முதலிடம் வகிப்பது ஜிமெயில் ஆகும். விடுமுறைக்கு செல்லும் போது அல்லது முக்கிய கூட்டத்தில் இருக்கும் போது ஜிமெயிலை பார்வையிட்டால் உங்கள் கவனம் சிதறிவிடலாம்.
இதை தடுக்கவே உருவாக்கப்பட்டது InBox Pause என்ற Chrome மற்றும் Firefox உலாவிகளில் கிடைக்கும் Extension.
இதை நிறுவியதும் Mail dropdown மெனுவில் Pause அல்லது Unpause செய்ய வசதியாக பட்டன்கள் தோன்றும்.
மேலும் இன்பாக்ஸை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மற்றவர்களுக்கு Auto-Responder மூலம் தெரியப்படுத்தலாம்.
இணையதள முகவரி

காதுகளை செவிடாக்கும் வலி நிவாரண மாத்திரைகள்: பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை

18.09.2012.By.Rajah.தலைவலி மற்றும் உடல் வலிக்காக பெண்கள் பயன்படுத்தும் சாதாரண வலி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்காக 62 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவிகிதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது தெரியவந்தது.
அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவிகிதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை வாரத்துக்கு 6 தடவை பயன்படுத்தினால் 21 சதவிகிதம் செவிட்டு தன்மையும் ஏற்படுவதாகவும், அதேநேரத்தில் ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிடும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள்

18.09.2012.By.Rajah.உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.
அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.
ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.
மீன் எண்ணெய் என்றால் என்ன?
இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.
இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.
எதற்கு சாப்பிட வேண்டும்?
இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.
எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.
இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.
மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்

தூதரகங்களில் பெருகிவரும் வன்முறை குறித்து அமெரிக்கத் தூதர் வருத்தம்

18.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தின் அமெரிக்க நாட்டுத் தூதரான டோனால்ட் பேயெர், ஜுரிச் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் இஸ்லாமை கேலி செய்யும் படத்துக்கு எதிரான வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். கோபம் வன்முறையாக மாறும்போது பலருக்குப் துன்பம் தருகின்றது என்று வருந்திய பேயெர் லிபியாவில் கொல்லப்பட்ட அமெரிக்கத்தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவென்ஸ் மற்றும் மூன்று அதிகாரிகளின் மரணம் குறித்து கவலை தெரிவித்தார்.
பெங்காஸி நகரில் நடந்த இந்தக் கொலை இஸ்லாமியரின் கோபம் வன்முறையாக மாறியதால் ஏற்பட்ட தீய விளைவாகும்.
'The Innocence of Muslims' என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் முன்னோட்டம் முகம்மது நபிகளைப் பெண்பித்தராகவும், மோசடிக்காரராகவும் காண்பித்ததால் உலகமெங்கும் அமெரிக்கத் தூதரகங்கள் முஸ்லீம்களால் தாக்கப்படுகின்றன. 14 நிமிடம் ஓடும் இந்தத் திரைப்பட முன்னோட்டத்தை சில நாடுகள் தங்கள் இணையதளங்களில் தடை செய்துவிட்டன.
பத்திரிகையாளர் பேயெரிடம் அவர் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறாரா என்று கேட்டதற்கு உலகிலேயே பாதுகாப்பான நாடு என்றால் அது சுவிட்சர்லாந்து தான் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
மேலும் தேவையான அளவிற்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்

குடிகார ஓட்டுநரால் பாதிக்கப்பட்ட ஆறு மாடுகள்

18.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில் வாட் மாநிலத்தில் மாண்ட்ரேக்கு அருகில் கடந்த வாரக்கடைசியில் ஒருவர் குடித்துவிட்டு வண்டியை சாலை ஓரத்தில் நின்ற ஆறு மாடுகள் மீது மோதியுள்ளார். அடிபட்ட ஆறுமாடுகளில் இரண்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தன. இன்னும் இரண்டு படுகாயமுற்றதால் கருணைக் கொலைக்காக காத்திருக்கின்றன. அடுத்த இரண்டில் ஒன்றிற்கு இடுப்பெலும்பு முறிந்துவிட்டதால் அதனைக் கொன்று விடலாமா என்று ஆலோசித்து வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய 30 வயது இளைஞர் முறையான ஓட்டுநர் உரிமம் பெறாதவர். குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் நிலைதடுமாறி வண்டியை வேலிக்குள் விட்டுள்ளார், அங்கிருந்து வண்டியைத் திருப்பியதில் ஒரு தண்ணீர் தொட்டி மீது மோதியுள்ளார். இறுதியாக வண்டியை சாலைக்குக் கொண்டுவந்து உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த விபத்து ஃபிரிபோக் மாநிலத்தில் உள்ள செயிண்ட் டெனிஸ் என்ற நகரத்திலிருந்து செயிண்ட் லீகர் என்ற நகரத்துக்குப் போகும் சாலையில் நடைபெற்றது.
மாடுகளின் உரிமையாளர்களில் ஒருவரான பேட்ரிக் கோஹ்லி, மாடுகள் வேதனையில் துடிக்கும்போது இந்த நபர் ஓடிவிட்டதுதான் எனக்கு கோபத்தைத ஏற்படுத்துகிறது என்றான்