
ஈராக்கில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 36 பேர் கொல்லப்பட்டனர். தியாலா மாகாணத்தில் உள்ள காலிஸ் சிறைச்சாலையில் இன்று கைதிகளுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதுபற்றி சிறையின் பாதுகாப்பு வீரர்கள் விசாரிக்க சென்றபோது மீண்டும் பிரச்சினை உருவானது.
நிலைமை எல்லை மீறியதால் பாதுகாப்பு படையினர் ஆயுத பிரயோகத்தில் ஈடுபட்டனர். கைதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 6 போலீஸ்காரர்கள் மற்றும் 30 கைதிகள்...