siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 15 அக்டோபர், 2012

இலங்கைக்கு எதிரான அறிக்கை தொடர்பில்

 
திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012,By.Rajah.
இரகசிய கலந்துரையாடல்ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மாநாட்டில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது.
இந்த மாநாட்டுக்காக அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா செல்லவிருப்பதாக ஏற்கனவே சென்றிருந்தது.
இந்த நிலையில் குறித்த குழு ஐக்கிய நாடுகள் சபையில் முகம் கொடுக்கவுள்ள சவால்கள் தொடர்பில் இரகசிய கூட்டம் ஒன்றை நடத்த கலந்துரையாடியுள்ளது.
இதில் மனித உரிமைகள் அமைப்புகள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளின் 30க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள அறிக்கை தொடர்பில் அவர்கள் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்

 
திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012,By.Rajah.
கண்டி ஆதார வைத்தியசாலையில் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் இன்று அதிகாலை பெற்றெடுத்துள்ளார்.
ஐந்து பிள்ளைகளில், ஆண்கள் குழந்தைகள் மூவர் எனவும் பெண் குழந்தைகள் இருவரும் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 வயதான தாயார் ஒருவருக்கே ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும் பிள்ளைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்

விளையாட்டால் வந்த விபரீதம்

         
Monday 15 October 2012.By.Rajah.
45 மாணவர்கள் வைத்தியசாலையில் !  இரத்தினபுரி பொத்குல் விகாரையைப் பார்வையிடுவதற்காகச் சென்ற மாணவர்கள் 45 பேர் குளவித் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளனர்.

கிக்கடுவை பிரதேச பௌத்த அறநெறிப் பாடசாலை மாணவர்கள் 45 பேரே குளவித் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் நேற்று குளவித் தாக்குதலிற்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விகாரைப் பகுதியில் உள்ள மரமொன்றில் இருந்த குளவிக் கூடு ஒன்றிற்கு மாணவர் ஒருவர் கல் எறிந்துள்ளார்.

இந்நிலையிலேயே குளவிகள் கலைந்து மாணவர்களை தாக்கியுள்ளது.

எப்படியிருப்பினும் குளவித் தாக்குதலிற்கு இலக்கான மாணவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்

இலங்கையில் 15 வயது மகன் 26 வயதான பெண்

          
Monday 15 October 2012  By.Rajah.
 ஒருவருடன் திருமணமா 15 வயது மகனை 26 வயதான பெண் ஒருவருக்கு மணம் முடித்துக் கொடுக்குமாறு சிறுவனின் பெற்றொர், பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த விசித்திரமான கோரிக்கை அத்துருகிரிய பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டது.
அத்துருகிரிய பிரதேசத்தில் வாழும் 15 வயதான தமது மகன், மாலம்பெ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனவே இவர்கள் இருவரையும் சட்ட ரீதியான இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளனர்.
குறித்த பெண் ஏற்கனவே விவாகமாகியுள்ளதாகவும், கணவர் குறித்த பெண்ணை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
15 வயது சிறுவனை மணம் முடிப்பதற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்நடவடிக்கை இலங்கை கலாச்சாரத்திற்கு பொருத்தமற்றது எனவும், சிறுவனை விடவும் வயது கூடிய பெண் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டாம் என அத்துருகிரிய சிறு முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பதிகாரி ஜே.ஏ. கிறிஸ்டோபர் முறைப்பாடு செய்த தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்

சோகத்தை மறக்க சினிமா தான் பெஸ்ட்: நயன்தாரா

Monday, 15 October 2012, By.Rajah.  சோகத்தை மறக்க சினிமாவும், எனது குடும்பமும் தான் எனக்கு பெரும் உதவியாக உள்ளது என்கிறார் நயன்தாரா  சிம்புவை காதலித்து பிரிந்த நயன்தாரா, அதன்பின் பிரபுதேவாவை காதலித்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீரென பிரிந்த பின்பும், இது குறித்து அதிகம் பேசாமல் இருந்தார் நயன்தாரா.
இந்நிலையில் ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நடித்ததற்காக ஆந்திர அரசின் நந்தி விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நயன்தாரா கூறுகையில், ஸ்ரீராம ராஜ்யம் படம் நான் எதிர்பார்க்காமல் எனக்கு கிடைத்தது. கவர்ச்சி வேடங்களில் இருந்து ஒதுங்கி, குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்தபோது இப்படம் கிடைத்தது.
அப்போது எழுந்த விமர்சனங்களுக்கு எல்லாம் நான் அமைதி காத்தேன். இந்த படம் மூலம் விமர்சகர்களுக்கு பதில் அளித்தேன். அது எல்லாம் சீதை வேடத்தில் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டதால் நடந்தது.
தொடர்ந்து ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண கதை படங்களில் நடிக்க விரும்புகிறேன். நான் வித்தியாசமான பெண், எந்த நிலையிலும் வெற்றி பெறுபவள் என சிலர் கூறலாம். ஆனால் நான் மற்றவர்களை போல் சாதாரணமானவள்தான்.
குளிர், மழை, வெயில் என எந்த சீசனிலும் உழைத்துக் கொண்டே இருப்பது எனக்கு பிடித்தது. சினிமாதான் எனக்கு எல்லாமே. எனக்கு ஏற்பட்ட பிரச்னைகள், இதயம் உடைந்த சம்பவங்கள் ஆகியவற்றிலிருந்து என்னை மீட்டது சினிமாதான்.
எனது சோகத்தை மறக்கச் செய்த மருந்து, எனது பணிதான். அதே போல் எனது குடும்பமும் எனக்கு உறுதுணையாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்

விஜயநகரத்தில் திருக்குறளை பாடலாக்கிய இயக்குனர்

 Monday, 15 October 2012, By.Rajah.
இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தன்வீர் இயக்கும் படம் விஜய நகரம்.
இது பற்றி அவர் கூறுகையில், கல்வியை வியாபாரமாக்ககூடாது. பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவர் படிப்பை படிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
ஆனால் அனைத்து தரப்பினருக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டு கதை உருவாகி உள்ளது.
சிவன் கதாநாயகனாகவும், ஹாசினி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பானுசந்தர், ஆர்யன், சஷி, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
கானா பாடகர் மரணகானா விஜி பாடகராகவும், நடிகராகவும் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் சிறப்பு அம்சமாக திருக்குறளில் இருந்து கல்வி பற்றிய 10 குறள் தெரிவு செய்து அது பாடலாக்கப்பட்டிருக்கிறது