siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

சிரியா தாக்குதலிலிருந்து துருக்கியை பாதுகாக்கும் அமெரிக்கா

சிரியாவின் தாக்குதலில் இருந்து அதன் அண்டை நாடான துருக்கியைக் காப்பாற்ற பேட் நியாட் ஏவுகணைகளோடு அமெரிக்க ராணுவம் துருக்கி சென்றுள்ளது.
துருக்கியில் எல்லைப்பகுதிகளில் உள்ள நகரங்களில் ஸ்கட் ஏவுகணைகளை சிரியா கொண்டு வந்ததும் அமெரிக்கா, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து துருக்கிக்கு பாதுகாப்பு அளிக்க முன் வந்துள்ளன.

இதன்படி அமெரிக்கா பேட்ரியாட் ஏவுகணைகளை கொண்டு வந்துள்ளது.

இனி சிரியா, துருக்கி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா சிரியாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும்.

துருக்கியின் கஸியன்டேல் எனும் இடத்தில் 27 அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன. துருக்கியின் அரசு செய்தி நிறுவனமான அனடோலு இத்தகவலை வெளியிட்டது.

எனினும் அமெரிக்கா தனது படைகள் துருக்கி சென்றிருப்பது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

கடந்த மாதம் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் லீயோன் பானெட்டா, இந்த பகுதியில் உள்ள நாடுகளை தாம் பாதுகாக்கப்போவதாக தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வடகொரியா ஜனாதிபதியின் துணைவிக்கு குழந்தை பிறந்து விட்டதா?

வடகொரிய தலைவர் கிம் ஜாங்கின் துணைவிக்கு குழந்தை பிறந்து விட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜாங்கின் துணைவி ரி சோல் ஜு. கடந்த டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் கிம் ஜாங்குடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அப்போது கருப்பு உடை அணிந்திருந்த சோல் ஜுவின் வயிறு பெரிதாக இருந்ததை தென்கொரிய தொலைக்காட்சிகள் டிசம்பர் 17ம் திகதி அடிக்கடி ஒளிபரப்பின.

இதனால் அவர் கர்ப்பமாக இருக்கலாம், அதை மறைக்கதான் தளர்வான கருப்பு உடை அணிந்திருக்கிறார். விரைவில் வட கொரியாவின் தலைவருக்கு குழந்தை பிறக்கலாம் என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டன.

ஆனால் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் ரி சோல்ஜு பங்கேற்ற போது, வயிறு பெரிதாக காணப்படவில்லை, சாதாரணமாகவே இருந்தது.

இதனால் அவருக்கு குழந்தை பிறந்திருக்கலாம். அதனால்தான் ஸ்லிம்மாக இருக்கிறார் என்று இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

எனினும் வயிறு பெரிதாக இருப்பதை வைத்து எதுவும் சொல்வதற்கில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

நிஜமாகவே சோல் ஜு கர்ப்பமாகத்தான் இருந்தாரா? இப்போது குழந்தை பிறந்துவிட்டதா? இதுகுறித்து வடகொரிய அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.