siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 25 மே, 2013

மதுபான விற்பனைக்கு தடை விதித்த துருக்கி

 துருக்கியில் மதுபானங்கள் விற்பனைக்கு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு, தொலைக்காட்சிகளிலும் மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள துருக்கி நாடு, மதச்சார்பற்ற நாடாக விளங்குகிறது. அந்நாட்டின் இளைஞர்கள் மதுபானங்கள் மீது ஆர்வம் கொள்வதைத் தடுக்கும் வகையில், மதுபான விற்பனை மற்றும் விளம்பரத்திற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவைகளில் தினமும், இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை மதுபானம்...

சுமார் இருபது ஹரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம்

அட்லாண்டிக் கனடா பகுதியை வருகின்ற யூன் மாதம் முதல் அடுத்தடுத்து 13 முதல் 20 அரிக்கேன் புயல்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக கனடாவின் அரிக்கேன் மையமும், அமெரிக்காவில் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக மையமும் அறிவித்துள்ளது. இது குறித்து கனடா மையத்தின் திட்டக் கண்காணிப்பாளர் கிறிஸ் போகர்ட்டி(Chris Fogarty) கூறுகையில், வருகின்ற யூன் மாதம் முதல் வீச போகும் அரிக்கேன் புயல்களில் மூன்று முதல் ஆறு புயல்கள் பெரும் புயல்களாகவும், அடுத்த பதினோரு புயல்கள்...

உலகில் 26 கோடி பேர் சாதி பாகுபாட்டின்,.,

உலக முழுவதும் சாதி அடிப்படையில் மக்களை பிரித்து அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுவதை கணக்கிட ஐ.நா. அமைப்பு தன்னார்வ தொண்டர்களை நியமித்து ஆராய்ந்தது.அவர்கள் உலக முழுவதும் 26 கோடி மக்களுக்கு மேல் சாதிப் பிரிவினையின் கீழ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். குறிப்பாக தெற்கு ஆசிய நாடுகளில் மனித உரிமைகளை மீறி இவ்வாறு சாதிப்பிரிவினையால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க கடுமையான சட்ட திட்டம் கொண்டு வரவேண்டு ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும்...

பாதியிலேயே தரையிறங்கிய விமானம்:

 பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாகாண தலைநகரான லாகூரில் இருந்து பி,கே709 என்ற பாகிஸ்தான் சர்வதேச விமானம் நேற்று காலை 9.35 மணிக்கு பிரிட்டன் மான்செஸ்டர் நகர் நோக்கி புறப்பட்டு சென்றது.பிரிட்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கு மான்செஸ்டர் செல்ல வேண்டிய அந்த விமானத்தில் 297 பயணிகள் இருந்தனர். மான்செஸ்டர் நகரை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், அந்த விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த செய்தியை அடுத்து பிரிட்டன் போர் விமானங்கள் பாகிஸ்தான் விமானத்தை இடைமறித்தன....

பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் ஆவி நடமாட்டமா?

 ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பானின் புதிய பிரதமராக ஷின்சோ அபே பொறுப்பேற்றார்.6 மாதங்கள் ஆகியும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள இல்லத்துக்கு அவர் குடிபெயரவில்லை.பிரதமரின் அரசு இல்லத்தில் ஆவி நடமாடுவதாகவும், அதன் காரணமாக அந்த இல்லத்துக்கு குடிபெயர அபே மறுத்து வருவதாகவும் புரளி நிலவுகிறது.இது உண்மையா? என எதிர்க்கட்சி உறுப்பினர்...

சர்ச்சையை உருவாக்கியுள்ள லண்டன் வூலிச்

லண்டனின் வூலிச் பகுதியில் கடந்த புதனன்று வீதியில் வைத்து பிரிட்டிஷ் படைவீரர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை முன்கூட்டியே தடுத்திருக்கலாம் என்ற கருத்தை பிரித்தானிய அரசு நிராகரித்துள்ளது. கொலையாளிகளிடமிருந்து முன்கூட்டியே வெளிப்பட்ட சமிக்ஞைகளை அதிகாரிகள் தவறவிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சம்பவ இடத்தில் பிடிபட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் இரண்டுபேரும் பிரித்தானிய எம்-ஐ-5 புலனாய்வுப் பிரிவினரால்...