siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 11 டிசம்பர், 2012

ஜேர்மனியின் ரயில் நிலையத்தில் குழாய் வெடிகுண்டு?

ஜேர்மனியில் உள்ள பான் ரயில் நிலையத்தில் ஒரு பை நடைபாதையில் கேட்பாரற்றுக் கிடப்பதாகவும் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்று அச்சம் உண்டாவதாகவும் தொலைபேசித் தகவல் கிடைத்தது. உடனே, வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் படையினர் விரைந்து வந்தனர். அந்தப் பையிலிருந்த குழாய் வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். இதற்காக அரைமணி நேரம் அந்த இடத்திற்குள் யாரையும் வரவிடவில்லை. நேற்று மதியம் 2 மணியளவில் பான் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல் கிடைத்ததும்...

சுவிஸ் பிரஜையாக மாற விரும்பும் பொப் பாடகர்

பிரித்தானியா நாட்டைச் சேர்ந்த 38 வயது பாடலாசிரியர் மற்றும் பொப் இசை பாடகரான ஜேம்ஸ் பிளண்ட் வெர்பியரில் La vache (பசு) என்ற பெயரில் ஓர் உணவகத்தை ஆரம்பித்திருந்தார். அங்கு நடந்த பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், வெர்பியர் எனது இல்லமாக தோன்றுகிறது. நான் சுவிஸ் குடியுரிமை பெற்று இங்கு தங்கவே விரும்புகிறேன். எனக்கு உச்சிப்பனிச் சறுக்கு விளையாட்டிலும் சமையலிலும் அதிக ஈடுபாடு இருப்பதால் இந்த இரண்டு விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக...

ஐ.நாவின் சிறப்பு ஆலோசகராக மலாலாவின் தந்தை நியமனம்

தலிபான்களால் சுடப்பட்ட சிறுமி மலாலாவின் தந்தை ஜியாவுதீன் யூசுப்சாய், ஐ.நா சபையின் சர்வதேச கல்விக்கான சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் கல்விக்கான சிறப்புத் தூதர் கோர்டன் பிரெளன் அறிவித்தார். அவர் கூறுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மலாலாவும், கல்விக்கான பிரசாரத்தில் தந்தையுடன் சேர்ந்து பணியாற்றுவார். 2015ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து பெண்களும் கல்வி அறிவு பெற்றவர்களாக...

ஜப்பானில் மேலுமொரு அணு மின்நிலையம் மூடப்படும் சாத்தியம்

  கடந்த ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை அழிவுகளினால் புகுஷிமா அணுமின் நிலையம் கசிவு ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து மற்ற அணுமின் உற்பத்தி நிலையங்களில் தீவிர ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள திசுரூகா அணுமின் நிலையத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் ஆய்வு செய்த போது இரண்டாவது ரியாக்டர் இருக்கும் இடம் பூமி அதிர்ச்சி ஏற்படும் இடம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. எனவே...

யூடியூப்புக்கு பதிலாக ஈரானில் புதிய இணையத்தளம் தொடக்கம்

இணையத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகள் பரப்புவதை தடுக்க ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற இணையத்தளங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு தகவல்கள் வெளிவருவதாக ஈரான் அரசு தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இதனையடுத்து யூடியூப் உட்பட பல்வேறு இணையத்தளங்களை ஈரான் அரசு தடை செய்துள்ளது. இதனால் மக்கள் தகவல்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் www.mehr.ir...