siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏனைய செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2019

திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்


திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்று சர்வதேச செய்திகள்
தெரிவித்துள்ளன.
இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 13 பிப்ரவரி, 2019

இலங்கையர்களுடன் ரியூனிஷின் தீவை சென்றடைந்த கப்பல்

பெருமளவு இலங்கையர்களை ஏற்றிய கப்பல் ஒன்று பிரான்ஸிற்கு சொந்தமான தீவான ரீயூனியனை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பெண்கள், சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்கள்
 இந்த கப்பலில் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.குறித்த கப்பல் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பிரான்ஸ் தீவை நோக்கி பயணித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 9ஆம்
 திகதி நீர்கொழும்பில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பல், 25 நாட்களுக்குள் ரீயூனியன் தீவை நெருங்கியுள்ளது
சிலாபம் மீன் வர்த்தகரான சுதர்ஷன் பெரேரா என்பவருக்கு சொந்தமான கப்பலை மஹவெவ பிரதேசத்தை சேர்ந்த பெர்னாண்டோ என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இந்தக் கப்பலை ஓட்டியவர் ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கப்பல் உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸ் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.கடந்த மாதம் 9ஆம் திகதி கப்பல் உரிமையாளர் தேவையான உணவு மற்றும் ஐஸ் ஆகியவற்றை வழங்கி மீன் பிடிக்க அனுப்பியுள்ளார். இதன் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் பயணித்தவர்களிடம் 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்
 கிடைத்துள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 18 ஏப்ரல், 2018

உலகைக் கலங்க வைத்த புகைப்படத்துக்கு புலிட்சர் விருது!

கடந்த ஆண்டுக்கான புலிட்சர்  பிரேக்கிங் நியூஸ் போட்டோகிராபி விருது `டெய்லி ப்ராக்ரஸ்' பத்திரிகையின் ரேயான் கில்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. 
ஒவ்வோர் ஆண்டும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் புலிட்சர் விருது
 வழங்குகிறது. இந்த ஆண்டு 15 பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் போட்டோகிராபி பிரிவில், ரேயான் கில்லிக்குக் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் சார்லட்டேஸ்வில்லி 
நகரில் இனவெறிக்கு எதிரான போராட்டம் நடைபெற்றபோது, ஒருவர் காருடன் கூட்டத்திற்குள் பாய்ந்தார். மக்கள் தூக்கி எறியப்பட்டனர். இந்தக் காட்சியை ரேயான் கில்லி படம் எடுத்திருந்தார். தி டெய்லி ப்ராக்ரஸ் பத்திரிகைக்காக ரேயான் கில்லியின் கடைசி அசைன்மென்டும் இதுதான். தற்போது, ஃப்ரீலான்ஸர் புகைப்படக் கலைஞராக அவர் 
பணியாற்றுகிறார். 
future photography- பிரிவில் ரோகிங்யா முஸ்லிம் மக்களின் அவல நிலையைப் படம் பிடித்த வகையில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு புலிட்சர்  விருது கிடைத்துள்ளது.  2017- ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி, மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்குத் தப்பி வந்த ரோகிங்யா மக்களின் படகு
 டெக்னாஃப் நகர கடற்கரையை நெருங்குகையில் கடலில் கவிழ்ந்தது.
 இந்த விபத்தில் பெண் ஒருவரின் கைக்குழந்தை தண்ணீருக்குள் மூழ்கி இறந்து விடும். கைக்குழந்தையை முகத்தின் மீது முகம் வைத்து அந்தத் தாய் அழும் காட்சியை ராய்ட்டர்  என்ற புகைப்படக் கலைஞர் பதிவு செய்தார். இந்தப் புகைப்படமும் future photography பிரிவில் புலிட்சர் விருது பெற்றுள்ளது. இந்த விருது 15,000 அமெரிக்க டாலர்கள் ரொக்கப் பரிசு 
கொண்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 12 செப்டம்பர், 2016

பிரான்ஸ்- பிரித்தானியா இடையே அகதிகளை தடுக்க பெருஞ்சுவர்!

அகதிகளை தடுக்கும் முகமாக பிரான்ஸின் வடக்கு பகுதியான கலேவில் பெருஞ்சுவர் கட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
கலே காட்டுப்பகுதிக்குள் தங்கியிருக்கும் அகதிகள், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்கவே இந்த பெருஞ்சுவர் கட்டப்படுவதாக பிரித்தானியா 
குறிப்பிட்டுள்ளது.
4 மீற்றர் உயரமும் 1 கி.மீ நீளமும் கொண்ட மாபெரும் சுவர் எழுப்புவதற்கு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்தே இப்பணிகளை பிரித்தானிய அரசு ஆரம்பித்துள்ளது என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்காக, பிரித்தானிய அரசு சுமார் 2.7 மில்லியன் யூரோக்கள் வரை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டப்பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு பெறுமென 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டிற்கு விரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்
இந்த வருடம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பாரிஸ் நகரில்
 நடைபெற உள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சி. சிறிதரன், சீ.யோகேஸ்வரன், ஈ.சரவணபவன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக பிரான்ஸ் நோக்கி பயணமாக உள்ளனர்.
இன்றைய சூழலில் தமிழ் மொழியும் கலாச்சாரமும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கும் முகமாக இந்த மாநாடு 
நடாத்தப்படவுள்ளது.
தொடர்ச்சியாக தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கானல் நீராக மாற்றப்பட்டு கொண்டு வருகின்ற இக் காலகட்டத்தில் தமிழ் இளைஞர் இடையே கலாச்சார சீரழிவை உருவாக்கி கொண்டு வரும் இக் காலப்பகுதியில் இம் மகாநாடு மிகவும்
 பிரதானமானதாகும்.
இம்முறை பாரிஸ் 17 La Fourche க்கு அண்மையில் உள்ள சர்ச் மண்டபத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு வெகு சிறப்பாக இடம் பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள்
 தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொறிசியஸ், றியூனியன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் தமிழ்ப் பேராளர்கள் பலர் குறித்த மாநாட்டில் கருத்துரை வழங்கவுள்ளனர்.
மேலும் தமிழரின் வரலாற்றுத் தொன்மைகள் பற்றிய ஆய்வரங்கம், பிரபல கவிஞர்கள் பங்கு கொள்ளும் கவியரங்கம், அரங்கமும் அதிர்வும் எனும் பல்சுவை நிகழ்வுகள் போன்றவற்றுடன் நடனம், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், நாட்டுக்கூத்துகள் என தமிழர் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணக் கண்காட்சியுடன் விழாவின் சிறப்புமலர் வெளியீடும் இடம்பெறவுள்ளது.
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை. கணேசலிங்கம், தலைவர் வி. சு. துரைராஜா, மாநாட்டு செயலாளர் ம. இரவீந்திரநாதன், மாநாட்டின் தலைவர் இ. க அரியரத்தினம் போன்றோர் உட்பட உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து இந்த மாநாட்டிற்கு அனைவரையும் அழைக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 22 ஆகஸ்ட், 2016

கோட்டை புகையிரத நிலையத்தில் நெதர்லாந்தின் இளம் தம்பதிகள்! கைது

நெதர்லாந்தின் இளம் தம்பதிகள் கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் வகுப்பு டிக்கட்டுடன் சிலாபம் கோட்டை புகையிரத முதலாம் வகுப்பில் பயணம் செய்தமைக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
முதலாம் வகுப்பு சொகுசு உறங்கும் அறையை கொண்ட இவர்கள் பொலிஸார் பல முறை முயற்சித்தும் கூட அறையை திறக்காதமையால் புகையிரதம் தாதமானது.
இந்த நிலையிலேயே குறித்த தம்பதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 19 ஜூலை, 2016

நாய்களை பாம்புக் கடியிலிருந்து பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு!

ஆஸியில் விசப்பாம்புக் கடிக்கு உள்ளாகும் ஆயிரக் கணக்கான நாய்களை சிசிச்சையளிப்பதற்கென Anti-Venom கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
CSIRO scientists, சிறிய பயோடெக் நிறுவனமான Padula Serums உடன் இணைந்து Eastern Brown மற்றும் Tiger பாம்புக்கடிக்கெதிராக சிகிச்சையளிப்பதற்கென Anti-Venom தயாரிக்கும் பணிகளில்
 ஈடுபட்டிருந்தனர்.
ஆஸியானது உலகத்திலேயே மிகக் கொடிய 10 பாம்புகள் வசிக்கும் இடமாக உள்ளது.
இது வரையிலும் Anti-Venom ஆனது மனிதர்களுக்கு சிகிச்சையளிக்கவே பயன்படுத்தப்பட்டு வந்தது, வளர்ப்புப் பிராணிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
ஆனாலும் தற்போது இது நாய்கள் மற்றும் பூனைகளுக்கென பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் மேற்படி உற்பத்தி நிறுவனத்தின் பணியாளர் George Lovrecz கூறுகையில், தற்போது தயாரிக்கப்பட்டுள் Anti-Venom ஆனது முற்றாக பரிசோதிக்கப்பட்ட, தூய பதார்த்தம், இது பாம்புக்கடிக்குள்ளான நாய்களுக்கு நேரடியாக உட்செலுத்த முடியும் என்கிறார்.இது திறனுள்ளதும், பாதுகாப்பானதும் என்பதுடன் மிக குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சொல்லப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 3 ஜூன், 2016

இங்கிலாந்து: ஐரோப்பாவிலிருந்து பிரிந்து செல்ல விரும்பும் ஈழத்தமிழரும் வாக்களிக்கலாம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வது தொடர்பான சர்வசன வாக்கெடுப்பை இங்கிலாந்து தேசம் இந்த மாதம் 23ம் திகதி 
நடத்தவுள்ளது.
ஐரோப்பாவிற்கு வரும் அகதிகள் தாராளமாக இங்கிலாந்திற்கு வருவதும், சமூகநலக் கொடுப்பனவுகள், பிள்ளைப் பராமரிப்பு நிதியுதவி என்பவற்றை தமது நாடுகளிற்கு அனுப்புவது ஒரு எதிர்ப்பை இங்கிலாந்தில்
 கிளப்பியுள்ளது.
கடந்த வருடம் ஐரோப்பாவிற்கு வந்த 1.4 மில்லியன் அகதிகளில் சிரியர்கள், ஈராக்கியர்கள், ஆப்கானியர்களே 75 வீதமானவர்கள் என இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா
 தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 27 மார்ச், 2016

இலங்கைக்கு வந்துள்ளது சவுதியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடலம்

சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாத்தளை, உக்குவளை பரகாவெலயைச் சேர்ந்த இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரியின் உடல் நான்கு மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தாயாரான உதயகுமாரி கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி தொழிலுக்காக சவுதி அரேபியாவிற்குச் 
சென்றிருந்தார்.
தனது கணவரான தங்கராஜ் யோகராஜா, சவுதி அரேபியா சென்று 15 நாட்களில் இவரும் அங்கு சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.
இருவரும் ஒரே உரிமையாளரின் ஹோட்டல் மற்றும் வீட்டில் தொழில் புரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி இரவு, உதயகுமாரி சவுதி அரேபியாவில் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாக உறவினர்களுக்குத் தகவல் 
கிடைத்திருந்தது.
எனினும், உதயகுமாரியின் உடலை இலங்கைக்குக் கொண்டு வருவதில் நிலவிய தாமதம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உதயகுமாரியின் கணவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கைக்கான சவுதி தூதரகம் 
அறிவித்திருந்தது.
சவுதி அரேபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட உதயகுமாரியின் பூதவுடல் மாத்தளையிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக்கிரியை இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

கர்ப்பிணி பெண் ஒருவரின் பிரசவம் குளியலறையில்!!!

கனடாவில் பிரசவ வலியால் துடித்த தனது மனைவியை குளியலறைக்கு தூக்கி சென்று குழந்தையை பெற்றெடுக்க உதவிய கணவனின் அபாரச்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள செயிண்ட் அல்பேர்ட் நகரில் Darrell மற்றும் Lindsay Muzichuk என்ற தம்பதி வசித்து 
வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பிள்ளை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக மனைவி கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி 1ம் திகதி அதிகாலை 5 மணியளவில் மனைவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு கணவனை 
அழைத்துள்ளார்.
உடனே தயார் ஆகி கணவன் காரை எடுக்க வெளியே ஓடிய நேரத்தில் மனைவி வலி தாங்க முடியாமல் அலறிக்கொண்டு தரையில் படுத்துள்ளார்.
நிலையை அறிந்த கணவன் காரை எடுக்கும் முயற்சியை விடுத்து கைப்பேசி மூலம் அவசர மருத்துவர் குழுவிற்கு தகவல் அளித்துவிட்டு வீட்டிற்குள் ஓடியுள்ளார்.
தரையில் படுத்திருந்த மனைவி ‘என்னால் இனி தாங்க முடியாது. சீக்கிரம் உதவி செய்யுங்கள்’ என கதறியுள்ளார்.
உடனே மனைவியை அள்ளி தூக்கிய கணவன் அருகில் இருந்த குளியலறைக்கு ஓடி, அங்கு தரையில் படுக்க
 வைத்துள்ளார்.
மனைவியின் கால்களை பிடித்துக்கொண்டு ஒரு மருத்துவரைபோல் மனைவியின் வயிற்றை கீழ்நோக்கி அழுத்தியுள்ளார்.
இந்த நேரத்தில் குழந்தையின் தலைப்பகுதி வெளியே வந்துள்ளது. பின்னர், மேலும், 3 முறை மனைவியின் வயிற்றை அழுத்தியதும் குழந்தை முழுவதுமாக வெளியே வந்துள்ளது.
சுமார் 10 நிமிடங்கள் குளியலறையில் நடந்த இந்த போராட்டத்தின்போது திடீரென வீட்டு வாசலில் மருத்துவக்குழுவினரும் வந்துள்ளனர்.
மருத்துவர்கள் வீட்டிற்குள் வரும் அதே நேரத்தில் குழந்தையும் ‘வீர் ’என
 கதறி அழுதுள்ளது.
இது குறித்து தந்தை பேசியபோது, ‘பிரசவம் பார்ப்பது இது முதல் முறை என்பதால், பல தவறுகளை நேரிடவும் வாய்ப்புள்ளது. ஆனால், குழந்தை பிறந்ததும் உடனே கத்தி அழுதபோது தான் ‘எல்லாம் சுகமாக முடிந்துவிட்டது’ என நிம்மதி ஏற்பட்டதாக தெரிவித்தார்.
கணவனின் உதவி குறித்து மனைவி பேசியபோது, ‘சரியான நேரத்தில் எனது கணவர் உதவியதால் தான் இது சாத்தியமாகியுள்ளது. இவர் போன்ற ஒரு கணவர் கிடைத்திருப்பது எனது பாக்கியம். எங்களது பெண் குழந்தைக்கு அவா ரோஸ் என பெயர் சூட்டியுள்ளதாக உற்சாகமாக 
தெரிவித்துள்ளார்.
தம்பதியின் உதவிக்கு வந்த மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கணவனின் துணிகரச்செயலை பெரிதும் பாராட்டி அங்கிருந்து விடைபெற்று சென்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



சனி, 23 ஜனவரி, 2016

பாரிய வாகன கார் வுிபத்தில் ஈழ தமிழர் ஒருவர் சாவு!

யாழ்ப்பாணத்தில் சுதுமலையை சேர்ந்த 02 பெண் பிள்ளைகளின் தந்தையானஈழ தமிழர்  நல்லையா பத்மநாதன் – வயது 48 என்பவரே ஜேர்மனியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு காஸல் நகரத்தில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்து அனர்த்தத்தில்  உயிர் 
இழந்து உள்ளார்.
சுமார் 28 வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்து வந்து இருந்த காஸலில் பீஸா உணவகம் ஒன்றை நடத்தி வந்து உள்ளார்.
சம்பவ தினம் வாடிக்கையாளர் ஒருவருக்கு பீஸா விநியோகிக்க மனைவி சகிதம் காரில் சென்று கொண்டிருந்தபோதே விபத்து 
நேர்ந்தது.
இவர் மிக நிதானமாக வாகனத்தை செலுத்தி சென்று கொண்டிருந்தபோதிலும் பின்னால் நவீன ரக காரில் வந்த 18 வயது இளைஞன் ஒருவர் இடித்து விட்டார். இதனால் பத்மநாதனின் கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் இன்னொரு காருடன் மோதி மரத்துடனும் இடிபட்டது.
ஸ்தலத்திலேயே பத்மநாதன் இறந்து போனார். மனைவிக்கு பலத்த உட்காயங்கள்.
பிரஸ்தாப இளைஞன் அடங்கலாக இவ்விபத்தில் மொத்தம் 07 பேர் காயப்பட்டு இருக்கின்றனர்.
இளைஞன் புதிதாக சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றவர் என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்து உள்ளது.
பத்மநாதனின் மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில் மரணச் சடங்கை நடத்துவதற்காக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்..குடும்பத்தினரிடம் சடலத்தை கையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 26 நவம்பர், 2015

அதிக வெப்பமான ஆண்டு 2015: காலநிலை அமைப்பு தகவல்

உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டாக 2015 இருக்கும் என ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை அமைப்பு 
தெரிவித்துள்ளது.
1961-1990 ஆண்டுகளின் சராசரி வெப்பமாக 14 டிகிரி செல்சியஸ் பதிவானது. தற்போது 2015ம் ஆண்டு வெப்ப நிலையானது அதை விட 0.73 டிகிரி செல்சியஸ் அதிகமாகியுள்ளது.
இவ்வாறு அதிக வெப்பம் நிலவியதற்கு, எல் நினோவின் பாதிப்பு தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்த வெப்பநிலை வரவிருக்கும் 2016 ஆம் ஆண்டிலும் தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக நிலப்பரப்பு மற்றும் கடல் மேற்பரப்பு வெப்பநிலையானது இந்த அக்டோபர் மாதம் மட்டும் சராசரியாக 0.98 டிகிரி செல்சியஸ்
 நிலவியுள்ளது.
உலகத்தலைவர்கள் சந்திக்கும் பருவநிலை உச்சி மாநாடு வரும் நவம்பர் 30 ஆம் திகதி பாரீஸில் தொடங்கவிருக்கிறது, சுமார் 12 நாட்கள் நடக்கும், இந்த மாநாட்டில் உலகில் வெப்பத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், உலக அளவில் 2 டிகிரி அளவுக்கு வெப்பத்தைக் குறைக்கவும் ஆலோசிக்கப்படவுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 17 அக்டோபர், 2015

அயர்லாந்து வெற்றிஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில்

ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் சுற்றில் அர்லாந்து வெற்றி பெற்றது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டியின் தகுதிகாண் போட்டியின் டீ அணிப் பிரிவில் அயர்லாந்து மற்றும் ஜேர்மனி அணிகள் மோதின.
போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் எதனையும் போடமுடியவில்லை, எனினும் 70 ஆவது நிமிடத்தில் அயர்லாந்து கோல் ஒன்றைப் போட்டு வெற்றியை 
தனதாக்கியது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட தகுதிகாண் போட்டிகள் 9 பிரிவுகளாக நடைபெறுகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 14 அக்டோபர், 2015

ஓபன் ஸ்குவாஷ்: கால் இறுதியில் தீபிகா பலிக்கல்?

அமெரிக்க ஓபன் ஸ்குவாஷ் போட்டி அங்குள்ள பிலடெல்பியா நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால் 
இறுதிக்கு
 முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல், இங்கிலாந்து வீராங்கனை ஆலிசன் வாட்டர்சை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தீபிகா பலிக்கல் 9–11, 11–5, 3–11, 11–1, 11–6 என்ற செட் கணக்கில் ஆலிசன் வாட்டர்சை சாய்த்து கால்
 இறுதிக்குள் 
நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 10–12, 6–11, 5–11 என்ற நேர்செட்டில் எகிப்து வீராங்கனை ஒம்னெயா அப்டெல் கவ்யிடம் தோல்வி கண்டு 
வெளியேறினார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 16 ஜூன், 2015

லலித் மோடி மீது ரூ. 1700 கோடி அபராதம் விதிக்க முடிவு***

 சர்ச்சைக்குள்ளான பிரிமியர் லீக் கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது 16 வழக்குகளின் கீழ் ரூ. 1700 கோடி அபராதம் விதிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூதாகரமாக வெடித்துள்ளது.
சட்டவிரோத பணி பரிமாற்றம் ,வரிஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கிய லலித் மோடி தேடப்படும் குற்றவாளியாக மத்திய அமலாக்கத்துறை அறிவித்திருந்தது. லண்டனில் தலைமறைவாக உள்ளார்.போர்ச்சுகலில் சிகிச்சை பெற்று வரும் தனதுமனைவியை சந்திக்க பயண ஆவணங்களை சரி செய்ய மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் லலித் மோடி மீதான வழக்குகள் அனைத்தையும் மத்திய அமலாக்கத்துறை தூசி தட்டியுள்ளது. விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மத்திய அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில்,
ரூ. 1700 கோடி அபாரதம்
லலித் மோடி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு பிரிமியர் லீக் கிரிக்கெட் தலைவராக இருந்த போது ரூ. 425 கோடி பண மோசடி தொடர்பாக பி.சி.சி.ஐ சார்பில் ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது. 2010-ம் ஆண்டு இன்டர்போல் அமைப்பின் சார்பில் புளு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அந்த நோட்டீஸ் 
கெடு இன்றுவரை அமலில் உள்ளது. தவிர லலித் மோடி மீது இது போன்று பல்வேறு வழக்குகள் என 16 வழக்குகளில் லலித் மோடியிடம் ரூ. 1700 கோடி அபாரதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு மத்திய அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 14 மே, 2015

இலங்கை பெண் கணவனை காண கண்ணீர் மல்க சென்றர் (காணொளி )


தனது கணவரை காணச் சென்ற 23 வயது இலங்கை தமிழ்ப் பெண்ணையும், அவரது 3 வயது குழந்தையையும் நவ்ரு தீவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் அடைத்துவைத்துள்ளனர். 
இலங்கை தமிழ்ப்பெண்ணும் அவரது 3 வயது குழந்தையும், அவுஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் தனது கணவர் மைக்கேலுடன் இணைந்து கொள்வதற்காக ஒரு சட்டவிரோதமான படகில் பயணித்துக்கொண்டிருக்கையில், அவர்களை அவுஸ்திரேலிய கடற்படையினர் கைது செய்து நவ்ரு தீவிலுள்ள தடுப்பு முகாம்களில் வைத்து அந்த இலங்கை தமிழ்ப் பெண்ணிடம், நீ உனது கணவனை அவுஸ்திரேலியாவில் காண இயலாது. ஆகவே திரும்பி சென்றுவிடு என்று அச்சுறுத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ருத் என்ற பெயருடைய இலங்கை தமிழ்ப்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 25 மார்ச், 2015

நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர்

கார் விபத்தில் பலியான சினிமா நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர் வின் டீசல்
ப்ரைன் ஓ கார்னர்’ என்ற கதாபாத்திரத்தில், அசுர வேகத்தில் அசால்ட்டாக காரை ஓட்டிய ஸ்டைலிஷ் ஹீரோ ’பவுல் வாக்கர்’, ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படம் பார்த்த ஒவ்வோரு ரசிகனின் மனதிலும் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டார். இந்த படத்தின் தொடர்ச்சியாக வந்த படங்களிலும் அதிவேகமாக காரை ஓட்டி ரசிகர்களை பரவசத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்ற பவுல் வாக்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் பலியாகி பல ரசிகர்களை ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தினார். 
அவரது சக நடிகரும், உயிர் நண்பருமான ’வின் டீசல்’ பவுலின் மரணத்திற்கு பல மேடைகளில் அஞ்சலி செலுத்தி இருந்தாலும், விரைவில் திரைக்கு வர இருக்கும் ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ திரைப்பட வரிசையின் 7 வது பாகமான ’ப்யூரியஸ் 7’ திரையிடல் விழாவில் தன் மகளுக்கு ’பவுலின்’ என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்து, தன் ஆருயிர் நண்பன் பவுலுக்கு தனது நினைவுகளால் அஞ்சலி செலுத்தினார். 
விழாவில் பேசிய அவர் “வேறு யாரையும் ஒரே கருவில் பிறந்தவர்களைப் போல் நான் நினைத்ததில்லை. ஆனால் பவுல்... அவன் ஒரு அற்புதமான ஆன்மா... அவனுடைய நினைவை சுமந்து கொண்டிருப்பது, என் நினைவின், என் வாழ்வின் ஒரு பகுதி. திரைப்படத்தில் இருப்பது போன்றே உண்மையான வாழ்க்கையிலும் அவனுக்கும் எனக்குமான உறவு அன்பால் நிறைந்தது. ஒரு கொடூரமான கார் விபத்தினால், நான் என் 
சிறந்த நண்பனை, என் சகோதரனை இழந்து விட்டேன் “ என்று சொன்னபடி, உணர்ச்சிவசப்பட்டு மேடையில் ஸ்தம்பித்து நின்ற வின் டீசலை ரசிகர்கள் ஆசுவாசப்படுத்தினர். 
பொதுவாகவே தனது அந்தரங்க விஷயங்கள் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளாத வின் டீசல் கடந்த மார்ச் 16-ம் தேதி தனக்கும் தனது நீண்ட நாள் பெண் தோழி பலோமா ஜிமனேசுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதாக பேஸ்புக்கில் தெரிவித்தார். இவர்களுக்கு ரிலே மற்றும் வின்செண்ட் சின்க்ளேர் என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 2 மார்ச், 2015

யானைக்கு முதல் முறையாக செயற்கை கால் பொருத்தப்பட்டது !

  உலகிலேயே முதல் முறையாக தாய்லாந்தில் செயற்கை கால் பொருத்தப்பட்ட பெண் யானை சராசரி பணிகளை வழக்கம்போல் செய்து பார்வையாளர்களை அசத்தி வருகிறது. கம்போடியா எல்லையோரம் உள்ள வனப்பகுதியில் புதைத்து வைக்கப்படிருந்த கண்ணி வெடியில் சிக்கி ஒரு காலை பறி கொடுத்த மோஷா என்ற அந்த பெண் யானைக்கு தாய்லாந்தில் உள்ள ஆசியா யானைகள் மருத்துவமனயில் கடந்த 2007-ம் ஆண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மற்ற யானைகளைப் போல் இல்லாமல் மூன்று கால்களுடன் ஊனமாகி விட்டதை எண்ணி கண்ணீர் வடித்த மோஷா, பல நாட்கள் சாப்பிட மறுத்து சோர்ந்து போய் காணப்பட்டது. பிளாஸ்டிக், மரத்தூள் மற்றும் உலோகங்கள் சேர்ந்த கலவையால் மனிதர்களுக்கு பொருத்தும் செயற்கை கால்களைப் போலவே மோஷாவுக்கும் ஒரு செயற்கை காலை
 டாக்டர்கள் தயாரித்தனர்.
தற்போது, அந்த காலின் உதவியுடன் தனது வழக்கமான பணிகளை உற்சாகமாக செய்யும் மோஷாவை கவனித்து வரும் பாகன், அது தூங்கும்போது மட்டும் செயற்கை காலை கழற்றி வைத்து விடுகிறார். புதிய கால் கிடைத்தவுடன் புதிய வாழ்க்கையே 
கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இப்போதெல்லாம் சுமார் 150 கிலோ உணவு வகைகளை சாப்பிடுகின்றது. சமீபத்தில் பழைய செயற்கை காலுக்கு பதிலாக புதிதாக மற்றொரு செயற்கை காலை பொருத்திக் கொண்ட மோஷா, இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் நடமாடி வருவதாக பாகன் கூறுகிறார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 27 ஜனவரி, 2015

வான்வழி தாக்குதலில் வெளிநாட்டு தீவிரவாதிகள்பலி!

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளிக்கூ டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16–ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 133 குழந்தைகள் உள்பட 154 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து
 தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள தத்தா ஹெல் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தியது
இந்த அதிரடி தாக்குதலில் வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்பட 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். வடக்கு வஜிரிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் 
ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1,200–க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பது நினைவுகூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 23 ஜனவரி, 2015

துணி பார்சலில் கடல் ஆமைகளை இறக்குமதி செய்த வருக்கு சிறை!

 வங்காள தேசத்தில் இருந்து சிங்கப்பூருக்கு  அரியவகை கருப்பு ஆமைகளை இறக்குமதி செய்த இந்தியருக்கு
 அந்நாட்டு நீதிமன்றம் 16 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியரான ஜெய்ஸ்வால் அருண் ஹரிஷ் சந்திரா (42) என்பவர் சிங்கப்பூரில் ஜவுளி இறக்குமதி தொழில் செய்து வருகிறார்.
 இந்த இறக்குமதி உரிமத்தை பயன்படுத்தி வங்காள தேசத்தில் இருந்து குட்டைகளில் வாழும் அரிய வகை கருப்பு ஆமைகளை உரிய அனுமதி இன்றி இவர் கள்ளத்தனமாக சிங்கப்பூருக்கு 
இறக்குமதி செய்துள்ளார். சங்கி விமான நிலையத்தில் சுமார் 190 ஆமைகள் கொண்ட 3 துணி பைகளை கண்டுபிடித்த சுங்கத்துறை அதிகாரிகள், அருண் ஹரிஷ் சந்திராவை கைது செய்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 14 ஜனவரி, 2015

நாடாளுமன்றத்தில் இலங்கை தேர்தல் குறித்து இன்று விவாதம்!

  பிரி்த்தானிய இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இன்று விவாதம் ஒன்று நடத்தப்படவுள்ளது. பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸ்பை என்பவர், தேர்தல் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டமைக்கு அமைய சபை, நடந்து முடிந்த இலங்கை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடலை நடத்த இணங்கியுள்ளது.
ஏற்கனவே தேர்தலுக்கு முன்னரும் பிரித்தானிய பிரபுக்கள் சபை அது தொடர்பில் விவாததங்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.இதன்போது இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் பொதுநலவாய கண்காணிப்பாளர்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>