அகதிகளை தடுக்கும் முகமாக பிரான்ஸின் வடக்கு பகுதியான கலேவில் பெருஞ்சுவர் கட்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
கலே காட்டுப்பகுதிக்குள் தங்கியிருக்கும் அகதிகள், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்கவே இந்த பெருஞ்சுவர் கட்டப்படுவதாக பிரித்தானியா
குறிப்பிட்டுள்ளது.
4 மீற்றர் உயரமும் 1 கி.மீ நீளமும் கொண்ட மாபெரும் சுவர் எழுப்புவதற்கு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டிருந்தது. அதை தொடர்ந்தே இப்பணிகளை பிரித்தானிய அரசு ஆரம்பித்துள்ளது என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்காக, பிரித்தானிய அரசு சுமார் 2.7 மில்லியன் யூரோக்கள் வரை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திட்டப்பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு பெறுமென
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாட்டிற்கு விரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்
இந்த வருடம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க மாநாடு செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பாரிஸ் நகரில்
நடைபெற உள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா, சி. சிறிதரன், சீ.யோகேஸ்வரன், ஈ.சரவணபவன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பதற்காக பிரான்ஸ் நோக்கி பயணமாக உள்ளனர்.
இன்றைய சூழலில் தமிழ் மொழியும் கலாச்சாரமும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்கும் முகமாக இந்த மாநாடு
நடாத்தப்படவுள்ளது.
தொடர்ச்சியாக தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கானல் நீராக மாற்றப்பட்டு கொண்டு வருகின்ற இக் காலகட்டத்தில் தமிழ் இளைஞர் இடையே கலாச்சார சீரழிவை உருவாக்கி கொண்டு வரும் இக் காலப்பகுதியில் இம் மகாநாடு மிகவும்
பிரதானமானதாகும்.
இம்முறை பாரிஸ் 17 La Fourche க்கு அண்மையில் உள்ள சர்ச் மண்டபத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு வெகு சிறப்பாக இடம் பெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொறிசியஸ், றியூனியன், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் தமிழ்ப் பேராளர்கள் பலர் குறித்த மாநாட்டில் கருத்துரை வழங்கவுள்ளனர்.
மேலும் தமிழரின் வரலாற்றுத் தொன்மைகள் பற்றிய ஆய்வரங்கம், பிரபல கவிஞர்கள் பங்கு கொள்ளும் கவியரங்கம், அரங்கமும் அதிர்வும் எனும் பல்சுவை நிகழ்வுகள் போன்றவற்றுடன் நடனம், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், நாட்டுக்கூத்துகள் என தமிழர் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணக் கண்காட்சியுடன் விழாவின் சிறப்புமலர் வெளியீடும் இடம்பெறவுள்ளது.
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் துரை. கணேசலிங்கம், தலைவர் வி. சு. துரைராஜா, மாநாட்டு செயலாளர் ம. இரவீந்திரநாதன், மாநாட்டின் தலைவர் இ. க அரியரத்தினம் போன்றோர் உட்பட உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் நிர்வாகத்தினர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து இந்த மாநாட்டிற்கு அனைவரையும் அழைக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக