ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோபியாவின் தலைநகர் அருகில் குயிலிண்டோ சிறைச்சாலையில் ஆயிரக்கணக்கான கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே சிறையில் இருக்கும் கைதிகள் அரசுக்கு எதிராக போராட்டம் மற்றும் சிறைக்குள் பல்வேறு கலவரங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று சிறைச்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இத்தீவிபத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பி விட்டனர். இவ்விபத்தில் சிக்கி 21 கைதிகள் உடல் கருகி பலியாகியுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இறந்தவர்களின் உடல்களை இதுவரை வெளிப்படையாக அதிகாரிகள் காட்டவில்லை என தகவல்கள்
வெளியாகியுள்ளது.
மேலும், சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக கைதிகளை அதிகாரிகளே துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டதாகவும் உறுதிப்படுத்தாத செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், சிறையில் தீவிபத்து ஏற்பட்டது போல் அங்கிருந்து கரும்புகை வெளியாவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பரவி வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக