siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

'மெரினா' படத்தை தெலுங்கில் வெளியிட தடை கோரி வழக்கு

 Friday, 14 September 2012,
By.Rajah.'மெரினா' படத்தை பிறமொழிகளில் வெளியிடத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன் இயக்குநர் பாண்டியராஜ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
மெரினா படம் வெளியான போது அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர். பாலமுருகன் என்பவர் பாண்டிராஜ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பின்னர் சமரசம் ஆகியிருந்தார். இந்நிலையில் இப்படம் தெலுங்கில் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து ஆர்.பாலமுருகன் கூறுகையில், மெரினா படத்திற்காக நான் 50 லட்சம் செலவு செய்தேன்.
ஆனால் பல பிரச்சனைகளுக்கு பின்பு பாண்டிராஜ் ஒன்பது லட்சம் பணமாகவும் மீதியை செக்காகவும் கொடுப்பதாகவும் முடிவானது அப்படி அவர் கொடுத்த 15 லட்சத்தை தவிர வேறு ஒருகாசு இன்னும் தரவில்லை.
படப்பிடிப்புக்கு முதலீடு செய்து செலவு செய்த பணமும் வரவில்லை. படத்தின் மூலம் அடைந்த லாபமும் என் பங்கிற்கானது வரவில்லை.
நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஏமாற்றமும் வேதனையும் கொண்டவனாக நான் இருக்கிறேன்.
இந்நிலையில் செப்டம்பர் 1ம் திகதி தெலுங்கு நாளிதழில் ஒரு விளம்பரம் வந்திருக்கிறது. அதில் மெரினா தெலுங்கில் வெளியாகிறது என்றும் எஸ்.வி.ஆர்.மீடியா நிறுவனம் தெலுங்கில் வெளியிடுவதாகவும் விளம்பரம் வந்துள்ளது.
தயாரிப்பாளர்களில் ஒருவரான என் அனுமதி பெறாமல் 'மெரினா' வை வேறு மொழிகளில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத் தடை உள்ளது. நீதிமன்ற அவமதிப்பாக படம் விற்கப்பட்டுள்ளது. வெளியிடுவதாக விளம்பரமும் வந்துள்ளது.
இது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எஸ்.வி.ஆர். மீடியா நிறுவனத்தின் மீதும் கிரிமினல் வழக்கு பாண்டியராஜ் மீதும் தொடர்ந்து இருக்கிறேன் என்றார்.
இறுதியாக பாலமுருகன் கூறுகையில், சினிமாவில் பழக்கம், நட்பு, நம்பிக்கை என்று பண விடயத்தில் யாரும் நினைத்து முறையான ஒப்பந்தம் எழுத்து மூலம் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டாம்.
அப்படி வைத்தால் என்னைப் போல ஏமாற வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாக சொல்கிறேன் என்றும் ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளார்

'சிங்கம்-2' படத்தில் ரகுமான் மனைவியாக நடிக்கும் ரித்திகா ஸ்ரீநிவாஸ்

By.Rajah.கொலிவுட்டில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 'வழக்கு எண் 18/9' படத்தில் நடித்து பரபரப்பான நடிகையானார் ரித்திகா ஸ்ரீநிவாஸ்.
தன் நடிப்பு திறமைக்கு சரியான வாய்ப்பை கொலிவுட் தரும் என்று இவர் காத்திருக்கிறார்.
பரபரப்பாக பேசப்பட்ட 'வழக்கு எண் 18/9' படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்ற இவர், கொலிவுட்டில் ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சிங்கம் -2' படம், கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கும் படம் என பிசியாக நடித்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஹரி இயக்கும் சிங்கம் படத்தில் நான் ரகுமானின் மனைவியாக நடிக்கிறேன்.
மற்றுமொரு படத்தில் செல்வா உடன் இணைந்து நடிக்கிறேன் என்றும் என் நடிப்பு திறமைக்கு தீனி போடும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.

பிபாஷா பாசுக்கு வைரஸ் காய்ச்சல்

By.Rajah.பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு வைரஸ் காய்ச்சல் வந்துள்ளதால் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பாலிவுட் நடிகை பிபாஷா பாசு நடித்த ராஸ் 3 படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்புகிறது.
இப்படத்தில் பிபாஷாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காய்ச்சல் காரணமாக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிபாஷா பாசு.
தனது உடலை முழுவதும் பரிசோதித்த பின்பு, சிகிச்சையும் எடுத்துக் கொண்டு வீடு திரும்பியிருக்கிறார் பிபாஷா.
பிபாஷா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு கிடைக்க அனைவரும் கவலைப்பட்டனராம்.
இதனால் வீடு திரும்பிய பிபாஷா, வைரஸ் காய்ச்சல் இருப்பதாக டொக்டர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் தனது நடிப்பை பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டதோடு படத்தின் வெற்றியை குணமடைந்த பின்னர் கொண்டாட உள்ளதாக

இலங்கையில் இரண்டரை வருடங்களுள் 9412 பேர் தற்கொலை! ஆண்களே அதிகம்

 
 
By.Rajah.இலங்கையில் பல காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வோரின் தொகை அதிகரித்துச் செல்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்அறிக்கையின்படி தற்கொலைகள் தொடர்பான விபரம் வருமாறு:
2010ஆம் ஆண்டு, ஆண்கள் 2914 பேரும் பெண்கள் 950 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2011 இல் ஆண்கள்- 2939, பெண்கள்-831, 2012 இல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் ஆண்கள்-1381பேர், பெண்கள்- 397 பேரும் தற்கொலை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய தகவல்களின்படி ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அத்துடன் 40 தொடக்கம் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் இரத்தினபுரி மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
2011ம் ஆண்டில் 16 வயதிற்கும் குறைந்த 41 ஆண் சிறுவர்களும் 77 சிறுமியர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
குடும்பப் பிரச்சினை, காதல், தொழில் பிரச்சினை, மன உலைச்சல் உள்ளிட்ட காரணங்கள் அதிக தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளத

போரின் போது தமிழர்களிடம் திருடிய தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தும் சிங்களவர்கள்!

 
 
By.Rajah.தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது சிங்களப் படையினரால் திருடப்பட்ட தமிழர்களின் பெருமளவு தங்கம் இப்பொழுது இந்தியாவுக்கு கடத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
தங்கக் கடத்தல் என்பது பொதுவாக துபாய் அல்லது சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால் இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் இதுவரை பிடிபட்டிருக்கும் 29 தங்கக் கடத்தல் சம்பவங்களில் 22 சம்பவங்கள் கொழும்பிலிருந்து விமானம் மூலம் வந்த பயணிகளிடமிருந்துதான்.
கொழும்பைப் பொறுத்தவரையில் அது தங்க வியாபாரம் நடக்கும் இடம் இல்லை- தங்கம் வெட்டியெடுக்கப்படும் இடமும் அல்ல! அப்படியானால் இது எப்படி சாத்தியம்?
இறுதி யுத்தம் முடிந்த பிறகு தமிழீழ விடுதலைப் புலிகள் சேகரித்து வைத்திருந்த 6 ஆயிரம் கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால் அந்த தங்கம் எங்கே என்ற விவரம் தெரியவில்லை.
இதை தனிநபர் எவரேனும் கைப்பற்றியிருக்கின்றனரா? என்ற சந்தேகமும் உருவாகி உள்ளது.
இதேபோல் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டனர். தமிழ் மக்களின் பிணங்களின் மீதிருந்த தங்க ஆபரணங்களை சிங்கள படைக் கும்பல் திருடியிருக்கிறது.
இத்தகைய தங்கம்தான் இந்தியாவுக்கு கடத்தி வரப்படுகிறதோ என்ற சந்தேகத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் எழுப்பியிருக்கின்றனர்.
இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில்,
இலங்கைப் பெண்ணொருவர் கொண்டுவந்த குடையின் மத்திய தண்டுப்பகுதி தங்கத்தால் செய்யப்பட்டிருந்ததை நாம் கண்டுபிடித்தோம். அதில் கறுப்பு நிற வர்ணம் பூசப்பட்டிருந்தது.
அதேபோல் இலங்கை பயணி ஒருவர் கொண்டுவந்த பையொன்றின் பிடியானது தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது' என்கிறார்

இஸ்லாத்தை அவமதித்த அமெரிக்கத் திரைப்பட சர்ச்சை: யேமனிலும் தூதரகம் மீது தாக்குதல்



By,Rajah.இஸ்லாம் மதத்தை அவமதித்தாகக் கூறப்படும் அமெரிக்கத் திரைப்படத்துக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கரத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் யேமனில் உள்ள அமெரிக்கத் தூதுவராலம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த சம்பவத்தில் 5 யேமன் நாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சிரிய படையினருக்கும் இடையே பாரிய மோதல் இடம்பெற்றுள்ளது.




இத்தாக்குதலில் அமெரிக்க தூதரகத்தின் 10 வாகனங்கள் எரிக்கப்பட்டதுடன் , காரியாலயம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.


எனினும் அமெரிக்கத் தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


மத்தியகிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக அமெரிக்க தூதுவராலயங்கள் மீது நடத்தப்பட்டு வரும் இத்தாக்குதல்கள் மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ள ''Innocence of Muslims'' என்ற படத்தை இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சேம் பேசிலி என்பவரும், குர் ஆனை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த அருட் தந்தை டெரி ஜோன்ஸ் என்பவரும் தயாரித்துள்ளனர்.




எகிப்தில் தொடங்கிய கலவரம், லிபியாவிலிருந்து, யேமனுக்கு பரவியுள்ளதுடன் ஆப்கானுக்கும் பரவும் அபாயமுள்ளதாகத் தெரிகின்றது.


லிபியாவில் இடம்பெற்ற கலவரத்தில் அந்நாட்டிற்கான அமெரிக்க தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உட்பட நால்வர் கொல்லப்பட்டனர்.


இதனையடுத்து அமெரிக்கா அங்கு படைகளை அனுப்பியுள்ளது.


இதேவேளை மத்தியகிழக்கில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகங்களின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான நகை, பணம் திருட்டு

 
By.Rajah.
யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சிகிச்சைக்காக விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களது பணமே இவ்வாறு திருடப்பட்டதாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நோயாளி ஒருவரிடம் 15 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் இன்னொரு பெண்ணிடம் திருமண மோதிரம் மற்றும் சங்கிலி என்பனவும் இன்னொரு பெண்ணிடம் 1100 ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நோயாளர் விடுதியில் இவ்வாறு திருட்டு இடம்பெற்ற சம்பவம் நோயாளர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச் சென்ற கார் விபத்தில் மூவர் படுகாயம்

 
By.Rajah.யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச் சென்ற கார் ஒன்று வேகக்காட்டுப்பாட்டை இழந்து ரொலிக்கொம் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை 4.45 மணியளவில் வேலணை வங்களாவடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தின் போது யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச் சென்ற மூவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

அவுஸ்திரேலியா செல்லவிருந்த 20 பேர் கோமாரியில் கைது



அவுஸ்திரேலியா செல்லவிருந்த 20 பேர் பொத்துவில் பொலிஸாரால் கோமாரியில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அம்பாந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களுள் மூன்று சிங்களவர்களும் 17 முஸ்லிம்களும் அடங்குவதாகவும் பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை பொத்துவில் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் காட்டுக்குள் வசிக்கும் முள்ளிக்குளம் மக்கள்


By.Rajah.
தமது சொந்தக் கிராமமான முள்ளிக்குளம் கிராமத்துக்கு சற்றுத் தொலைவில் உள்ள மலங்காடு காட்டுப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்ந்து வரும் முள்ளிக்குளம் பகுதி மக்கள், தாம் மீளக் குடியமர்த்தும் வரை காட்டுக்குள் வாழப்போவதாகத்  தெரிவித்தனர்.


முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக இடம் பெயர்ந்து சென்றனர்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இவர்கள் தமது கிராமத்தில் மீள் குடியமரச் சென்றபோது அங்கு நிலை கொண்டிருக்கும் கடற்படையினர் அந்த மக்களை முள்ளிக்குளம் கிராமத்தில் குடியமர அனுமதிக்கவில்லை.
இந்தக் கிராமத்தைக் கடற்படையினர் அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
தமது சொந்தக்கிராமத்தில் மீள் குடியமரும் எண்ணத்துடன் நீண்ட நாள் போராட்டத்தின் மத்தியில் முள்ளிக்குளத்திற்கு சற்றுத்  தொலைவில் உள்ள மலங்காடு எனும் காட்டுப்பிரதேசத்தினுள் அடிப்படை வசதிகள் எவையுமற்ற நிலையில்
சுமார் 145 குடும்பங்கள் இவ்வாறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கான தண்ணீர்த் தேவைகளுக்கு அருகில் உள்ள குளத்தைப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் குளம் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.
இந்த மக்களுக்கான குடிநீர் இராணுவத்தினரால் வழங்கப்படுகின்ற போதிலும் ஏனைய தேவைகளுக்கு தண்ணீரைப்பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.
அத்துடன் காட்டு யானைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.
 எத்துணை சிரமங்கள் வந்தாலும் தாம் தமது சொந்தக்கிராமத்தில் மீளக்குடியமர்வதில் எந்த மாற்றமும் இல்லை என அந்த மக்கள் தெரிவித்தனர்.


இவர்களுடைய நிலை தொடர்பாக முசலி பிரதேச செயலாளர் கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,
கடந்த மாதம் 24 ஆம் திகதி இங்கு வருகை தந்த மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர் நிலைமையினை ஆராய்ந்துள்ளனர்.
இந்த மக்கள் தற்போது வசிக்கும் இடத்தில் தொடர்ந்து வசிக்க வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே இவர்கள் தற்போதுள்ள இடத்தில் இருக்க உடன்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.


 

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம்: த.தே.கூ.



முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கு தமிழ் மக்களுக்குச் சொந்தமான 500 ஏக்கர் வயல் காணிகளைப் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரு வதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர் முக் கியஸ்தர்கள் தம்மிடம் முறைப்பாடு செய் து ள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமை ப் பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இது குறித்து பாரளுமன்ற உறுப்பினர் ஆன ந்தன் மேலும் தெரிவிக்கையில், சிங்களக்குடும்பங்களை தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளில் குடியேற்றுவதற் காக காணிகள் கடந்த சில வாரங்களாகவே நில அளவை செய்யப்பட்டு 200 க்கும் மேற் பட்ட தற்காலிக வீடுகள் அமைக்கப் பட்டி ருக்கின் றன.

அத்துடன் இந்தக் குடியே ற்றத்திற்காகப் புதிய வீதிகள் அமைக்க ப்பட்டு மின் கம் பங்களும் நடப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளினால் முந்திரிகை க் குளம், ஆமையன்குளம், ௭ரிச்சகாடு உட் பட அந்தப் பகுதியில் உள்ள தமிழ்க் கிராம ங்களில் உள்ள காணிகள் பறிபோயிருந்தன.

தமிழ் மக்களுடைய காணிகள் சிங்களக்கு டியேற்றத்துக்காகப் பயன்படுத்துவது தொட ர்பாக அதிகாரிகளினால் முன்னறி வி த் தல் ௭து வும் வழங்கப்படவில்லை ௭ன்றும் யாரும் அறி யாத வண்ணம் திடீரென இந்த நடவ டி க்கை மேற்கொள்ளப்பட்டு வருகின் றன ௭ன் றும் ஊர்ப்பிரமுகர்கள் ௭ன்னிடம் தெரிவி த்து ள் ளார்கள்.

இந்த சிங்களக்குடியேற்றம் தொடர்பாக முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் நான் தொடர்பு கொண்டு கேட்ட போது இது குறி த்து தனக்கு ௭வரும் அறிவிக்கவில்லை ௭ன் றும் பொது மக்களிடமிருந்தும் முறைப் பாடு கள் கிடைக்கவில்லை ௭ன்றும் தெரி வித்தார்.

ஒரு மாவட்டத்தின் நிர்வாகத்துக்குப் பொ று ப்பாகவுள்ள அரசாங்க அதிபருக்கு அறி விக் கா மல் முறையான அவருடைய அனும தி யின்றி கொக்கிளாய்ப் பிரதேசத்தில் இந்த சிங் களக்குடியேற்ற நடவடிக்கைகள் மேற் கொள் ளப்பட்டிருக்கின்றன. இது குறித்து உரிய அரச மட்டத்தினருடன் தொட ர்பு கொ ண்டு நட வடிக்கைகளை ௭டுப்ப தற்கு நாங் கள் முய ற்சித்துள்ளோம்.

இதே வேளை கொக்கிளாய் கோட்டைக் கேணி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவி லில் இராணுவத்தினர் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதாகவும் கோவிலின் உள்ளே இறைச்சி வகைகளைச் சமைப் பதுடன் கோவி லின் ௭ல்லா பகுதிகளிலும் சப்பாத்துக்களு டன் நடமாடி வருவதாகவும் அந்தக் கிராம த்தைச் சேர்ந்த மக்கள் ௭ன்னி டம் தெரிவித் திருக் கின்றார்கள். இந்தப் பகுதி மக்கள் அவர்களுடைய சொந் தக் கிராமங்களில் மீள்குடியேற்ற ப் பட்டு ஒரு வருடமாகின்றது.

ஆனாலும் அங்கு குடி யே றி யுள்ள 200 க்கும் மேற்ப ட்ட குடு ம்ப ங்கள் இன் னும் கொட்டில் களிலும் தறப்பாள் கூடாரங்களிலுமே வசி த்து வருகின் றார்கள். இவ ர்களுக்கான தற்கா லிக வீடுகள் கூட இன் னும் அமைத்துக் கொடுக் கப்பட வில்லை.

அது மட்டுமன்றி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதி க ளும் அரசி னால் செய்து கொ டு க்கப்படவில்லை. இத னால் அந்தப் பகு தி மக்கள் பெரும்சிரமத்து த்கு மத்தி யிலேயே வாழ்ந்து வருகின் றார்கள் ௭ன்றார்

தமிழ் அன்பு கவிதை கள்

அம்மா பேசினால்
கோபங்களை சாதிக்கும்
நான்
நீ திட்டும்போதெல்லாம்
வெட்கமின்றி
...
உன்பின்னால் வருகிறேன்

<மனம் வலிக்கும் நேரங்களில் உன் நினைவுகள் மட்டுமே சுகமாய் இருக்கும். ஆனால் இன்றோ என் மனவலிக்கு முழுமுதற் காரணமும் நீயாய்/div>

இராணுவத்திலிருந்து ஓடி வந்தவர்களுக்குப் புகலிடம் கிடையாது: சுவிஸ்ஸில் புதிய சட்டம்

By.Rajah.புகலிடம்நாடி வருவோரில் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடிவந்தவருக்கு இடமில்லை என்று இந்த மாத இறுதிக்குள் சுவிஸ் நாடாளுமன்றம் புதிய சட்டம் ஒன்றை இயற்றத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடத்திய வாக்கெடுப்பில் 25 பேருக்கு 20 பேர் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்திற்கு வந்த அகதிகளில் பெருங்கூட்டத்தினர் எரித்ரேயா நாட்டிலிருந்து தப்பி வந்த இராணுவத்தினரேயாவர்.
சுவிஸ் செய்தி நிறுவனம், இராணுவத்தில் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கு சுவிட்சர்லாந்து ஆதரவளிக்கத் தயங்காது என்று தெரிவித்தது.
தொல்லைதரும் அகதிகளுக்குத் தனியாக மையங்கள் ஏற்படுத்தப்படும். வட ஆப்பிரிக்காவில் இருந்து வருவோர் அரசுக்கு அதிகம் தொல்லை தருவதால் இச்சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
குடும்பத்தினரை அழைத்து வருதல் தொடர்பாகவும் சட்டத்திருத்தம் செய்யப்படும்.
இனி அகதிக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டத் தகுதியே அவரது வாழ்க்கைத் துணைக்கும், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் வழங்கப்படும்

புகைபிடிக்கும் கூடங்களை அகற்ற வேண்டாம்: தேசிய வாக்கெடுப்பில் முடிவு


By.Rajah.சுவிட்சர்லாந்தில் மதுபானக்கூடம் அலுவலகம், மனமகிழ் மன்றம், உணவு விடுதி போன்ற இடங்களில் புகைபிடிப்பதற்கென அமைக்கப்பட்டுள்ள கூடங்களை நீக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவிடங்களில் புகைக்கும் பழக்கம் இரண்டாம் கட்ட புகைபிடித்தலுக்கு உதவும் வகையில் இருப்பதால் இப்பழக்கத்தை தடைசெய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற பொதுமக்கள் எடுத்த முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 23ம் திகதி இதற்கான பொதுவாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில் மக்களின் ஆதரவு குறைந்திருப்பதாக சுவிஸ் ஒலிபரப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
GFS பெர்ன் ஆராய்ச்சி மற்றும் வாக்கெடுப்பு நிலையத்தின் அரசியல் விஞ்ஞானியான மார்ட்டினா இம்ஃபெல்ட், புகை பிடிக்காதவர்களும் அரிதாக புகை பிடிப்பவர்களும் கூட புகைபிடிக்கும் கூடங்கள் தனியாக அமைப்பதை எதிர்த்து வாக்களிக்கவே விரும்புகின்றனர்.
புகை எதிர்ப்பாளர்கள் சுவரொட்டி மற்றும் செய்தித்தாள் மூலமாக விளம்பரம் செய்தாலும் கூட வாக்காளர் அதிகமாக ஆர்வம் காட்டவில்லை. மக்கள் ஆதரவு குறைந்ததற்குக் காரணம், விடுதி உரிமையாளர்களும், வர்த்தகர்களும் குறிப்பாக மைய மற்றும் வலதுசாரி அரசியல்வாதிகளும் முன் வைத்த விவாதத்தினால் மக்களாதரவில் 18 சதவீதம் சரிவு ஏற்பட்டது.
நல்லதொரு இணக்கமான தீர்வு ஏற்பட்டு இரண்டாண்டுகளான பின்பே தேசிய அளவிலான சட்டத்தைக் கொண்டுவர முடியும் என்பதை புகையெதிர்ப்பாளர்கள் நன்கு உணர்ந்திருப்பதை GFS பெர்னின் இயக்குநர் கிளாட் லாங்சாம்ப் குறிப்பிட்டார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள 26 மாநிலங்களில் 18 மாநிலங்கள் பணியிடங்களில் புகை பிடிப்பதை அனுமதிக்கின்றன. சிறிய காபிக்கடை, மதுபானக்கூடம் போன்றவற்றில் பணியாளர் சேவையும் புகைபிடிப்பவர்களுக்குக் கிடைக்கின்றது. இங்கு இவர்களுக்கென்று தனியாக புகைபிடிப்பதற்கான கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன

மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும் காகங்கள்: ஆய்வில் புதிய தகவல்


By.Rajah.மனித முகங்களை அடையாளம் கண்டு கொள்வதும், அவர்களுடன் பழகி அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தியும் காகங்களுக்கு உண்டு என்று புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில், அணிலின் மூளையைப் போன்றே காகங்களின் மூளையின் அமைப்பும் அமைந்துள்ளது கண்டறியப்பட்டது.
காகங்களுடன், மனிதர்கள் சிலரை ஒன்றாக பழக வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஒன்றாக பழகியவர்களைப் போன்று மற்றொருவர் மாஸ்க் அணிந்து காகத்தின் அருகில் சென்றால் அவை அவர்களை நிராகரித்து விடுவதும், தங்களுடன் பழகும் நபர், வேறொரு மாஸ்க் அணிந்திருந்தாலும், அவரிடம் நெருங்கி செல்வதும் காகங்களின் முக அடையாளம் காணும் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பறவைகளைப் பற்றி நடத்திய ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்ட முக்கிய ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது

இரட்டை கோபுரத்தை தகர்த்தவர்களின் பேச்சு அடங்கிய வீடியோ வெளியீடு

By.Rajah.இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான, விமானத்தை கடத்திய இருவரின் பேச்சு அடங்கிய வீடியோவை அல்கொய்தா தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி நான்கு விமானங்களை கடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகள், உலக வர்த்தக மையமாக செயல்பட்ட இரட்டைக் கோபுரங்கள் மீது விமானங்களை மோதச் செய்ததில் 3 ஆயிரம் பேர் இறந்தனர்.
இந்த துக்க நிகழ்ச்சியின் 12ம் ஆண்டு நினைவு தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்தை கடத்திய 19 பயங்கரவாதிகளில், இரண்டு பேரின் பேச்சு அடங்கிய வீடியோவை அல்கொய்தா அமைப்பு நேற்று இணையத்தளத்தில் வெளியிட்டது.
சலிம் அல் ஹஸ்மி மற்றும் கலித் அல் மிதார் ஆகிய இரண்டு பேர் இராணுவ உடை மற்றும் தலைப்பாகை, கையில் துப்பாக்கி சகிதமாக, அமெரிக்காவுக்கு எதிராக சூளுரைத்த பேச்சு அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. அவர்களுக்கு பின்புறம் இஸ்லாமிய காலண்டரில், 26.04.2001 என்ற திகதி இருப்பது தெளிவாக தெரிகிறது.
மிதார் பேசுகையில், அரபு தலைவர்கள் தங்கள் நாட்டைக் காட்டி கொடுத்து, மெக்கா மற்றும் மெதினா ஆகிய இரண்டு புனித ஸ்தலங்களில் கிறிஸ்துவ அமெரிக்கர்களை தங்க அனுமதித்து விட்டனர். அரேபிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கர்களை நாங்கள் வெளியேற்றுவோம் என்றார்.
ஹஸ்மி, இது அமெரிக்காவுக்கு எதிரான புனிதப் போர் என சூளுரைத்தார்

எகிப்தின் முன்னாள் பிரதமருக்கு சிறைத் தண்டனை

By.Ralah.எகிப்து நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது நஜீபுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை எகிப்தின் பிரதமராக இருந்தவர் அகமது நஜீப்.
அந்த கால கட்டத்தில் வர்த்தக நடவடிக்கை ஒன்றில் சட்டத்துக்குப் புறம்பான விதத்தில் பலன் அடைந்ததாக, நஜீப் மீது கடந்தாண்டு குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு ஜனவரியில் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் விசாரணை நடத்திய கெய்ரோ நீதிமன்றம், அகமது நஜீபுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. சிறைத் தண்டனையுடன் 9 மில்லியன் எகிப்து பவுண்டுகளை அபராதமாகக் கட்ட வேண்டுமென்றும் தீர்ப்பளித்தது.