இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்ற அமெரிக்கா, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
இந்த சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் ரஷ்யாவும், அமெரிக்காவும் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஷ்யா ஜனாதிபதி மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
சர்வதேச அளவில் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை ஒட்டுமொத்த உலகின் நலனையொட்டி பாதுகாக்கிற சிறப்பான பொறுப்பு ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் உண்டு என ஒபாமாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1776ம் ஜூலை நான்காம் திகதி இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்கா சுதந்திரம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது