siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 22 ஜூன், 2013

ஜனாதிபதியாக பெண் ஒருவரே வரவேண்டும்:


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முந்தைய ஆட்சி காலத்தில் அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரியாக பதவி வகித்த ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியாவார்.
இவர் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த பெண்மணிகளில் முக்கியமானவராக கருதப்படுகிறார். அத்துடன் இவர் வெளியுறவு துறை மந்திரியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் மேலாண்மை தகுதி மற்றும் தலைமை பண்பு தொடர்பான கருத்தரங்குகளில் சிறப்புரை நிகழ்த்தி ஆலோசனை வழங்கி வருகிறார்.
அமெரிக்க அதிபராகும் நோக்கில் தான் இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இக் கருத்தை ஆமோதிக்கும் வகையில் பில் கிளிண்டனும் சூசகமாக செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கனடா நாட்டு மாணவர்களுடன் "யூ டியூப்" மூலமாக பேசிய ஹிலாரி கிளிண்டன்:-
"எனது வாழ்நாளுக்குள் அமெரிக்காவின் அதிபராக ஒரு பெண்மணி பொறுப்பேற்பதை காண ஆசைப்படுகிறேன். அடுத்த முறையோ அல்லது, அதற்கு அடுத்த முறையோ சிரமமான அந்த பதவியில் ஒரு பெண் அமர்ந்து அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும் என்ற செய்தியை ஆண் சமுதாயத்துக்கு நாம் வெளிப்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராகும் ஆசை ஹிலாரிக்கு இல்லை என ஒரு தரப்பினர் கூறிவந்த போதிலும் தனது மனதுக்குள்ளும் அமெரிக்க அதிபராகும் ஆசை சிறகடித்துக் கொண்டிருப்பதை ஹிலாரி கிளிண்டன் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்
 

மலிவான விலையில் விற்கப்படும் ஜேர்மன் சாராயம்


ஜேர்மனியில் விற்கப்படும் மதுவின் விலையானது மற்ற ஜரோப்பிய நாடுகளை விட மிகவும் குறைவான விலையிலேயே விற்கப்படுகின்றன என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தகைய மதுவானது ஜரோப்பிய நாடுகளில் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றன. மற்ற ஜரோப்பிய நாடுகளை ஒப்பிடும்பொழுது ஜேர்மனி நாட்டு மக்கள் அதிக விலை கொடுத்து குடிப்பதற்கு தாயாராக உள்ளனர்.
ஜரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்கரியா (Bulgaria) ரோமனியா (Romania) மற்றும் ஹங்ரே (Hungary) ஆகிய பகுதிகளில் மதுவின் விலையானது மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகின்றன. இதன் விலையானது உணவு, புகையிலை, மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவான விலையிலேயே உள்ளன.
புகையிலை, உணவு, மற்றும் பானங்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டாலும் சில இடங்களில் அதன் விலையானது பல்வேறு விதங்களில் வேறுபடுகின்றன.
ஜேர்மனியில் விற்கப்படும் மதுவின் விலையானது உணவுப் பொருட்களின் விலையுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவான விலை என்பது நம்பமுடியாத ஒன்றாகும்