siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 26 நவம்பர், 2012

இங்கிலாந்தில் கனமழை: 800க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பெய்த கனமழையால் 800க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 800க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன, மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை...

இருமல் மருந்து குடித்த 12 பேர் பலி: பாகிஸ்தானில்

கலப்பட இருமல் மருந்து குடித்த 12 பேர் பலியான சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் லாகூர் அருகே ஷதாரா நகரம் உள்ளது. இங்குள்ள கடைகளில் இருமல் மருந்து 25 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த சிலர் போதைக்காக இருமல் மருந்தை உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நேற்று ஒரு கடையில் 20 பேர் இருமல் மருந்தை வாங்கி உட்கொண்டனர். இந்த மருந்தை குடித்த சில நிமிடங்களில் நான்கு பேர் இறந்து விட்டனர். மற்றவர்கள்...

தோல்வியில் முடிவதற்கு காரணம் காதலர்கள் தான் !

காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதற்குக் காரணம் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும், ஆணும், மன முதிர்ச்சியில்லாத நிலையில் திருமணம் செய்து கொள்வதே என்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் பழமலய். தர்மபுரி மாவட்டத்தில் வன்னியர் இனப்பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதை அடுத்து தலித்துகளுக்கு எதிராக அம்மாவட்டத்தில் எழுந்த வன்செயல்கள் குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை தெரிவித்த...

தமிழினம் சுதந்திரமாகவும், நின்மதியாகவும் வாழும் நாள் விரைவில் வரும்!

கல்லறைகள் முழுவதும் இடித்தழிக்கப்பட்டன. கோயில்கள், தெருகள் முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றனர். இத்தனையும் மாவீரர்களுடைய நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே. அரசாங்கத்திற்கும், அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நன்றாக ஒரு விடயம் புரிந்திருக்கின்றது. எதனை அழித்தாலும், மக்கள் மீது எத்தகைய அடக்கு முறைகளை திணித்தாலும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் மாவீரர்களுடைய நினைவுகளை...