
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
காதிமியா பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் இன்று ஈராக் போலீசார் வழக்கமான சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த தற்கொலைப்படை தீவிரவாதி, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இதில், பொதுமக்கள் தரப்பில் 4 பேர் மற்றும் 6 போலீஸ்காரர்கள் என மொத்தம் 10 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 35 பேர் படுகாயம்...