உலகின் பிரபலமான நகரமாக கருதப்படும் லண்டன் மற்றும் நியூயோர்க் எதிர்வரும் சில வருடங்களில் கடலில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அன்டார்டிகாவில் உள்ள Pine island glacier தற்போது சேதமடைய ஆரம்பித்துள்ளதாகவும் அது வெகு விரைவில் உருகிடும் எனவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதற்கமைய லண்டன் மற்றும் நியூயோர்க் ஆகிய இரண்டு நகரங்களுக்கு மேல் கடல் நீர் அதிகரிப்பதனால், குறித்த நகரங்கள் இரண்டும் கடலில் மூழ்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அது மாத்திரமின்றி இலங்கை உட்பட உலகின் கடல் மட்டத்தில் குறைவான நிலையில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் மாத்திரம் அன்டார்டிகாவில் 225 சதுர மைல் பனிப்பாறைகள் கரைந்துள்ளதாக ஒஹியோ அரச பல்கலைக்கழக தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
2013ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரையில் glacier கரைதல் வேகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>