siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

ரூ.25,000 கோடியை ஓரே நாளில் சம்பாதித்த மார்க் ஜூக்கர்பெர்க்.

சமுக வலைத்தளத்தில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் நிறுனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-கின் சொத்து மதிப்பு நாள்தோறும் உயர்ந்து கொண்டே 
இருக்கிறது.
ஆனால் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 25,000 கோடி ரூபாய் அதாவது அமெரிக்கா டாலர் மதிப்பில் சுமார் 3.8 பில்லியன் டாலர் 
சம்பாதித்துள்ளார்.எப்படி.?
பேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி குறைவாக இருந்தாலும் இந்நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் 
வெற்றி அடைந்துள்ளது.
இதன் ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் வருவாய் 43 சதவீதம் உயரும் எனக் கணிப்புகள் வெளியானது.
அடித்து நொறுக்கியது..
பேஸ்புக் நிறுவனம் கணிப்புகளை அடித்து நொறுக்கி சுமார் 45 சதவீதம் அளவிலான வருவாய் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது 2015ஆம் ஆண்டை விடவும் குறைவாக இருந்தாலும் 2வது பெரிய வளர்ச்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இக்காலகட்டத்தில் மட்டும் பேஸ்புக் சுமார் 9.16 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.பங்கு மதிப்பு
பேஸ்புக்-இன் காலாண்டு முடிவு அமெரிக்கப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய அதிர்வலைகளைப் பெற்றது இதன் காரணமாக, வியாழக்கிழமை வர்த்தகத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 5 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் 
கொண்டு சென்றது.
இதன் மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வரலாறு காணாத விதமாகச் சுமார் 175.49 ரூபாய் என்ற புதிய உச்சத்தைப் பெற்றது
3.8 பில்லியன் டாலர்
இதன் வாயிலாகப் பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க்-இன் மதிப்பு வியாழக்கிழமை மட்டும் சுமார் 3.8 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது.
இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25,000,000,000 ரூபாய்.
50 சதவீத வளர்ச்சி
2017 ஜனவரி மாதத்தில் இருந்து பேஸ்புக் நிறுவனப் பங்குகள் சுமார் 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்து தற்போது இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 170 பில்லியன் டாலராக உள்ளது.
அதேபோல் ஜூக்கர்பெர்க்-இன் சொத்து மதிப்பும் ஜனவரி மாதத்தில் இருந்து 24 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது..5வது இடம்
இந்தத் திடீர் உயர்வின் மூலம் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம் ஹீலு 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜூக்கர்பெர்க் 72.7 பில்லியன் டாலர் மதிப்புடன் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>



வியாழன், 27 ஜூலை, 2017

நாளை வடகொரியா மற்றுமொரு ஏவுகணையை ஏவ முயற்சி!

வடகொரியா நாளை மீண்டும் மற்றுமொரு கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை பரிசோதனை நடத்த போவதாக தென்கொரியா குற்றம் சுமத்தியுள்ளது.
தென்கொரியாவுடன் போர் நிறுத்தம் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டதை வடகொரியா நாளை இராணுவ தினமாக கொண்டாடுகிறது.
இதனை முன்னிட்டு வடகொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் இருந்து மற்றுமொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தென்கொரியா
 தெரிவித்துள்ளது.
இதற்கிடையே வடகொரியாவின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தென் கொரிய பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 6 ஜூலை, 2017

பேருந்து தீப்பிடித்து ஜேர்மனியில் 18 பேர் கருகிப் பலி!

தெற்கு ஜெர்மனியின் ஏ 9 நெடுஞ்சாலையில், ஒரு சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 18 பேர் இறந்ததாக காவல்துறை கூறுகிறது. வடக்கு பவேரியாவில் உள்ள ஸ்டாம்பாக்கிற்கு அருகில் ஒரு லாரியுடன் இந்த
 பஸ் மோதியது. 30 பேர் தீயில் இருந்து தப்பித்தனர், சிலர் மோசமாக காயமடைந்தனர். சாக்சனியில் இருந்து
 ஓய்வூதியம் பெறும் ஜெர்மானியர்களை ஏற்றிக்கொண்டு இந்த
 பேருந்து சென்றது.
அவசரக் கால மீட்பு பணியாளர்களுக்கு உதவியாக மீட்பு ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது பேருந்து கடுமையாக எரிந்துகொண்டிருந்தது. பேருந்து ஏன் விபத்துக்குள்ளானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 
அந்த நேரத்தில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்பேருந்தில் 46 பயணிகளும், இரண்டு ஓட்டுநர்களும் இருந்துள்ளனர். விபத்தில் இறந்தவர்களில் ஒரு ஓட்டுநரும்
 அடக்கம்.
அவசரகால மீட்புதவியாளர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, எரிந்து எலும்புக்கூடான பேருந்தைத்தான் பார்க்க முடிந்தது. விபத்து குறித்து வருத்தப்படுவதாகக் கூறிய சான்சலர் ஏங்கெலா மெர்க்கல்,காயமடைந்தவர்கள் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தனது அனுதாபத்தையும் தெரிவித்தார். மோசமான சூழ்நிலையின் போது, மக்களைக் காப்பாற்றிய 
மீட்பு பணியாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பவேரியா உள்துறை அமைச்சர் ஜோச்சிம் ஹெர்மேன் விபத்துக்குள்ளான இடத்திற்கு
 வந்துள்ளார்.
ஐந்து மீட்புதவி ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தன விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருக்கும் பெய்ராய்த் நகரத்தில், போதுமான மருத்துவ வசதிகள் இருப்பதாக ஜெர்மன் செய்தி தொலைக்காட்சியான என். டி.வியிடம் ஒரு காவல்துறை செய்தி தொடர்பாளர்
 கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 5 ஜூலை, 2017

திடீர்ரென விமானத்தின் இன்ஜினில் எரிந்த தீ: அவசரமாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர் !

அமெரிக்காவில் விமானத்தில் இடது இன்ஜின் திடீரென்று தீ பற்றி எரிந்ததால், விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் United Express 5869 என்ற விமானம் கடந்த ஞாயிற்றுக் கிழமை Aspen பகுதியிலிருந்து Denver-க்கு 59-பயணிகள் மற்றும் 4-விமான ஊழியர்களுடன் சென்றுள்ளது.
அப்போது விமானம் Denver விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென்று இடது பக்கம் இன்ஜின் தீப்பிடித்து 
எரிந்துள்ளது
நிலாவரை.கொம் செய்திகள் >>>