
சிறீலங்காவில் கைதுசெய்யப்பட்ட உக்ரேன் நாட்டு பிரஜைகள் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரிசேன இரண்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி பல வங்கிகளின் தன்னியக்க பண பரிவர்த்தனை இயந்திரங்களிலிருந்து 11.1 மில்லியன் ரூபா வரையில் களவாக எடுத்தல் உட்பட அவர்கள் மீது சுமத்தப்பட்ட 26 குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்தே அவ்விருவருக்கும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள...