siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 27 ஜூலை, 2012

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி படிப்பு





Zum vollständigen Artikel wechseln

28.07.2012மருத்துவப்படிப்புகளில் எண்ணற்ற வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி படிப்பு. எலக்ட்ரோ டயக்னாஸ்டிக் முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி கற்றுத் தரு கிறது. நியூரோ எலக்ட்ரோ பிசியோ டெக்னாலஜிஸ்ட், நியூராலஜி துறையில் முக்கிய பங்காற்றுவார்.படிக்கும் போதே பயிற்சி வகுப்புகளில் நோயாளி களை பரிசோதிக்கும் முறை பற்றி மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். இஇஜி லேப்களில் ரிப்போர்ட் தயாரிப்பது குறித்தும், அவசர காலத்தில் முதலுதவி செய்வது குறித்தும் படிக்கின்றனர். நியூரோ பிசியாலஜி லேப்களில் எலக்ட்ரோமையோகிராபி

ஹோம் சயின்ஸ் படித்தால் வேலை நிச்சயம்

 



Zum vollständigen Artikel wechseln

28.07.2012.ஹோம் சயின்ஸ் எனப்படும் பயன்பாட்டு அறிவியல் என்பது வெறும் சமையல் தொடர்பான படிப்பு மட்டும் அல்ல. சிறந்த சத்துணவு முறை, ஆடைகள், சுகாதாரம், நீடித்த மேம்பாடு, தகவல்தொடர்பு மற்றும் சிறந்த சமூக வாழ்வு போன்ற பலவித அம்சங்கள் சம்பந்தப்பட்டது. இந்தப் படிப்பு தற்போது பெண்களுக்கு மட்டுமானதாக இருக்கிறது. ஹோம் சயின்ஸ் படிப்பை மேற்கொள்ளும் ஒரு பட்டதாரி, ஒவ்வொரு பாடத்திலும் புராஜெக்ட் மேற்கொண்டு, லேப் பிராக்டிகலையும் வழக்கமாக மேற்கொள்ள வேண்டும். குழந்தை தொழிலாளர்களை இனம் கண்டு, அவர்களது வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதும் இப்பாடத்திட்டத்தின் ஒரு ...

லட்சங்களில் சம்பளம் தரும் பேஷன் கம்யூனிகேஷன்



Zum vollständigen Artikel wechseln

28.07.2012.உலக வேலைவாய்ப்பு சந்தையில் அசைக்க முடியாத இடத்தை பேஷன் டெக்னாலஜி, பேஷன் கம்யூனிகேஷன் சார்ந்த படிப்புகள் ஆக்கிரமித்துள்ளன. மக்களின் தேவைக்கேற்ப உள் நாட்டு, வெளிநாட்டு பொருட்கள் போட்டியிடுவதால் அவற்றை முதன்மைப்படுத்த இத்துறைகள் உதவுகின்றன. இதற்கு பேஷன் கம்யூனிகேஷன் துறையினர் சரியான ஆட்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இவர்கள் வடிவமைப்புத் துறையின் பல்வேறான அம்சங்களில் நிபுணத்துவம் பெறுகிறார்கள். பேஷன் கம்யூனிகேஷன் துறையில், 3 வருட இளநிலைப் பட்டப்படிப்பை நொய்டாவில் உள்ள சத்யம் பேஷன் இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனம் வழங்குகிறது. பேஷன் ...

சங்கிலியையும் சைக்கிளையும் பறிகொடுத்து காதலனால் ஏமாற்றப்பட்ட இளம் பெண் _

 _
27.07.2012.இரண்டு இளம் பெண்கள் உட்பட மூவரைக் காணவில்லையென சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன் கிழமை உறவினர்களினால் முறையிடப்பட்டுள்ளது.

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் இளம் பெண் ஒருவரும் ஏழாலைப் பகுதியில் இளம் பெண் ஒருவரும் காணாமல் போயுள்ளதுடன் உடுவில் நாகம்மாள் வீதியில் ஓர் இளைஞனும் காணாமல் போயுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

இதில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் காணாமல் போன இளம் பெண் நள்ளிரவு திரும்பி வந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.

தன்னிடம் இருந்த சங்கிலியையும் மற்றும் சைக்கிளையும் தனது காதலன் வாங்கிக்கொண்டு தன்னை வவுனியாவுக்கு அனுப்பி வைத்தாகவும் தான் வருவதாகக் கூறி பின்னர் அவர் தன்னிடம் வராமையால் ஏமாற்றப்பட்ட நிலையில் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இளைஞன் தற்போது திருமலையில் உறவினருடைய வீட்டில் இருப்பதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

மூன்றாவது நபர் பற்றிய விபரம் எதுவும் பொலிசாருக்குக் கிடைக்காத நிலையில் தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளார்கள்

முகாமில் குடிநீர் பெறுவதில் வாய்த் தர்க்கம் :நால்வருக்கும் விளக்க மறியல்

முகாமில் குடிநீர் பெறுவதில் வாய்த் தர்க்கம் :நால்வருக்கும் விளக்க மறியல் _
27.07.2012.சபாபதிப்பிள்ளை முகாமில் கடந்த வாரம் இரு குழுவினருக்கு இடையே குடிநீர் பெறுவது சம்பந்தமாக இடம் பெற்ற வாய்த் தர்க்கம் கோடரி; வெட்டில் முடிவடைந்த நிலையில் குறிப்பி;ட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் நான்கு பேர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நால்வரையும் விளக்க மறியலில் வைக்கும் படி நீதிமன்றத்தினால் பணிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இருந்து மீளத் திரும்பிய குடும்பங்களுக்கும் ஏற்கனவே முகாமில் வசித்தவர்களுக்கும் இடையே மோட்டர் பூட்டி நீர் பெறுவது சம்பந்தமாக எழுந்த சண்டை இறுதியில் கோடரி வெட்டில் முடிவடைந்தமை குறிப்பி;டத்தக்கதாகும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே விளக்க மறியலில் வைக்கப்பட்டவர்களாவர்

தமிழ்க் கைதிகளை சந்திக்க மன்னார் ஆயருக்கு மறுப்பு: டாக்டர் ஜயலத் அறிக்கை _

 _
27.07.2012.வவுனியா சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவத்தின் பின்னர் மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தமிழ் கைதிகளை இன்று சந்திக்கச் சென்ற மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு கைதிகளைச் சந்திக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அனுமதி மறுத்துள்ளார்.

குறித்த சிறைச்சாலையில் 4 கத்தோலிக்க கைதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி மற்றும் மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோர் இன்று பகல் மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியா சிறைச்சாலையிலிருந்து இடமாற்றப்பட்ட தமிழ்க் கைதிகளை பார்வையிடச் சென்றனர்.

இதன்போது மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு குறித்த கைதிகளைப் பார்க்க அனுமதி வழங்க முடியாது என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததைத் தொடர்ந்து டாக்டர் ஜயலத் ஜயவர்தன மாத்திரம் குறித்த கைதிகளை சென்று சந்தித்தார்.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் இந்த நடவடிக்கையானது இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது என டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி தெரிவிக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்க் கைதிகளை மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியி;ன் பிரதி;ப் பொதுச் செயலாளர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன எம்.பி. ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

இதன்போது அவர்களின் நிலைமை மற்றும் துக்கங்களைக் கேட்டறிந்துகொண்டனர்

உணவு விசமானதில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

27.07.2012உணவு உட்கொண்டதன் பின்னர் சுகவீனமுற்ற 23 பேர் இன்று பிற்பகல் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு மாத்தளையில் இருந்து நுவரெலியாவுக்கு சென்றிரு.ந்த குழுவினரே இவ்வாறு சுகவீனமுற்றுள்ளனர்.

தை;தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 18 பெண்கள் அடங்குவதாகவும், அவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இல்லை என கம்பளை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரித்தார்.

வியட்நாமில் நிலச்சரிவு: 7 பேர் பலி

27.07.2012 வியட்நாம் நாட்டின் டியூன் குவாங் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 7 பேர் பலியாயினர்.

மேலும் பலர் இதில் படுகாயமடைந்தனர்.

அந்நாட்டில் பெய்துவரும் தொடர் மழையையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை தொடருமானால் உயிரிழப்புகள் தொடர்ந்தும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது

சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டு வெற்றிபெற முயற்சிப்போம்: மெத்தியூஸ்

27.07.2012.இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியிலும் சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டு வெற்றிபெற முயற்சிப்போம் என இலங்கை அணியின் துனைத் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை கொழும்பு கெத்தாராம மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இப்போட்டி குறித்து தெரிவிக்கும் போதே மெத்தியூஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை அணி தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு பலமான நிலையில் உள்ளது. மேலும் கடந்த போட்டியில் நாம் சிறப்பாக விளையாடியிருந்தோம். ஆகவே பெரும்பாலும் நாளை விளையாட உள்ள இலங்கை அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படாது.

கடந்த போட்டியில் இசுரு உதான சற்று பதற்றமாகவே விளையாடினார். அவருக்கு இன்னமும் தன்னம்பிக்கை வேண்டும். மேலும் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட நுவான் குலசேகர சுகமடைந்திருந்தால் அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார். கடந்த போட்டியில் நாம் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். நாளைய போட்டியிலும் பந்து சிறப்பான ஒரு பந்து வீச்சை மேற்கொள்வோம்.

நாளைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கிமான ஒன்று என்பதால் போட்டியில் இந்திய அணிக்கு சிறந்த சவாலை கொடுத்து வெற்றி பெற முயற்சிப்போம் என தெரிவித்தார்.

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்!

27.07.2012
இறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள். வாழையை பெண்ணாக பாவிக்கிறார்கள். வாழ வைக்கும் மரமாக நினைக்கிறார்கள். வடக்கு நோக்கி குலை தள்ளினால் அந்த வீடு சிறக்கும். தெற்கு நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும். கிழக்கு நோக்கி குலை தள்ளினால் பதவி கிடைக்கும், மேற்கு நோக்கி குலை தளளினால் அரச பயம் உண்டாகும். இதுபோன்று பல மொழிகள் வாழை மரத்திற்கு உண்டு. வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும் உள்ளது. வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும் வீணாகாது. இத்தகைய வாழை மரத்தை கோயில் விழாக்களில் தோரணம் கட்டினாலும் அல்லது கோயில்களில் வாழைக்கன்று வைத்தால் வீட்டில் காணாமல் போனவர்கள் அல்லது பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை

: இணைய உலகில் புதிய புரட்சி

27.07.2012இணையங்களைப் பயன்படுத்தி தேடுதல்களை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு தேடு பொறியினுள்ளும் கொடுக்கப்படும் சொற்களை கீ போர்ட்களைப் பயன்படுத்தி இதுவரை காலமும் உட்புகுத்தி வந்துள்ளோம். ஆனால் தற்போது கூகுள் அதிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி தேடும் போது பயனர் தனது விரல்களின் உதவியுடனேயே குறிப்பிட்ட சொல்லை திரையின் மீது எழுதி தேடுதலை மேற்கொள்ள முடியும்.
எனினும் இவ்வசதியானது அன்ரோயிட் இயங்குதளத்தின் 2.3 பதிப்பிற்கு பின்னர் வந்த பதிப்புக்கள் மற்றும், அன்ரோயிட் 4.0 ஆகியவற்றினைக் கொண்ட கைப்பேசிகளுக்கு மட்டுமே இவ்வசதி தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டாக விமானத்தில் பயணித்த சிறுவன்

27.07.2012.பிரிட்டனில் காணாமல் போன 11 வயது சிறுவன், ரோம் நகருக்கு விமானத்தில் சென்ற போது மீட்கப்பட்டுள்ளான். பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த லியாம் கார்கோரன், நேற்று முன்தினம் தனது தாயுடன் கடைக்கு வந்துள்ளான்.
பொருட்களை வாங்குவதில் தாய் மும்முரமாக இருந்த போது, பக்கத்தில் இருந்த மான்செஸ்டர் விமான நிலையத்துக்குள் விளையாட்டாக நுழைந்துள்ளான்.
அங்கு விமானம் புறப்படும் பகுதிக்குச் சென்ற லியாம், வரிசையில் நின்றிருந்தவர்களுடன் சென்று ரோம் நகருக்கு புறப்பட்ட ஜெட்2.காம் விமானத்தில் ஏறிக் கொண்டான்.
விமானம் ரோம் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விமான ஊழியர், விமான பயணிகளை கணக்கெடுத்த போது இந்த சிறுவன் பெயர் பட்டியலில் இல்லாதது கண்டு திடுக்கிட்டார்.
உடனடியாக பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, சிறுவன் எங்களுடன் வரவில்லை என்றனர். அதன் பின் மான்செஸ்டர் விமான நிலையத்துக்கு தொடர்பு கொண்டு விசாரித்த போது, ஒரு தாய் தனது மகனை காணாமல் தேடிக்கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரோம் நகரில் அனைத்து பயணிகளும் இறங்கிய பின், சிறுவனை அதே விமானத்தில் மீண்டும் மான்செஸ்டர் விமான நிலையத்துக்கு விமான ஊழியர்கள் அழைத்து வந்தனர். பின், சிறுவனின் தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர், மகனை அழைத்துச் சென்றார்.
இருப்பினும் பல சோதனை இடங்களை தாண்டி, எப்படி சிறுவன் பாஸ்போர்ட் இல்லாமல், ஒரு விசாரணையும் இல்லாமல், விமானத்தில் பயணித்தான். அதுவரை அங்குள்ள அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
சிறுவன் விமானத்தில் ஏறி உட்கார்ந்து பயணிக்கும் வரை அஜாக்கிரதையாக செயல்பட்ட ஜெட்2.காம் விமான ஊழியர்கள் ஐந்து பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காட்டுப் பகுதியில் 248 சிசுக்களின் உடல்கள் மீட்பு

27.07.2012.ரஷ்யாவில் காட்டுப் பகுதியில் 248 சிசுக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் உரல்ஸ் பகுதியை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சில பேரல்கள் கிடப்பது தெரியவந்தது.
அவற்றை ஆராய்ந்ததில், இறந்த சிசுக்களின் உடல்கள் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மொத்தம் 248 சிசு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒரு சில சிசுக்கள் 6 இஞ்ச் நீளம் மட்டுமே உள்ளன. சட்ட விரோதமான கருக்கலைப்பு, இறந்து பிறந்த குழந்தைகளின் உடல்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிசுக்களின் உடல்கள் மருத்துவ கழிவாக கருதப்பட்டு உரிய முறையில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பேரல்களில் அடைத்து காட்டுப் பகுதியில் வீசியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

மற்ற நாட்டு உணவுகளை சாப்பிட பயப்படும் ஹிலாரி கிளிண்டன்

27.07.2012.ஒபாமா தம்பதியர் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் விரும்பி சாப்பிடுவர். ஆனால் ஒபாமாவுக்கு பீட்ரூட் மட்டும் பிடிக்காது என அவரது முன்னாள் சமையல் கலைஞர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்களுக்கு சமைக்கும் சமையல் கலைஞர்களின் மூன்று நாள் மாநாடு நடக்கிறது.
இதில் பங்கேற்ற ஒவ்வொரு சமையல் கலைஞரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அரசியலுக்கு வருவதற்கு முன் கே.ஜி.பி எனப்படும் ரஷ்ய புலனாய்வுத் துறை அதிகாரியாக இருந்தவர்.
எனவே அவர் சாப்பிடுவதற்கு முன், அனைத்து உணவுகளையும் பரிசோதிப்பார் என அவரது முன்னாள் சமையல் கலைஞர் ஜில்லெஸ் பிரகார்டு தெரிவித்துள்ளார்.
பிரகார்டு மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்கா ஜனாதிபதியாக ஜார்ஜ் புஷ் இருந்த போதும் அனைத்து உணவுகளும் பரிசோதிக்கப்பட்ட பிறகு சாப்பிடுவார்.
அவர் லண்டன் பயணம் மேற்கொண்ட போது, எப்.பி.ஐ அதிகாரிகள் பரிசோதித்த பின் தான் உணவுகள் அவருக்கு பரிமாறப்பட்டன என்றார்.
மேலும், அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை பொறுத்தவரை, அவர்கள் நாட்டு உணவைத் தவிர்த்து மற்ற நாட்டு உணவுகள் பரிமாறப்பட்டால் சந்தேகப்படுவார். எனவே மற்ற நாட்டு உணவுகள் கூடுதல் பரிசோதனைக்கு பிறகே அவருக்கு பரிமாறப்படும்.
பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிராங்காய்ஸ் மிட்டரன்டுக்கு, விலை உயர்ந்த காளான் உணவுகள் பிடிக்கும். ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மார்க்கெலுக்கு, பாலாடை கட்டி உணவுகள் அதிகம் சாப்பிடுவார்.
ஆனால் ஒபாமாவுக்கு பீட்ரூட் என்றால் பிடிக்கவே பிடிக்காது என வி.வி.ஐ.பி சமையல் கலைஞர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

வணிக வளாகங்களில் நடைபெற்ற நூதன திருட்டு அம்பலம்

27.07.2012.மலேசிய வணிக வளாகங்களில், புதுமையான முறையில் பொருட்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பல்வேறு நகரங்களில் பிரம்மாண்ட வணிக வளாகங்கள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களில், சமீப காலமாக பொருட்கள் திருடு போயின.
இதையடுத்து, வணிக வளாகங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டவர்கள் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டனர்.
இந்நிலையில், ஒரு வணிக வளாகத்தில் சந்தேகப்படும் படியாக திரிந்த மூன்று பேரை, வணிக வளாக காவலர்கள் விசாரித்தனர். அவர்களிடமிருந்த பையை சோதித்த போது, 23 ஜோடி கால்சட்டைகள் இருந்தன.
அதுமட்டுமல்லாது மற்ற பைகளை போட்டுவிட்டு, அவர்கள் தப்பி ஓடி விட்டனர். அந்த பைகளை பரிசோதித்த போது, திருடப்பட்ட பொருட்கள் அலுமினிய காகிதத்தால் சுற்றப்பட்டிருந்தன.
பொதுவாக, வணிக வளாகங்களில் பரிசோதிக்கப்படும் மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் விலை பட்டியலை கணக்கிடும் கருவிகள், அலுமினியத் தகடு அல்லது காகிதத்தை பரிசோதிக்க இயலாதவையாக உள்ளன.
இதை பயன்படுத்தி ஒரு கும்பல், வணிக வளாகங்களில் திருடி வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வணிக வளாக நிர்வாகத்துக்கும், இது தொடர்பான தகவல் தெரிவிக்கப் பட்டு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

3 மாதங்களில் அப்பாவாக, தாத்தாவாக, கொள்ளுத் தாத்தாவாக அவதாரமெடுத்த நபர்

27.07.2012.இங்கிலாந்தைச் சேர்ந்த பேட்ரிக் சிலோன்(வயது 60) என்பவர் 3 மாத இடைவெளியில் அப்பாவாக, தாத்தாவாக, கொள்ளுத் தாத்தாவாக அவதாரம் எடுத்திருக்கிறார். பேட்ரிக் சிலோன் கடந்த 2007ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அவர் 2-வது திருமணம் செய்த மனைவிக்கு கடந்த மார்ச் மாதம் குழந்தை பிறந்தது. 60 வயதில் தாம் தந்தையானது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார் பேட்ரிக்.
இந்நிலையில் ஜூன் மாதத்தில் பேட்ரிக்கு மேலும் 2 மகிழ்ச்சியான தருணங்கள் காத்திருந்தன.
அவருடைய முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகளின் மகளுக்கு குழந்தை பிறந்தது. அதாவது தந்தையான சந்தோஷத்தில் இருந்த பேட்ரிக் இப்பொழுது கொள்ளுத் தாத்தாவானார்.
அடுத்த 12 நாட்கள் தான், இன்னொரு மகள் குழந்தையைப் பெற்றுக் கொடுக்க தாத்தாவாகி இருக்கிறார் பேட்ரிக். இப்பொழுது மொத்தம் பேட்ரிக்குக்கு 6 பேரக் குழந்தைகள்.
இருந்தாலும் 60 வயதில் பிறந்த ஈதன் என்ற குழந்தை தான் தமக்கு பொக்கிஷம் என்றும், ஒவ்வொரு நாளும் அந்த குழந்தையின் புன்னகையில் வாழ்க்கையையே மறந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் பேட்ரிக்.

கலிபோர்னியா வழக்கிற்கும் ௭னக்கும் தொடர்பில்லை’

 _
27.07.2012.கலிபோர்னியா வழக்கிற்கும், ௭ன க் கும் சம்பந்தமில்லை. நித்தியானந்தா பீடம் மட் டும் தான் ௭ன்னுடையது. இந் நிலை யில், ௭னது பெயரில் உள்ள நிறு வனங் கள் மற்றும் அமைப்புகளுக்கும் ௭னக்கும் தொடர் பில்லை ௭ன இளைய ஆதீனம் நித்தி யானந்தா கூறி னார்.

மேலும் அவர், ‘மதுரை ஆதீன சொத் துகள், நிறுவனங்கள் அனைத்தும் மூத்த ஆதீனம் பெயரிலேயே இருக்கும். அவர் உத்தரவுப்படி செயற்படுவேன்’ ௭ன் றார்.

இதனிடையே பேசிய ஆதீனம், ‘௭ன க் கும், நித்தியானந்தாவுக்கும் இடையே ௭ந்த பிரச்சினையும் இல்லை. குளிர் ஒத்துக்கொள்ளாததால், அவருடன் கொடைக்கானல் செல்ல முடிய வி ல் லை. அதற்கு பதில், திருவண்ணா மலை வரை சென்று, அவரை வழிய னுப்ப உள் ளேன்’ ௭ன்றார்

அகதிகள் நாடு திரும்பும் போது செங்கம்பளம் விரிக்க முடியாது: கெஹெலிய

 _
27.07.2012.சட்டபூர்வமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடுகளை செய்துவிட்டு நாடுதிரும்புவோர் ௭வ்வாறான முறைப்பாடுகளை செய்துள்ளனர் ௭ன்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்டும் ௭ன்பதுடன் அகதிகள் நாடு திரும்பும் போது செங்கம்பளம் விரிக்கமுடியாது ௭ன்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் ௭ழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய அகதியொருவரை இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துதடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இலங்கைக்கு திரும்பும் அகதிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லையென்றும் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் ௭ன்றும் அவுஸ்திரேலியாவின் ௭திர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அரசாங்கம் ௭டுக்கும் நடவடிக்கை ௭ன்ன? ௭ன ஊடகவியலாளர் வினவினர். அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், சட்டவிரோதமாக நாடு கடந்துசென்ற அகதிகள் நாட்டுக்கு திரும்பும்போது விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். சட்டரீதியில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர்.

சட்டரீதியாக வெளிநாடுகளுக்கு சென்று அதிகளாக அந்தஸ்துகோருவோரும், சட்டவிரோதமான முறையில் அகதிகளாக செல்வோர் ௭ன இரண்டு பிரிவினர் இருக்கின்றனர். அவ்வாறான அகதிகள் நாட்டுக்கு திரும்பும் போது செங்கம்பளம் விரித்து வரவேற்கமுடியாது. நாட்டின் சட்டத்தின் பிரகாரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் ௭ன்றார்

பச்சிளங்குழந்தையின் உயிரைக் காவு கொண்ட 200 ரூபா

 _
27.07.2012.பச்சிளங்குழந்தை யொ ன்றை 200 ரூபா பணம் காவு கொண்ட சம்ப வம் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் இடம் பெ ற்றுள்ளது. பெரும் பரிதாப த்தை ஏற்படுத்தி யு ள்ள இச் சம்பவம் குறி த்து தெரியவருவதாவது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ் சீவ் குமார். தினக்கூலி தொழிலாள ரான இவர், பிரசவத்திற்காக தனது மனை வி யை ஜலந்தர் அரசு பொது வைத்திய சாலை யில் அனுமதி த் திருந்தார்.

இந்நிலை யில், கடந்த 5 நாட் க ளுக்கு முன்பு இவ ர் களுக்குக் குழந்தை பிறந் தது. ஆனால் குழந்தை, அதிக ௭டையு ட னும் உடல் நல க் குறைவுடனும் பிறந்ததால், அத னை இன்கியூபேட்டரில் வைத்தி ரு க்க மருத் து வமனை வைத்தியர்கள் அறிவு று த் தினர். அப்போதும், குழந்தையின் உடல் நிலை யில் முன்னேற்றம் ஏற்படவில்லை ௭ன்ப தால் சஞ்சீவ் குமார் தனது மனை வி யு டன் அவ் வைத்தியசாலையின் பிரதான வைத்தியரைச் சென்று சந்தித்தார். அப் போது மேலும் ஒரு நாள் குழந்தையை இன் கியூ பேட்டரில் வைத்திருக்க வேண் டும் ௭ன்று தெரிவித்த பிரதான வைத் தி யர், இதற்காக ஒரு நாளு க்கு 25 ரூபா செல விடப் படு வ தால் தங்களுக்கு 200 ரூபா தருமாறு தெரி வி த்தார். அதற்கு சஞ்சீவ் குமார், ஏழைத் தொழி லாளியான தன் னால், அந்தத் தொகை யை வழங்க இய லாது ௭ன்றார்.

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து, குழ ந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவ மனை ஊழியர்கள் தெரிவித்தனர். பணம் கொடுக்க இயலாது ௭ன்று தெரி வி த் த காரணத்தால் இன்கியூபேட் ட ரில் இருந்து குழந்தை ௭டுக்கப்பட்ட தா லேயே, அது உயிரிழந்ததாக சஞ்சீவ் குமார் கூறி னார். ஆனால் தாங்கள் குழந் தை யை இன் கியூ பேட்டரில் இருந்து ௭டு க் க வில்லை ௭ன்றும், உடல்நலக் குறைவு கார ணமாகவே குழ ந்தை பலியாகி உள்ள தா கவும் மருத்து வ மனை தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணை தற் போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது

சிவாஜிலிங்கம் உட்பட 8 பேர் நெல்லியடியில் கைது

 _
27.07.2012.தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல்துறைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே. சிவாஜிலிங்கம் உட்பட அக்கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் 8 பேரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில், ஜூலை 25 படுகொலைகளை நினைவுகூரும் வகையிலும் 1983 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி தங்கதுரை உள்ளிட்ட 53 பேரைப் படுகொலை செய்தமையை நினைவுகூரும் சுவரொட்டிகளை நேற்று வியாழக்கிழமை இரவு ஒட்டிக்கொண்டிருந்தபோதே படையினராலும் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டோம்.

யாழ். குடாநாடு முழுவதும் வெலிக்கடை படுகொலைகளை நினைவுகூரும் சுவரொட்டிகளை ஒட்டியபோதிலும் நெல்லியடியிலேயே எம்மைக் கைது செய்துள்ளனர் எனக் கூறினார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில்,

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அவரது சகாக்கள் எட்டுப் பேரும் விசாரணைக்காகவே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களைக் கைது செய்ததாகக் கூறுவதில் உண்மையில்லை என்றார்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் பொலிஸாரால் கைது

  _
27.07.2012அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தயான் அந்தனி ௭ன்ற இலங்கையர் நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இவரை இரகசியப் பொலிஸார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருடன் இலங்கையை வந்தடைந்த தயான் அந்தனி விமான நிலைய குடிவரவு–குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இவர் 2010 ஆம் ஆண்டு விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்தமைக்காக இவருக்கு ௭திராக 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

உலகின் மிகப் பெரிய முத்தினைக் கொண்ட சிப்பியின் தொல்லுயிர் எச்சம்: உடைக்கத்தயங்கும் ஆராய்ச்சியாளர்கள் (பட இணைப்பு

_
27.07.2012உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரிய முத்தினைக்கொண்டதாக இருக்கும் என நம்பப்படும் சிப்பி ஒன்றின் தொல்லுயிர் எச்சத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இவ் எச்சம் 145 மில்லியன் வருடங்கள் பழமையானதெனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் சிலரால் கண்டெடுக்கப்பட்ட இச்சிப்பி பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் எம். ஆர்.ஐ ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் மூலம் சிப்பிக்குள் என்ன இருக்கின்றது என்பது தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்போது சிப்பிக்குள் கோல்ப் பந்து அளவிலான பொருள் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது முத்தாக இருக்குமென ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இது சாதாரண முத்தினை விட பல மடங்கு பெரியதாகும்.

ஆனால் சிப்பிக்குள் இருக்கும் முத்தினை வெளியே எடுப்பதற்கு விஞ்ஞானிகள் மறுப்புத் தெரிவித்து விட்டனர்.

முத்தினை எடுப்பதற்காக மிகப்பழமையான சிப்பியை சிதைக்க நேரிடும் என்ற காரணத்தினாலேயே ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

___

நிலிசனின்பிறந்த நாள்வாழ்த்து



கனடா ரொரண்டோ வில் வசிக்கும்பாலேஸ்வரன் தம்பதி களின்நிலிசனின்
பிறந்த நாள் இன்று.25.07.2012 இவரை அப்பா, அம்மா ,சகோதரர்கள் ,அப்ப ப்பா,அப்பம்மா,அம்மப்பா மற்றும் பெரியப்பா ,பெரியம்மா ,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் , வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து நவட்கிரி இணையமும் வாழ்த்துகின்றோம்

இவருக்கும் கடையில் பொருள் வாங்க ஆசை வந்துவிட்டது போல!

இவருக்கும் கடையில் பொருள் வாங்க ஆசை வந்துவிட்டது போல!

, 27 July 2012,
சில நேரங்களில் அழைக்காத நபர் திடீரென்று வந்து அதிர்ச்சியை தருவார்கள். அதுபோல அமெரிக்காவில் கடைக்குள் கரடி நுழைந்து அங்கிருந்தவர்களை அலற வைத்தது.
பென்சில்வானியா மாகாணத்தில் பீத்ஸ்பெர்க் என்ற இடத்தில் உள்ள கடையில் ஏராளமான வாடிக்கையாளர் பொருட்களை வாங்க குவிந்திருந்தனர். அந்த நேரத்தில் 125 பவுண்ட் எடையுள்ள பெண் கரடி ஒன்று கடைக்குள் நுழைந்தது.
கரடி நிற்பதை கண்டு சிலர் அலறினார்கள். உடனே கடைக்குள் இருந்தவர்கள் வேறு வாசல் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் கரடி கடையில் பல பகுதிக்குச் சென்று உலாவந்தது. ஆனாலும் எவ்வித சேதத்தையும் அது ஏற்படுத்தவில்லை.
உடனே வனவிலங்கு ஆர்வலர்கள் வரவழைக்கப்பட்டு, மயக்க ஊசியை போட்டு கரடியை பிடித்தார்கள். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.