siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 27 ஜூலை, 2012

சங்கிலியையும் சைக்கிளையும் பறிகொடுத்து காதலனால் ஏமாற்றப்பட்ட இளம் பெண் _

 _
27.07.2012.இரண்டு இளம் பெண்கள் உட்பட மூவரைக் காணவில்லையென சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன் கிழமை உறவினர்களினால் முறையிடப்பட்டுள்ளது.

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் இளம் பெண் ஒருவரும் ஏழாலைப் பகுதியில் இளம் பெண் ஒருவரும் காணாமல் போயுள்ளதுடன் உடுவில் நாகம்மாள் வீதியில் ஓர் இளைஞனும் காணாமல் போயுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

இதில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் காணாமல் போன இளம் பெண் நள்ளிரவு திரும்பி வந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.

தன்னிடம் இருந்த சங்கிலியையும் மற்றும் சைக்கிளையும் தனது காதலன் வாங்கிக்கொண்டு தன்னை வவுனியாவுக்கு அனுப்பி வைத்தாகவும் தான் வருவதாகக் கூறி பின்னர் அவர் தன்னிடம் வராமையால் ஏமாற்றப்பட்ட நிலையில் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இளைஞன் தற்போது திருமலையில் உறவினருடைய வீட்டில் இருப்பதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

மூன்றாவது நபர் பற்றிய விபரம் எதுவும் பொலிசாருக்குக் கிடைக்காத நிலையில் தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளார்கள்

0 comments:

கருத்துரையிடுக