27.07.2012உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரிய
முத்தினைக்கொண்டதாக இருக்கும் என நம்பப்படும் சிப்பி ஒன்றின் தொல்லுயிர் எச்சத்தினை
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இவ் எச்சம் 145 மில்லியன்
வருடங்கள் பழமையானதெனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் சிலரால்
கண்டெடுக்கப்பட்ட இச்சிப்பி பல்வேறு ஆய்வுகளுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும்
எம். ஆர்.ஐ ஸ்கேனிங் தொழில்நுட்பத்தின் மூலம் சிப்பிக்குள் என்ன இருக்கின்றது
என்பது தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சிப்பிக்குள் கோல்ப்
பந்து அளவிலான பொருள் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது முத்தாக
இருக்குமென ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இது சாதாரண முத்தினை விட
பல மடங்கு பெரியதாகும்.
ஆனால் சிப்பிக்குள் இருக்கும் முத்தினை வெளியே
எடுப்பதற்கு விஞ்ஞானிகள் மறுப்புத் தெரிவித்து விட்டனர்.
முத்தினை
எடுப்பதற்காக மிகப்பழமையான சிப்பியை சிதைக்க நேரிடும் என்ற காரணத்தினாலேயே
ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். ___
|
0 comments:
கருத்துரையிடுக