
ஜப்பானில் குழந்தைளின் வறுமை நிலை குறித்து எடுக்கப்பட்ட நலத்துறை அமைச்சகத்தின் கணக்கீடு இந்த ஆண்டு அதிக பட்ச உயரத்தைத் தொட்டுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டைவிட இப்போது 16.3 சதவிகிதம் அதிகரித்துக் காணப்படும் இந்த நிலையானது கணக்கீடு தொடங்கப்பட்ட முப்பதாண்டுகளில் இதுவரை இல்லாத உயர்ந்தபட்ச சதவிகிதம் என்று கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 34 உறுப்பினர் நாடுகளில் ஜப்பானிலும் குழந்தை...