பிரித்தானிய தன்னார்வ தொண்டர் குர்ஹாம் சாக்கீ படுகொலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்ப உள்ளதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினமன்று, குர்ஹாம் சாக்கீயும் அவரது ரஸ்ய காதலி விக்டோரியாவும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரான குர்ஹாம் சாக்கீ கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் நடைபெறவில்லை என ஏற்கனவே பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வார இறுதியில் சிமோன் டான்சூக் சிறிலங்காவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்ப உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடொன்று இவ்வாறு நடந்து கொள்வது சரியா என தாம் கேள்வி எழுப்ப உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மூடிமறைக்க சிலர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆளும் கட்சி உறுப்பினர் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காரணத்தினால் இவ்வாறு முயற்சிக்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பவம் தொடர்பான இரண்டு பிரதான சாட்சியாளர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்