
தெற்கு சூடானில் மோசமான கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.ஒருவாரத்துக்கு முன்னர் அங்கு வெடித்த இன வன்முறைகளில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்றை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் தன்னிடம் பேசியுள்ளதாக ஜூபாவில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.இவர்களில் பெரும்பாலானவர்கள் நியூர் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்.அனைவரையும் போலீஸ் நிலையம்...