அமெரிக்காவில் தந்தை ஒருவர் தனது மகனை முதுகில் தூக்கி விளையாடும்போது, எதிர்பாராதவிதமாக மகன் கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்ட குற்றத்திற்காக தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ஒரேகன் மாகாணம், பிவர்டன் நகரில் வசித்து வந்த இந்த தந்தை, கடந்த பிப்ரவரி 6ம் திகதி, தனது மூன்றரை வயது மகனை முதுகில் தூக்கி உப்பு மூட்டை விளையாட்டு காண்பிக்க முயன்றுள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக மகன் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ரன்டல் சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர் கேட்ட கேள்விக்கு, மகனை அவனது தந்தை கீழே போட்டிருக்கலாம் என்று ஒரு வார்த்தையை கூறிவிட்டார். உடனே மருத்துவமனையில் பணிக்கு அமர்த்தப்பட்டு இருந்த சமூக சேவை அமைப்பினர் அந்த பெண்ணிடம் ஏதேதோ ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
அவசரத்தில் அப்பெண்ணும் கையெழுத்து போட்டுள்ளார். ஆனால் பிறகுதான் தெரிந்துள்ளது, சிறுவனை கீழே தள்ளிய தந்தையை வீட்டுக்குள்ளே அனுமதிக்க கூடாது என்பதற்கான உத்தரவுதான் அந்த ஆவணங்களில் எழுதப்பட்டிருந்தது என்பது.
இதன்பிறகு கணவர், அந்த சமூக சேவை அமைப்பினர் அப்பெண்ணுக்கு கவுன்சிலிங் என்ற பெயரில், அவரது கணவரை பற்றி கேள்வி மேல் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
உனது கணவர் கோபக்காரரா? அடித்து துன்புறுத்துபவரா? என்றெல்லாம் கேள்விகள் கேட்க, இப்பெண்ணும் எனது கணவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்த கவுன்சிலிங் முடிவுற்றதைத் தொடர்ந்து, யூன் மாத கடைசியில், தந்தை மீதான வழக்கை வாபஸ் பெறலாம் என்று சேவை அமைப்பு சிபாரிசு செய்துள்ளது.
ஆனால் யூலை மாதம் 22ம் திகதி, இவ்வழக்கு, சிறார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது குழந்தையின் தாய், மனதளவில் சோர்ந்துள்ளார். எனவே, சிறுவனை அவனது தந்தை தள்ளிவிட்டிருக்கும் வாய்ப்பை அந்த பெண் மறுத்து சொல்வதை ஏற்க முடியாது என்று கூறி, தந்தை குற்றவாளிதான் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து மறுநாளே தந்தை கைது செய்யப்பட்டார் தற்போது, 1000 டொலர் செலுத்தி ஜாமீனில் அவர் வெளியே வந்துள்ளார்