முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அவுஸ்திரேலியா சென்ற படகு, கொக்கோஸ் தீவுக்கு 40கடல் மைல் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் பயணித்தவர்கள் தம்மை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு முல்லைத்தீவிலுள்ள அவர்களது உறவினர்களுக்கு சட்லைட் தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த படகு சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னர் 60 பயணிகளுடன் முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. எனினும் இதுவரை காலமும் எந்தவிதமான தகவல்களும் கிடைத்திராத நிலையில், இன்று மாலை படகிலுள்ளவர்கள் தமது உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
படகிலுள்ள 60 பயணிகளில் நான்கு கர்ப்பணி தாய்மார்களும் ஒன்பது சிறுவர்களும் உள்ளதாகவும், இரண்டு, மூன்று தடவைகள் விமானம் தம்மை வட்டமிட்டுச் சென்றதாகவும் எனினும் தம்மை காப்பாற்ற அவுஸ்திரேலிய கடற்படை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
உணவு மற்றும் எரிபொருள் முற்றாக தீர்ந்து போன நிலையில் தொடர்ந்தும் பயணிக்க முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் அவர்கள் தமது உறவினர்களுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்,