siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

சமுத்திரக்கனியின் சாட்டை பாடல்கள் இன்று வெளியீடு

28.08.2012.BY.rajah. மைனா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஷாலோம் ஸ்டூடியோஸ் சார்பில் பிரபு சாலமன், ஜான் மேக்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் சாட்டை. இந்த படத்தில் சமுத்திரகனி ஆசிரியர் வேடம் ஏற்று நடிக்கிறார். படத்தில் கண்ணியம் மிக்க ஆசிரியராக வலம் வரும் சமுத்திரகனிக்கு சுவாசிகா ஜோடியாக நடிக்கிறார். இளம் கதாநாயகனாக நடிக்கும் யுவனுக்கு, மகிமா ஜோடியாக நடிக்கிறார். வில்லனாக தம்பி ராமய்யா நடிக்கிறார். மைனா படத்திற்கு தேசிய...

ஊடகத்தினருக்காக திரையிடப்பட்ட 18 வயசு படம்

சென்னை ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் ஊடகத்தினருக்காக 18 வயசு படம் திரையிடப்பட்டது. நிக் ஆர்ட்ஸ் தயாரித்துள்ள 18 வயசு படத்தை ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார். இதில் ஜானி, காயத்திரி, ரோஹிணி, சத்யேந்திரன், மறைந்த எழுத்தாளர் கிருஸ்ணா டாவின்சி, யுவராணி, டொக்டர் சூரி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்ய தினேஷ், சார்லஸ் போஸ்கோ இசையமைத்துள்ளனர். சண்டைப் பயிற்சியை ராஜசேகர் கவனிக்க திரைப்படத்தை ஆண்டனி தொகுத்து வழங்கியுள்ளார். குடும்ப...

புதிய தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்ட உயிர்மொழி

28.08.2012.BYrajah. கொலிவுட்டில் ஹார்மோன் மூவி மேக்கர்ஸ், மானவ் புரடக்சன் இணைந்து தயாரித்துள்ள படம் உயிர்மொழி. இப்படத்தில் மானவ், ராஜீவ், சர்தாஜ், கீர்த்தி, சாம்ஸ், சசி, பாபி ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி அறிமுக இயக்குனர் ராஜா இயக்கியுள்ளார். விளம்பரப்படங்களில் பணியாற்றியுள்ள இவர், ப்ரைம் ஃ போகஸ் ஸ்டுடியோவில் எடிட்டராக பணிபுரிந்து, திரைப்பட இயக்கத்தையும் கற்று தேர்ந்தவர். உயிர்மொழி படம் குறித்து...

16 வயது பெண்ணாக நடிக்கும் தேவயானி

Tuesday, 28 August 2012, 07:57.50 AM GMT +05:30 ] கொலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து பிரபல நடிகையாக திகழ்ந்தவர் தேவயானி.காதல் கோட்டை, பிரண்ட்ஸ் என்று பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் இயக்குனர் ராஜகுமாரனை மணந்து கொண்ட பின்னும் அவ்வப்போது குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். 28.08.2012.BY.rajah. கோலங்கள் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் வெற்றிகரமாக நடித்த இவர் தற்போது திருமதி தமிழ் படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை...

கணவரின் பிறந்தநாளை பார்வையற்றோருடன் கொண்டாடிய சினேகா

Tuesday, 28 August 2012, BYrajah. நடிகை சினேகா வழக்கமாக தனது பிறந்தநாளை பார்வையற்றோருடன் கொண்டாடுவார். அதேபோலவே அவரது கணவரான நடிகர் பிரசன்னாவின் பிறந்த நாளையும் மந்தைவெளியில் பார்வையற்றோருடன் இன்று கொண்டாடினார். பிரசன்னா பார்வையற்றோர் மத்தியில் கேக் வெட்டினார். அவர்களுக்கு சினேகா கேக் ஊட்டி விட்டார். பின்னர் மூன்று சக்கர சைக்கிள், 100 பேருக்கு ஆடைகள், உபகரணங்கள், 200 பேருக்கு உணவு போன்ற உதவி பொருட்களையும் சினேகாவும், பிரசன்னாவும் வழங்கினர். நிகழ்ச்சியில்...

ரஜினி ஸ்டைலில் சசிகுமார்!

28,08.2012.BYrajah.தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில் இயக்குனர் சசிகுமார் நடிக்கும் படம் சுந்தரபாண்டியன். சசிகுமாருக்கு ஜோடியாக லஷ்மி மேனன் நடிக்க நடிகர் சூரி, தேசிய விருது பெற்ற அப்புகுட்டி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் சுந்தர பாண்டியன் படத்தின் இசை வெளியீடு நடந்தது. இதில் இயக்குனர்கள் பாலா, சமுத்திரகனி, ஆகியோர் கலந்துகொண்டனர். அதன் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களின்...

சந்தனமடு ஆற்றுப் பகுதியில் யானைத் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் பலி

28.08.2012.BY.tajah. மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்தனமடு ஆற்றுப் பகுதியில் நேற்று திங்கள் அதிகாலை யானைத் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். பலியானவர் களுவன்கேணியைச் சேர்ந்த வடிவேல் வரதன் (32 வயது) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.இவர் நேற்று அதிகாலை களுவன்கேணியிலிருந்து சந்தனமடு ஆற்றுக்குச் சென்று கொண்டிருந்தபோது ஆற்றுக்கு அண்மையில் யானை குறுக்கிட்டு இவரைத் தாக்கிக் கொன்றுள்ளது. நேற்றுக் காலை செங்கலடி...

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்

28.08.2012.BY.rajah. நடைபெற்று முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட மோசடியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. வினாத்தாள் மோசடி தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் மேற்கண்டவாறு எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நேற்று முன்தினம் இவ்வாண்டுக்கான...

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ தெல்லிப்பழை துர்க்கை தேர்த் திருவிழா

.BY.rajah.28.08.2012 வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு நடைபெற்ற வசந்தமண்டப பூசையைத் தொடர்ந்து உள் வீதியுலா வந்த துர்க்கை அம்மன் 9 மணியளவில் தேரில் ஏறி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தாள். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத்தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டனர். பக்கதர்களின் நன்மை கருதி...

கிளிநொச்சியில் இரவு 12 மணிக்கு பின்னர் தொடரும் சிங்களவரின் வெறியாட்டாம்!

 செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, BY.rajah.   இலங்கையில் போருக்கு பின்னரான காலத்தில் தென்னிலங்கை சிங்களவர்கள் வடக்குப் பிரதேசங்களுக்கு சுற்றுலா வருவது தொடர்ந்த வண்ணமே உள்ளன. இவ்வாறு வரும் சிங்களவர்களுக்கு இரவு நேரங்களில் தங்குவதற்கு இராணுவம் வசதிகளை செய்துகொடுக்கிறது. இவ்வசதிகள் புலிகளின் இடங்கள் எனக் கூறிக்கொண்டு, இராணுவம் தம்வசம் வைத்துக்கொண்டுள்ள தமிழர்களின் காணிகள் மற்றும் வீடுகளிலேயே வழங்கப்படுகின்றன. இவ்வாறு கிளிநொச்சி திருநகர்...

சுன்னாகத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி

  செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, BY.rajah.   யாழ்ப்பாணம், சுன்னாகம் மதவடியில் இன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய உற்சவத்திற்கு வந்தவர்களை ஏற்றிக்கொண்டு யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த மினிபஸ் ஒன்று, சைக்கிளில் சென்ற நபரை மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தில் சுன்னாகம் மயிலணி வடக்கை சேர்ந்த...

வாந்தி ௭டுத்த தங்கைக்கு மீண்டும் மீண்டும் தூக்க மருந்தை வாயில் ஊற்றினேன்: முக்கொலை சந்தேகநபர் வாக்குமூலம்

28.08.2012-By rajah தூக்க மருந்துக்கள் கலந்த பழச்சாற்றை அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கொடுத்தபோது அம்மா மளமளவென பருகிவிட்டார். அப்பாவோ கொஞ்சம் குடித்து விட்டு கசக்கிறது ௭ன்றார். புதுப் பழங்கள் ௭ன்றால் அப்படித்தான் இருக்குமென்று கூறவே அவரும் குடித்துவிட்டார். பின்னர் தங்கைக்கும் கொடுத்தார். தங்கையோ சிறிது நேரத்தில் வாந்தி ௭டுத்துவிட்டார். ௭னவே மீண்டும் மீண்டும் தூக்க மாத்திரையை தங்கைக்கு கலக்கிக்கொடுத்தேன் ௭ன்று வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபரான...

தமிழில் என்னை வெறுத்து ஒதுக்குகிறார்கள்: பத்மப்பிரியா

.BY.rajah.Tuesday, 28 August 2012, தமிழ் சினிமாவில் என்னை ஒதுக்குகிறார்கள், வாய்ப்பு தருவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் பத்மப்பிரியா. தொடர்ந்து சர்ச்சைகளின் நாயகியாக திகழ்கிறார் பத்மப்ரியா. கன்னத்தில் அறைந்ததாகக் கூறி, இயக்குநர் சாமியை மன்னிப்புக் கேட்க வைத்தவர், அடுத்து மலையாளத்தில் மேனேஜருக்கு கூடுதல் சம்பளம் கேட்டு பிரச்சினை செய்தார். இதனால் நடிகர், நடிகைகள் யாரும் மேனேஜரே வைத்துக் கொள்ளக் கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது மலையாள...

தற்கொலைக்கு முயலவில்லை: சுஜிபாலா

BYrajah. Tuesday, 28 August 2012, காய்ச்சல் காரணமாக மாத்திரை சாப்பிட்டதாகவும் தற்கொலைக்கு முயற்சி செய்ய வில்லை என்றும் நடிகை சுஜிபாலா கூறியுள்ளார். கொலிவுட்டில் ராசுமதுரவன் இயக்கத்தில் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் படத்தில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் நாயகியாகவும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் எம்.ஜி.ஆர் படத்தில் கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடித்து வருகின்றார். இவருக்கும் உண்மை படத்தின் இயக்குனர் ரவிக்குமாருக்கும்...

ரோம்னிக்கு ஆதரவாக சுவிஸ் வங்கி ஊழியர்கள்

BY.rajah,28.08.2012 அமெரிக்காவிலுள்ள சுவிஸ் வங்கிகளான கிரெடிட் சுவிஸ் மற்றும் UBSல் பணிபுரியும் வங்கிப் பணியாளர்கள் ஒபாமாவை விட மிட் ரோம்னிக்கு அதிகளவில் தேர்தல் நிதி வழங்கியுள்ளனர். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் 6ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கின்றது. இந்நிலையில் இரு வேட்பாளர்களின் பணப்பெட்டியும் தேர்தல் நிதியால் நிரம்பி வழிகின்றது. அமெரிக்க வரலாற்றிலேயே இந்த 2012 ஆண்டு தேர்தல் தான் அதிக செலவில் நடத்தப்படும் முதல் தேர்தலாக கருதப்படுகின்றது....

கலிபோர்னியாவில் 100 சிறு நிலநடுக்கங்கள்: அதிர்ச்சியில் மக்கள்

B.Yrajah.  செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் அடுத்தடுத்து 100 சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கலிபோர்னியாவின் தென் கிழக்கு பகுதியில் எல் சென்ட்ரோ என்ற இடத்தின் வடக்கு பகுதியில், உள்ளூர் நேரப்படி கடந்த 26ஆம் திகதி காலை 10.02 மணிக்கு முதல் நில நடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவில் 3.9 என பதிவானது. இதன்பின் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட சிறு...

திருகோணமலை மொரவௌ பகுதியில் இன்று அதிகாலை வர்த்தக நிலையத்தில் கொள்ளை

. BY.rajah. செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,   திருகோணமலை மொரவௌ பொலிஸ் பிரிவிற்குட்ட ரொட்டவௌ பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு ஏராளமான பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 12,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள், பல பெறுமதியான பொருட்கள் மற்றும் 20,000 ரூபாவுக்கும் அதிகமான பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.. கொள்ளையர்களை பொலிஸார் துரத்திச் சென்ற போது ஒருவரின்...

வெள்ளவத்தை முக்கொலை சந்தேகநபர் பிரசான் இன்று நீதிமன்றில் வாக்குமூலம்

BY.rajah.    செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,   வெள்ளவத்தை ராமகிருஷ்ண டெரஸில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற மூன்று கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று கொழும்பு நீதிமன்றில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார். தம்மால் புரியப்பட்டதாக கூறும் மூன்று கொலைகள் தொடர்பில் அவர் கொழும்பு மேலதிக நீதவான் ஏ.நிஷாந்த முன்னிலையில் இன்று வாக்குமூலம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன… ஹட்டன் - கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த...

இலங்கைக்கு சொந்தமான கப்பல் டேர்பனில் தடுத்து வைப்பு

BYrajah.   செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,   இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான லங்கா மஹாபொல கப்பல் இன்னும் டேர்பன் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்த கப்பல் டேர்பனில் நங்கூரமிட்டதற்கான கட்டணமான 81 ஆயிரம் டொலர்கள் செலுத்தப்படவில்லை என்பதாலும், உரிய தரம் பேணப்படாமையாலும், கடந்த மே மாதம் 17ம் திகதி டேர்பன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டது. அதன் மாலுமிகள் கடந்த ஜுன் மாதம் நாடு திரும்பினர். எனினும்...

கொக்கிளாய் பகுதியிலுள்ள தனியார் காணியில் வந்தமர்ந்த கெளதம புத்தர்

BY.rajah    செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,   முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்குளாய் எனும் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பாரிய பெளத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சிங்கள மக்களின் கால் தடமே இதுவரை பதியப்படாத இவ்விடத்தில் தற்போது படையினர் இவ்வாறு பாரிய பெளத்த விகாரை அமைப்பதற்கான காரணம் என்ன என மக்கள் கேள்வி எழுப்பியதுடன், இனிவரும் காலங்களில் இப்பகுதியில்...

நூதனசாலை கொள்ளைச் சம்பவம்: ஊடகங்களுக்கு வழங்கிய பொலிஸார் குறித்து விசாரணை

BY.rajah.   செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,   கொழும்பு நூதனசாலை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்ட காவற்துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. காவற்துறை தலைமையகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அண்மையில் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திய போது, அவர் வழங்கிய தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்ட அதிகாரிகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது குறித்து காவற்துறை...

கைதடி அரச சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த பச்சிளம் குழந்தை இறப்பு

BYrajah.    செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,   குடாநாட்டின் அரச சிறுவர் இல்லத்தின் பராமரிப்பில் இருந்த பச்சிளம் குழந்தை நேற்று உயிரிழந்துள்ளது. கிளிநொச்சியில் பிறந்த ஜெயலக்சுமி என்று பெயரிடப்பட்ட மூன்றரை வயதுக் குழந்தையே உயிரிழந்தது என்று யாழ். போதனா வைத்தியசாலை தெரிவித்தது. கைதடியில் உள்ள அரச சிறுவர் இல்லத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்குப் போதிய ஆளணி வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்த நிலையில் இந்தக் குழந்தை...