siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

கொக்கிளாய் பகுதியிலுள்ள தனியார் காணியில் வந்தமர்ந்த கெளதம புத்தர்

BY.rajah
 
 செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012,
 
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்குளாய் எனும் கிராமத்தில் தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பாரிய பெளத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சிங்கள மக்களின் கால் தடமே இதுவரை பதியப்படாத இவ்விடத்தில் தற்போது படையினர் இவ்வாறு பாரிய பெளத்த விகாரை அமைப்பதற்கான காரணம் என்ன என மக்கள் கேள்வி எழுப்பியதுடன், இனிவரும் காலங்களில் இப்பகுதியில் சிங்கள குடியோற்றங்கள் ஆரம்பத்தில் இருந்ததாக கூறி சிங்கள மக்களை குடியேற்ற எத்தனிக்கும் முயற்சியின் ஆரம்ப நடவடிக்கையே இது என அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2010ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் நடுப்பகுதியில் இப்பகுதியில் மக்கள் மீள்குடியோற்றப்பட்டனர். எனினும் தற்போது பெளத்த விகாரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில் மக்கள் குடியேறச் சென்ற போது குறித்த பகுதி பெளத்த விகாரை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக காணிச் சொந்தக்காரர் பல தரப்பினருடனும் முறையிட்டும் எந்த விதமான பலனும் கிடைக்கவில்லை என அவர் கண்ணீர் மல்க குறிப்பிடுகின்றனர்.
யுத்தத்தின் போது எமது உடமைகள் மற்றும் பொருளாதார ரீதியான அனைத்தையும் இழந்தோம். ஆனால் எமது நிலம் இருக்கின்றது என்ற நம்பிக்கையில் வந்ததாகவும், ஆனால் அதுவும் தற்போது அதுவும் கனவாகி போய்விட்டதாகவும் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்