siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 31 அக்டோபர், 2012

இன்னும் ஒரு மாதத்தில் புதிய படம்: கே.வி. ஆனந்த்

Wednesday, 31 October 2012, By.Rajah.
மாற்றான் படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்து வருகிறார்.
மாற்றான் படத்தினைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தியை இயக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியன.
இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கே.வி.ஆனந்த், பெரிய நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் நான் இன்னும் எதுவும் ஒப்பந்தமாகவில்லை என்றார்.
கோ படத்தினை முடித்துவிட்டு உடனே 'மாற்றான்' படத்தின் வேலைகளை தொடங்கி விட்டேன். ஆகையால் தற்போது தான் குடும்பத்தினருடன் நேரத்தினை செலவிட்டு வருகிறேன்.
எனது அடுத்த படத்தினை பற்றிய அறிவிப்பு வர குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகலாம். எனது அடுத்த படத்திற்கான கதையினை தயார் செய்து வருகிறேன்.
அதை முடித்தவுடன் தான் நடிகர்கள் தெரிவு நடைபெறும் என்று கூறியிருக்கிறார்

நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டேனா? லேகா விளக்கம்

Wednesday, 31 October 2012, By.Rajah.
நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டீர்களா? என்றதற்கு பதில் அளித்துள்ளார் லேகா வாஷிங்டன்.
ஜெயம் கொண்டான், வா குவாட்டர் கட்டிங் படங்களில் நடித்தவர் லேகா வாஷிங்டன். அந்த படங்களுக்கு பிறகு அவரை காணவில்லை.
இது குறித்து அவர் கூறுகையில், அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனிங் கல்லூரியில் படிப்பை முடித்த பிறகே, நடிக்க வந்தேன்.
தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தலா ஒரு படம் நடித்து வருகிறேன்.
நடிப்பை தவிர்த்து டிசைனிங் தொழிலில் எனக்கு ஆர்வம் அதிகம். எனவே அதற்கான பணியில் கவனம் செலுத்தி, சமீபத்தில் விருதும் பெற்றேன்.
டிசைனிங் தொழிலில் எனது ஆதிக்கம் தான் இருக்கும். நடிப்பை பொறுத்தவரை மற்றவரின் எண்ணப்படித்தான் நடிக்க முடியும்.
எனது பெரும்பாலான நேரத்தை பேஸ்புக், டுவிட்டரில் கழிப்பதுடன் நிறைய சினிமா பார்க்கிறேன். இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ரூ.25 கோடி சொத்து வைத்திருக்கும் அனுஷ்கா???

 Wednesday, 31 October 2012, By.Rajah.
நடிகைகளின் சினிமா வாழ்க்கை குறுகியது. எனவே புத்திசாலித்தனமாக பலர் தங்கள் சம்பாத்தியத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கின்றனர்.
சிம்ரன் முன்னணி நடிகையாக இருந்த போது நிறைய நிலங்கள், வீடுகள் வாங்கினார். அவரைப் போலவே திரிஷா, நமீதா போன்றோர் சொத்துக்கள் வாங்கி வருகிறார்கள்.
அனுஷ்காவும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
தமிழில் 'சிங்கம்', 'வானம்', 'தெய்வத்திருமகள்', 'வேட்டைக்காரன்' போன்ற வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் அறிமுகமான போது அனுஷ்காவின் சம்பளம் ரூ.40 லட்சமாக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு படத்துக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் சம்பளம் வாங்குகிறார்.
சம்பள பணத்தை எல்லாம் நிலத்தில் போட்டுள்ளார். விசாகபட்டிணம், ஐதராபாத்தில் வீட்டு மனைகள் வாங்கியுள்ளார்.
சொந்த ஊரான பெங்களூரிலும் நிலங்கள் வாங்கியுள்ளார். அனுஷ்கா முதலீடு செய்துள்ள நிலங்கள் அனைத்தும் வேகமாக விலையேறும் பகுதிகளில் உள்ளன.
எனவே தற்போது ரூ.25 கோடியாக இருக்கும் இந்த சொத்துக்களின் மதிப்பு ஒரிரு வருடங்களில் பல மடங்கு உயரும் என்று கூறப்படுகிறது

மணிஷர்மாவின் அதிரடி இசையில் வெற்றிச்செல்வன்

 Wednesday, 31 October 2012,By.Rajah.
சிருஷ்டி சினிமா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ருத்ரனின் இயக்கத்தில் அதிவேகமாக உருவாகி வரும் படம் வெற்றிச் செல்வன்.
இப்படத்தில் கோ படத்தில் வில்லனாக நடித்த அஜ்மலும், தோனி படத்தில் நடித்த ராதிகா ஆப்தேவும் ஜோடியாக நடிக்கின்றனர்.
ஷாஜஹான், போக்கிரி போன்ற படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்த மணிஷர்மா இசையமைக்கிறார். இப்படத்தை இயக்குனர் ருத்ரன் இயக்குகிறார்.
படம் குறித்து அவர் கூறுகையில், இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம், பாடல்கள். ஐந்து பாடல்களையும் கார்க்கி எழுதியுள்ளார்.
பெரிய இடத்துப்பிள்ளை, எப்படி பேசுவார் பழகுவார் என்று தெரியாது. ஒரே ஒரு பாடல் என்று சொல்லி தான் அழைத்தோம்.
இசையை கொடுத்தவுடன் அடுத்த நாள் அழைத்து ஒரு பல்லவியை சொன்னார், அடுத்த நிமிடமே படத்தின் எல்லா பாடல்களையும் இவர் தான் எழுத வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்.
காதல் வந்து முழுதாய் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலையை அவர் எழுதியிருந்த வரிகள்...
"விட்டு விட்டுத் தூவும் வெட்கங்கெட்ட வானம் கிட்டத் தட்ட என் நெஞ்சமோ?"
இந்தப் பாடல் மட்டும் அல்ல, ஐந்து பாடல்களிலும் மணிஷர்மா அவர்களின் இசையும் கார்க்கியின் தமிழும் சேர்ந்து விளையாடியிருப்பதை பார்க்கலாம் எனவும் இயக்குனர் ருத்ரன் கூறியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுதினம் (நவம்பர் 2ம் திகதி) நடைபெற உள்ளது.

இந்தியாவின் அழகியாக நடிகை நமீதா தெரிவு

Wednesday, 31 October 2012,By.Rajah..உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிய பெண்களின் புகைப்படங்கள், அவர்களின் அணுகுமுறை போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரபலத்தை அழகியாக அறிவிக்கிறது டோக்கியோ தொலைக்காட்சி.
இந்த ஆண்டிற்கான இந்தியாவின் அழகியாக நடிகை நமீதாவை அறிவித்துள்ளது டோக்கியோ தொலைக்காட்சி.
இந்தியாவின் புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த புகைப்பட ஆல்பத்திலிருந்து நமீதாவின் ஒரு புகைப்படத்தைத் தெரிவு செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அந்த தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிவிப்புக் கடிதம்: யாரி சுகி கோ ஜி - அர்பன் லெஜன்ட்ஸ் ஸ்பெஷல் (Yari-sugi ko-ji -Urban Legends Special) எனும் தலைப்பில் வரும் நவம்பர் 2ம் திகதி ஒரு சிறப்பு ஒளிபரப்பை மேற்கொள்கிறோம்.
இதில் இந்தியாவுக்கான அழகியாக நடிகை நமீதாவை தெரிவு செய்துள்ளோம்.
வரும் நவம்பர் 2ம் திகதி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சுவாரஸ்யமான உண்மைகள், சம்பவங்களை தொகுத்து வழங்குவதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிகள் பற்றி சிறப்பு நிகழ்ச்சியை வழங்குகிறோம். அழகு என்பது நாட்டுக்கு நாடு எப்படி மாறுபடுகிறது என்பதைக் காட்டுவதுதான் நோக்கம்.
இதற்காக இந்திய கலைஞர் கார்த்திக் சீனிவாசன் எடுத்த நடிகை நமீதாவின் படத்தை இந்திய அழகின் பிரதிநிதியாக தெரிவு செய்துள்ளோம்.
இந்திய அழகின் பிரதிநிதியாக நமீதாவின் படத்தை தெரிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவிக்கவே இந்த முறையான அறிவிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது

ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்!

          
Wednesday 31 October 2012  By.Rajah.
பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு பெண்ணின் முகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாமாம்.

ஆனால் ஆண்கள் முகத்தைப் பார்த்தால் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதாம். காரணம் ஆண்களின் முகத்திற்கு ஏகப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டும் திறமை கிடையாதாம்.

இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக ஒரு ஆயிரம் ஆண், பெண்களை எடுத்துக் கொண்டனர். அவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் இடம் பெற வைத்தனர்.

ஏற்கனவே அவர்கள் குறித்த தகவல்களை வாங்கி வைத்துக் கொண்டனர். இது தவிர புகைப்படங்களைப் பார்த்து கருத்து சொல்வோருக்காக கேள்விகளையும் தயார் செய்தனர்.

பின்னர் புகைப்படங்களை இணையதளத்தில் பிரசுரித்து, அந்தப் பெண்களின் முகங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று கேள்வி கேட்டிருந்தனர். இந்த இணையதளத்திற்கு கிட்டத்தட்ட 6500 பேர் வருகை தந்து அதில் இடம் பெற்றிருந்த பெண்களின் முகத்தைப் பார்த்து அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது என்பதைத் தெரிவித்திருந்தனர்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!

         
Wednesday 31 October 2012  .By.Rajh
திருமணம் என்பதை "ஆயிரம் காலத்து பயிர்" என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற பழமொழியும் உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கும் ஆண்களுக்கு பொறுப்பும் உண்டு.
ஆனால் சில திருமணங்கள், காதல் திருமணமோ அல்லது பெற்றோர் மற்றும் சொந்தங்கள் முன் நின்று நடத்திய திருமணங்கள் கூட சில சமயத்தில் சரியான புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர்.
பிரச்சினைகள் பெரும்பாலும் ஆண்கள் வழியாகவே வருகின்றன. (ஆண்களை மட்டும் குறை சொல்லவில்லை). கணவனது குடிப்பழக்கம், வேலையின்மை, வருமானமின்மை, கணவரின் தாய், தங்கை மற்றும் பாலியல் பிரச்சனைகள் போன்றவை அப்பெண்ணிற்கு வெறுப்பை உருவாக்குகிறது. மேலும் திருமணத்திற்கு முன்பு கணவர்வீட்டார் கூறும் பொய்கள்தான் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணியாக இருக்கின்றன.
இதே‌போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண், ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம் ‌முக்கிய காரணியாக இருக்கின்றன.
பிரச்சினைகளை சாவல்களாக்குங்கள்
பிரச்சினை எதுவாக இருந்தாலும் முதலில் கோபப்படமாலும், பதட்டபடாமலும் இருந்து இருவரும் ஒன்றே நின்று சமாளிக்க வேண்டும். இதைதவிர்த்து அப்பிரச்சினைக்காக உங்களுக்குள்ளே (கணவன்-மனைவி) மோதிகொண்டால் பிரச்சினை இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.
விட்டு கொடுங்கள்
இன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல ஜோடிகள் விவாகரத்து கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம் வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும். இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும். நிதிமன்றத்தில் விவாகரத்து இன்று கேட்டவுடன் நாளை கொடுத்து விடுவதில்லை, நிதிமன்றமும் ஜோடிகளை சேர்த்து வைக்க சில முயற்சிகளை எடுக்கும், சில பல ஆலோசனைகள் மூலமாக. ஆனால் சிலர் விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது.
ஆனால் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எங்கும் இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
அன்பு / அரவணைப்பு
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது "I LOVE YOU" சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள், அதற்க்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை சுட்டி காட்டாதீர்கள். அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில ரொமான்ஸ்களை செய்யுங்கள்.
இல்லற சந்தோஷம் பொங்க
அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.

பெல் அடித்த ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை

           

Wednesday31October2012.By.By.Rajah..சீனாவில் தேசிய நுழைவு தேர்வு முடிவதற்கு முன்னர், பெல் அடித்த ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவில் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி, தேசிய அளவில் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வு நடந்தது. பல்வேறு மையங்களில் மாணவ, மாணவிகள் மும்முரமாக தேர்வு எழுதி கொண்டிருந்தனர்.

ஹூனான் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு 1,050 மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அப்போது தேர்வு முடிந்து விட்டதற்கான மணி ஒலித்தது. மாணவர்கள் விடைத்தாள்களை கொடுத்துவிட்டு மையத்தில் இருந்து வெளியில் வந்தனர். வெளியில் இருந்த பெற்றோர் பலர் பரபரப்பு அடைந்தனர்.
அப்போதுதான், தேர்வு முடிய இன்னும் 5 நிமிடம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளியிலும், தேர்வு துறை அலுவலகம் முன்பும் ஏராளமான பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Ôதேர்வு முடிவதற்கு பெல் அடித்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும்Õ என்று வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, ஜியாவோ யுலாங் (54) என்ற ஊழியர் 5 நிமிடத்துக்கு முன்னரே தவறுதலாக மணி அடித்து விட்டதை ஒப்புக் கொண்டார். இதுதொடர்பான வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. எனினும், தண்டனையை நிறைவேற்றுவதற்கு தற்காலிகமாக தடை விதித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது



 

உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து பொலிசின் தலைமையகம் விற்பனை

புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012,By.Rajah.கடும் நிதி நெருக்கடியால் பிரிட்டனில் ஸ்காட்லாந்து யார்டு பொலிஸ் தலைமையகம் விற்பனை செய்யப்பட உள்ளது. பிரிட்டனின் மிகப்பெரிய உலகப் புகழ்பெற்‌ற ஸ்காட்லாந்து யார்டு பொலிஸ் அமைப்பு, கடந்த 1960ஆம் ஆண்டு முதல் மத்திய லண்டனில் விக்டோரியா நகரில் உள்ள தலைமை அலுவலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பிரிட்டன் அரசும் நிதி ஒதுக்கிட மறுத்து விட்டதால், தற்போது இந்தாண்டு பட்ஜெட் செலவினமாக 500 மில்லியன் உயர்ந்துவிட்டது.
இதனால் நிலைமை சமாளிக்க முடியாமல் 2015ஆம் ஆண்டிற்குள் இதனை ஒட்டுமொத்தமாக விற்றுவிட ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதாக‌ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nexus 4 கைப்பேசிகளை அறிமுகப்படு​த்துகின்றது Google

புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012, By,Rajah.{காணொளி}
பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை மக்களுக்கு வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது தனது புதிய தயாரிப்பில் உருவான Google Nexus 4 ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது. Android OS மற்றும் Android 4.2 Jelly Bean ஆகிய இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பதிப்புக்களாக வெளிவரும் இக்கைப்பேசிகள் 4.7 அங்குலமுடைய தொடுதிரை வசதியினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுவதுடன் இதன் Resolutionஆனது 1280 x 768 Pixelsகளாக அமைந்துள்ளது.
மேலும் 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடியதும் Qualcomm Snapdragon S4 தொழில்நுட்பத்தில் உருவானதுமான Processor-னைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 2GB RAM - இனையும் கொண்டுள்ளது.
இவற்றுடன் சேமிப்பு கொள்ளவு 8GB மற்றும் 16GB - இனைக்கொண்டு இரண்டு வகைகளைாக கிடைக்கின்றது.
இவை தவிர 8 Mexapixels உடைய பிரதான கமெரா பொருத்தப்பட்டுள்ளதுடன், வீடியோ அழைப்புக்களுக்காக 1.3 Mexapixelsஉடைய துணைக் கமெரா ஒன்றினையும் கொண்டுள்ளது.


புகைப்படம் எடுப்பதற்கா​க அறிமுகமாகு​ம் நவீன கருவி

 புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012, By.Rajah.{காணொளிபுகைப்படங்கள்}
கூகுள் நிறுவனமானது எந்தவொரு திசையிலும் புகைப்படம் எடுக்கக்கூடிய Photo Sphere எனும் கருவியினை அறிமுகம் செய்வதற்கு தயாராகி வருகின்றது. இச்சாதனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளமான அன்ரோயிட்டின் புதிய பதிப்பாக வெளிவரவுள்ள Android 4.2 Gelly Bean இயங்குதளத்தினை அடிப்டையாகக் கொண்ட Nexus 4, Nexus 10 மற்றும் புதிய பதிப்பான Nexus 7 ஆகிய Tablet போன்றவற்றை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் வெவ்வேறு திசைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றிணைத்து பெரிய அளவுடைய புகைப்படமாக மாற்றியமைக்கவும் முடியும்.
அத்துடன் கூகுள் நிறுவனமானது இந்த நவீன சாதனம் தொடர்பான காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்! ???


Wednesday 31 October 2012By.Lovi.மாம்பழத்தில் விட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட்டிகை கலந்து குடித்தால் தொண்டை சம்பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.

மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டை குரலும் இனிமையாக மாறும். மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு கரகரப்பு சளி நீங்கும். மா இலையை பொடியாக்கி பற்களில் தேய்த்து வர பல்லில் உள்ள காரை மறைந்து பற்கள் முத்து போல ஜொலிக்கும்.

மாம்பழ மலமிளக்கியாக செயல்படுவதுடன் முகத்தில் உள்ள பருக்களையும் போக்ககூடியது. சூடு உடல் கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பாலை பருகினால் சூடு பிடிக்காது.

ஒரு டீஸ்பூன் மாங்கொட்டை பொடியுடன் ஒரு துளி நெய் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி தொல்லை இருக்காது. நகத்தின் மேல் இருக்கும் வெள்ளை புள்ளிகள் நக வெட்டு தோலில் உள்ள வெள்ளை திட்டுகளும் நீங்கிவிடும்.

மா மரத்தின் பட்டையில் வடியும் பாலை கால் வெடிப்பில் தடவினால் வெடிப்பு மறைந்து பாதம் பட்டு போல் மாறிவிடும்..

ஒரு சிட்டிகை மா மர பிசினை ஒரு டம்ளர் மாம்பழ ஜீஸீடன் கலந்து சாப்பிட்டால் தேமல் தழும்பு படை நீங்கி தோல் மிருதுவாகும்

தூய்மையான இரத்ததிற்கு கரிலாங்கண்ணி!

          
Wednesday 31 October 2012By.Lovi.இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.

* இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும்.

* கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.

* கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும்.

* ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.

* இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும்.

* மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு.

* குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும்.

* கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.

* தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.

* கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர்.

இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். கண்ணுக்கு மை அழகு என்ற பழமொழி, அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கயத்துக்கும் சிறந்ததாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்

செவ்வாய், 30 அக்டோபர், 2012

ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் மன ஓய்வு!'?

         
Wednesday 31 October 2012 .By.Lovi. ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். இது நோயை விரட்டி ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கிறது. எனவே  எவ்வாறு ஓய்வு எடுப்பது என்று தெரிந்துக்கொள்ளவது மிகவும் அவசியம்.
* காமெடியான படங்கள், சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.
* விருப்பப்பட்ட பாடலைக் கேட்பது, ஒரு சில பாடலுக்கு நடனம் புரிதல் போன்றவையால் எத்தகைய பிரச்சனைகளையும் சந்திக்கும் அளவுக்கு மனம் பக்குவம் அடையும்.
* அதிகாலையில் 5 மணிஅளவில் வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும்.
* இரவு உறங்க செல்வதற்கு முன் முழு தினமும் நடந்த நல்லவை தீயவை என்று அனைத்தையும் மனக்கண்முன் கொண்டு வருவதன் மூலம் மனம் முற்றிலும் தூய்மைப்பெற்று ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
* யோகா செய்தல் மிகவும் நல்லது. யோகா வகுப்புகளுக்கு செல்ல இயலாத நிலையில், வாரம் ஒரு முறை யோகா புத்தகம் அல்லது சிடி போட்டு பார்த்து செய்து வந்தால் மனம் உடல் இரண்டும் நல்ல ஓய்வு நிலையை அடையும் வாய்ப்புகள் இருக்கின்றன.
உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனமே, எனவே உங்கள் மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு உங்கள் கையில் என்பதை மனதில் கொள்ளுங்கள்

314 நாட்கள் நடந்து வந்து ஹஜ் பயணத்தை நிறைவு செய்த யாத்திரிகர்

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah{.காணொளி,புகைப்படங்கள்}
போஸ்னியாவை சேர்ந்த யாத்திரிகர் ஒருவர், 5650 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்று ஹஜ் பயணத்தை நிறைவு செய்துள்ளார். போஸ்னியாவை சேர்ந்த செனாத் ஹெட்சிக்(வயது 47) என்பவர் பவோனிசி நகரிலிருந்து கடந்தாண்டு டிசம்பர் மாதம் 15 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 கிலோ எடை கொண்ட உடைமைகளுடன் ஹஜ் பயணம் மேற்கொண்டார்.
314 நாட்கள், 5650 கிலோ மீற்றர் தூரம் நடந்து செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளை கடந்து தற்போது சவுதி அரேபியா வந்து சேர்ந்துள்ளார்.
வரும் வழியில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளார் செனாத். இவர் பயணம் மேற்கொண்ட டிசம்பர் மாதத்தில் பல்கேரியா நாட்டில் குளிர் மைனஸ் 35 டிகிரி என்று இருந்ததால், நிலையை சமாளிக்க முடியவில்லை.
அத்துடன் சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால், அந்நாட்டை கடப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டுள்ளார்.
கடைசியில் தான் நினைத்தபடி சவுதி அரேபியா வந்து, ஹஜ் பயணத்தை முடித்து கொண்டார்.


நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தூங்கிய விமானிகள் ???

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானிகள் இருவர் தூங்கி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானிகள் அடிக்கடி தூங்குவதாக புகார் வந்தன. இந்நிலையில் விமானத்தின் முதன்மை விமானி, கழிப்பறைக்கு செல்வதற்காக, சக விமானிகளிடம் விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
சில நிமிடங்கள் கழித்து முதன்மை விமானி, விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு மற்றொரு விமானியிடம் பேச முயன்றார். அவரிடமிருந்தும் பதில் வரவில்லை. மூன்றாவது விமானியை தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.
நிலைமையை உணர்ந்து கொண்ட கேப்டன் விமானிகள் அறைக்கு சென்று பார்த்த போது, விமானிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அதுவரை நடுவானில் விமானம் பறந்து கொண்டே தான் இருந்தது. கேப்டன் எழுப்பியதும் உரிய இடத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போதும் மூன்றாவது விமானி தூங்கி கொண்டே தான் இருந்தார்.
இவர்களது பெயரை பிரிட்டன் விமானத்துறை வெளியிட மறுத்து விட்டது. இது குறித்து விமானிகள் சங்க நிர்வாகிகள் குறிப்பிடுகையில், விமானம் பறக்கும் போது அசதி காரணமாக விமானிகள் தூங்குவது சகஜம் தான் என்றனர்.
விமானிகளின் இந்த பாதுகாப்பற்ற செயல் குறித்து விமான அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம்

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பொருட்களை சுமந்தபடி வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி உள்ளது டிராகன் விண்கலம். விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக, விண்வெளியில் மிதக்கும் சர்வதேச ஆய்வு மையத்துக்கு பொருள்களைக் கொண்டு செல்லும் பணியை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்தது.
சிஆர்எஸ்-1 என்ற இத்திட்டத்தில் “டிராகன்” எனப் பெயரிடப்பட்ட விண்கலம் 450 கிலோ எடையுள்ள பொருள்களைச் சுமந்தபடி விண்வெளி நிலையத்துக்குச் சென்றது.
அங்கு பொருள்களைக் கொடுத்து விட்டு, அங்கிருந்து மாதிரிகள், ஆய்வு முடிவுகள், வன்பொருள்கள் உள்ளிட்ட 758 கிலோ எடையுள்ள பொருள்களைச் சுமந்தபடி வெற்றிகரமாகத் திரும்பியது டிராகன்.
பசிபிக் கடலில் பாராசூட் உதவியுடன் இறங்கிய இந்த ஆளில்லா விண்கலம் நீர்மூழ்கி வீரர்களின் உதவியுடன் மீட்கப்பட்டது.

இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறது!

         
Tuesday 30 October 2012 .By.Rajah.
அரசாங்கத்தின் உயர் பதவிகள் பலவற்றுக்கு இராணுவத்தினரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றத் உறுப்பினர் கரு ஜெயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
மாவட்டஅரசாங்கஅதிபர்களாகஇராணுவ பிரிகேடியர்களயும், பாடசாலை அதிபர்களாக இராணுவகேர்னல்களையும் நியமிக்க அரசாங்கம் நடவடிக்கைஎடுத்துள்ளதாகஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தற்போது உள்ள காவற்துறை மா அதிபர் என்ற பதவியை நீக்கி, காவற்துறை ஆணையாளர் என்ற புதிய பதவியை ஏற்படுத்த விருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இராணுவ ஆட்சியில் நடைபெறும் ஒன்று என்று சுட்டிக்காட்டிய அவர், இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

காங்கேசன்துறையை சூறாவளி தாக்கலாம்!?

Tuesday 30 October 2012.By.Rajah.எதிர்பார்க்கப்பட்டதைப் போல நேற்றைய தினம் இலங்கையை சூறாவளி எதுவும் தாக்கவில்லை, எனினும், இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த சூறாவளி இலங்கையை ஊடறுத்து செல்லலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. தற்போது முல்லைத்தீவில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தாழமுக்க நிலையில், இன்று பிற்பகலில் காங்கேசன் துறை ஊடாக இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறும் என்று கூறப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணத்தில் சிறிய அளவிலான சூறாவளி ஒன்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்ற வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. அதேநேரம் மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 29 அக்டோபர், 2012

சேண்டி புயல். கடும் சூறாவளியால் 22 பேர் பலி?


Monday 29 October2012  By.Rajah{.காணொளி}, கடும் சூறாவளி புயல் தாக்கியதால், கியூபா, ஹைய்தி, ஜமாய்க்கா ஆகிய நாடுகளில், 22 பேர் பலியாகியுள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலில் மையம் கொண்டுள்ள, "சேண்டி' என்ற சூறாவளி புயல், பகாமாஸ் தீவுகளையும், கியூபா, ஹெய்தி, ஜமாய்க்கா நாடுகளையும் தாக்கியுள்ளது.இதனால், இந்த நாடுகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. வீடுகளை கூரைகள் சேதமடைந்துள்ளன. பல நகரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. புயலை தொடர்ந்து பலத்த மழை பெய்வதால், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, இந்த புயலுக்கு, 22 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி, இந்த புயல் நகர்ந்து   நகர்ந்து வருகிறது          
 

கனடாவில் பயங்கர புயல் எச்சரிக்கை. 3 நாட்களுக்கு தேவையான பொருட்களை பத்திரப்படுத்துமா?

By.Rajah.ஒண்டோரியோ பகுதிகளில் சாண்டி புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கபப்டுவதால், அப்பகுதி மக்கள் அடுத்த 72 மணி நேரங்களுக்கான உணவு, மற்றும் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு, கனடிய செஞ்சிலுவை சங்கம் ( The Canadian Red Cross)  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவை நோக்கி சாண்டி என்ற புயல் வந்து கொண்டிருக்கிறது. எனவே அடுத்த மூன்று நாட்களுக்கு கனடாவின் கடற்கரையோரப் பகுதிகளில் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் கனமழை பெய்யும் என கனடிய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் பாதுகாப்பான பகுதிகளில் இருக்கும் ஒண்டோரியோ மக்கள், அடுத்த மூன்று நாட்களுக்கு, அதாவது அடுத்த 72 மணி நேரங்களுக்கு தங்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்களை இப்பொழுதே சேகரித்து பாதுகாத்து வைத்துக் கொள்ளுமாறும், அவற்றை ஒரு சூட்கேஸில் வைத்துக்கொண்டால், வெள்ளத்தின் காரணமாக இடமாறுதல் செய்யும்போது வசதியாக இருக்கும் எனவும், செஞ்சிலுவை சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒண்டோரியோ மக்கள் சேகரிக்க வேண்டிய பொருட்கள்:

1. ஒரு நபருக்கு குறைந்தது 4 லிட்டர் தண்ணீர். ( 2 லிட்டர் குடிப்பத்ற்கு, 2 லிட்டர் மற்ற உபயோகத்திற்கு)

2. 72 மணி நேரங்களுக்கு தேவையான மூடி பாதுகாக்கப்பட்ட உணவுப்பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள்.

3. இரண்டு கூடுதல் பேட்டரிகளுடன் கூடிய டார்ச் விளக்கு.

4. இரண்டு கூடுதல் பேட்டரிகளுடன் கூடிய ரேடியோ.

5. கார் மற்றும் வீடுகளின் மாற்று சாவிகள்.

6. மின்சார பிரச்சனையால்  ATM இயங்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதால், கையில் தேவையான அளவிற்கு பணம்.

விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள், தங்களது பயணத்தை உறுதி செய்தபின் கிளம்ப ஆயத்தமாகுமாறு ஏர் கனடா கேட்டுக்கொண்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யக்கூடிய நிலை இருப்பதால், ஏர்கனடாவின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, விமான நேரத்தை உறுதி செய்த பின்பே தங்களின் வீடுகளில் இருந்து கிளம்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். அதுபோலவே Porter Airlines நிறுவனமும் விமானத்தின் காலதாமதம், மற்றும் ரத்து போன்ற செய்திகளை உடனுக்குடன் பயணிகளுக்கு தெரிவிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

மரண அறிவித்தல் {ஏழாலைசிவஞானசுந்தரம்}

திரு கந்தவனம் சிவஞானசுந்தரம்
(பலநோக்கு கூட்டுறவுச் சங்க இளைப்பாறிய முகாமையாளர்)
பிறப்பு : 27 மே 1928 — இறப்பு : 26 ஒக்ரோபர் 2012ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் சிவஞானசுந்தரம் அவர்கள் 26-10-2012 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற காசிநாதர், சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரனும்,
சிவசக்தி(கனடா), ஞானசக்தி(இத்தாலி), சுகுமார்(கனடா), ஞானதர்சினி(பிரான்ஸ்), ஞானசேகர்(இத்தாலி), சிவாஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைரத்தினம், கிருபாகரன், ரேவதி, பகீரதன், விமலினி, விக்கினராஜா, காலஞ்சென்ற பத்மநாதன், குணசிங்கம், தேவநாயகம், இராஜமனோகரி, இராஜசுசீலா, சிறிஸ்கந்தராஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
உதயகீதன், ரஜிதா, மகிபா, துஜோன், துசி, துசன், புளோரா, பிரிஷா, ஜனகா, ஜனகன், துவாரகா, பாரதி, பரணி, ராகவேந்தன், வைஷ்ணவி, வினோத், வித்தியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தனிஷ் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-10-2012 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிதொடக்கம் மாலை 5:00 மணிவரை கொழும்பிலுள்ள மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் யாழ்.ஏழாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று,31-10-2012 புதன்கிழமை அன்று உசந்தி ஓடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவசக்தி — கனடா
தொலைபேசி: +15144952957
ஞானசக்தி — இத்தாலி
தொலைபேசி: +3951364580
சுகுமார் — கனடா
தொலைபேசி: +15142788824
ஞானதர்சினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33141599278
ஞானசேகர் — இத்தாலி
தொலைபேசி: +3951731983
சிவாஜினி — கனடா
தொலைபேசி: +15142732296
 

 

 
:
:
:
:

சுவிஸ் இன்டோர்: இறுதிப்போட்டியில் ஃபெடரர்- டெல் பொட்ரோ மோதல்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, 06:35.47 மு.ப GMT
சுவிஸ் இன்டோர் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரும், அர்ஜெண்டீனாவின் ஜான் மார்டின் டெல் பொட்ரோவும் மோதவுள்ளனர். சுவிட்சர்லாந்தில் சுவிஸ் இன்டோர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் டெல் பொட்ரோ 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் ரிச்சார்டு கேஸ்கியூட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இவர், இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் ஃபெடரரை எதிர்கொள்கிறார். சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் விளையாடும் ஃபெடரர், இக்கிண்ணத்தை எளிதாகக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கிண்ணத்தை ஃபெடரர் ஏற்கெனவே 5 முறை வென்றுள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஃபெடரர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் பெளல் ஹென்றி மேத்யூவை வீழ்த்தினார்.
கடைசியாக விளையாடிய 34 போட்டிகளில் 33ல் ஃபெடரர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மெண்டிஸ் மலேசியாவில் விளையாடுகிறார்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் மலேசியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். அஜந்த மென்டிஸ் காயமடைந்துள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையிலேயே அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் கழக மட்டத்தில் விளையாடுவதற்காக இலங்கை இராணுவத்தில் இணைந்திருந்த அஜந்த மென்டிஸ், மற்றொரு வீரரான சீக்குகே பிரசன்னா ஆகியோர் இலங்கை இராணுவ அணிக்காக மலேசியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர்.
இலங்கை இராணுவ அணி நட்புறவு கிரிக்கெட் போட்டிகளுக்காக மலேசியா சென்றுள்ளதுடன், அங்கு சென்ற இராணுவ அணியின் தலைவராக அஜந்த மென்டிஸ் செயற்பட்டுள்ளார்.
இவருடன் மற்றொரு வீரரான சீக்குகே பிரசன்னாவும் இணைந்துள்ளார். 3 போட்டிகளில் அங்கு இராணுவ அணி போட்டிகளில் பங்கேற்றது.
இதில் இலங்கை அணி, ரோயல் மலேசியன் விமானப்படை அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்திலும், மலேசிய கிரிக்கெட் வாரியத்தின் ஜனாதிபதி அணியை 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
மலேசியப் படை வீரர்களுக்கெதிரான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்தது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 போட்டி மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணியில் அஜந்த மென்டிஸ் காயம் காரணமாக சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற வேலைக்கார பெண்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, By.Rajah.
வீட்டில் வேலை செய்த பெண் ஒருவர், உரிமையாளரின் 2 குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கெவின் கிரிம், அவருடைய மனைவி மரினா கரிம் மற்றும் இவர்களது குழந்தைகள் லூலூ(6), லியோ(2), 3 வயது மகளுடன் வசித்து வருகின்றார்.
கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளை பார்த்துக் கொள்ள, யோசிலின் ஓர்டகா(50) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தனர்.
வேலை விஷயமாக கெவின் வெளியூர் சென்றிருந்தார். கடந்த வியாழக்கிழமை உள்ளூர் நடன ஸ்டுடியோவுக்கு மகளுடன் சென்றார் மரினா வீட்டிற்கு திரும்பினார்.
விளக்குகள் எரியாமல் அவரது வீடு இருட்டாக இருந்ததும், பதற்றம் அடைந்த மரினா அவசர அவசரமாக வீட்டுக்கு சென்றார்.
கதவை திறந்தவுடன், உள்ளே சென்ற மரினாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கழிவறையில் இரண்டு குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
மரினாவை பார்த்ததும் வேலைக்கார பெண் யோசிலின், கத்தியால் தன்னை தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
மரினாவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர், தகவல் அறிந்து வந்த பொலிசார் 2 குழந்தைகளின் சடலங்களையும் மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு செல்லப்பட்ட வேலைக்கார பெண்ணுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து நியூயார்க் பொலிஸ் கமிஷனர் ரே கெல்லி கூறுகையில, கெவின் குடும்பத்தார் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் அருகில்தான் யோசிலின் வசிக்கிறார்.
யோசிலின் நினைவற்று கிடப்பதால் விசாரணை நடத்த முடியவில்லை. அதனால் வழக்கு எதுவும் இதுவரை பதிவு செய்யவில்லை என்றார்.

அவுஸ்திரேலியா இரண்டு நாட்களில் 29 இலங்கையர்களை ???

 
 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, By.Rajah.
கடந்த இரண்டு நாட்களில் அவுஸ்திரேலியா, 9 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில் படகு ஒன்றை கடத்தி அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளைச் சென்றடைந்த 14 பேர் நாடு கடத்தப்பட்டனர்.
இதற்கு மேலதிகமாக கிறிஸ்மஸ் தீவுகளைச் சென்றடைந்த 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஏழு பேர் கடந்த வெள்ளிக்கிழமையும், எட்டுபேர் கடந்த சனிக்கிழமையும் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது