By.Rajah.ஒண்டோரியோ பகுதிகளில் சாண்டி புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கபப்டுவதால், அப்பகுதி மக்கள் அடுத்த 72 மணி நேரங்களுக்கான உணவு, மற்றும் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு, கனடிய செஞ்சிலுவை சங்கம் ( The Canadian Red Cross) பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவை நோக்கி சாண்டி என்ற புயல் வந்து கொண்டிருக்கிறது. எனவே அடுத்த மூன்று நாட்களுக்கு கனடாவின் கடற்கரையோரப் பகுதிகளில் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் கனமழை பெய்யும் என கனடிய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் பாதுகாப்பான பகுதிகளில் இருக்கும் ஒண்டோரியோ மக்கள், அடுத்த மூன்று நாட்களுக்கு, அதாவது அடுத்த 72 மணி நேரங்களுக்கு தங்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்களை இப்பொழுதே சேகரித்து பாதுகாத்து வைத்துக் கொள்ளுமாறும், அவற்றை ஒரு சூட்கேஸில் வைத்துக்கொண்டால், வெள்ளத்தின் காரணமாக இடமாறுதல் செய்யும்போது வசதியாக இருக்கும் எனவும், செஞ்சிலுவை சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஒண்டோரியோ மக்கள் சேகரிக்க வேண்டிய பொருட்கள்:
1. ஒரு நபருக்கு குறைந்தது 4 லிட்டர் தண்ணீர். ( 2 லிட்டர் குடிப்பத்ற்கு, 2 லிட்டர் மற்ற உபயோகத்திற்கு)
2. 72 மணி நேரங்களுக்கு தேவையான மூடி பாதுகாக்கப்பட்ட உணவுப்பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பால் பொருட்கள்.
3. இரண்டு கூடுதல் பேட்டரிகளுடன் கூடிய டார்ச் விளக்கு.
4. இரண்டு கூடுதல் பேட்டரிகளுடன் கூடிய ரேடியோ.
5. கார் மற்றும் வீடுகளின் மாற்று சாவிகள்.
6. மின்சார பிரச்சனையால் ATM இயங்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளதால், கையில் தேவையான அளவிற்கு பணம்.
விமானத்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள், தங்களது பயணத்தை உறுதி செய்தபின் கிளம்ப ஆயத்தமாகுமாறு ஏர் கனடா கேட்டுக்கொண்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யக்கூடிய நிலை இருப்பதால், ஏர்கனடாவின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, விமான நேரத்தை உறுதி செய்த பின்பே தங்களின் வீடுகளில் இருந்து கிளம்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். அதுபோலவே Porter Airlines நிறுவனமும் விமானத்தின் காலதாமதம், மற்றும் ரத்து போன்ற செய்திகளை உடனுக்குடன் பயணிகளுக்கு தெரிவிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன