siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 30 ஜூலை, 2016

தமிழர்வளத்த நாய்க்கு கனடாவில் மரண வீடு நடத்தியுள்ளார்.!

குழந்தைகளைப் போல நாய், பூனை, மீன்கள் என வீட்டு மிருகங்களையும், செல்லமாக வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் பலர் .அதிலும் குறிப்பாக, நாய்கள், பல வீடுகளில் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே வலம் வருவதைப் பார்க்க முடிகிறது.
தமிழர்களும் இதில் குறைந்தவர்கள் அல்ல , நாய் நன்றியுள்ள மிருகம் ,போன்ற அடைமொழிகளிலிருந்து பல குழந்தை கதைகளும் நாய்கள் பற்றி தமிழில் உள்ளன. தமிழர்களுக்கு ஒரு நாடு ஓன்று இல்லை தவிர , தமிழர்கள் புலம் பெயர்ந்தாலும் அந்த நாய் பாசம் குறையவே 
இல்லை
இவற்றுக்கு சிகரம் வைத்தால் போல் நேற்று கனடியத் தமிழர் ஒருவர் தனது செல்லப் பிராணியான வளர்ப்பு நாய்க்கு அதன் ஈமைக் கிரிகைகளை இந்து முறைப்படி, அதற்கு வெட்டி உடுத்து ,ஈமைக் கிரிகைகள் நடத்தும் ஐயரை அழைத்து அதன் மரணச்சடங்கு நிகழ்வை நடத்தியுள்ளார்,அதன் ஆத்மா சாந்திக்காக நிகழ்த்திய மரணச்சடங்கு நிகழ்வுகள் 
நடத்தப் பட்டதாம்… 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 29 ஜூலை, 2016

வெளியேற்றப்படுவார்கள்.தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள்

ஜெர்மனிக்கு வந்து தஞ்சம் கோரி, அக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பித்த குடியேறிகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவேண்டும் என்று ஜெர்மனியின் மாகாணமான, பவேரியாவின் உள்துறை அமைச்சர், ஜோச்சிம் ஹெர்மான் கூறியிருக்கிறார்.
தஞ்சம் கோரிகளின் சொந்த நாடுகளில் போர் நடந்து கொண்டிருந்தால் கூட , அவர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்று 
அவர் கூறினார்.
தனது பவேரியா மாகாணத்தில் நடந்த பல இஸ்லாமியவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் பேசிய ஹெர்மன், தேவைப்பட்டால், இதைச் செய்ய ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை மாற்ற வேண்டும் என்றார். இந்த சட்டங்கள் ஒரு சில அகதிகளை நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதிலிருந்து தடுக்கின்றன.
பவேரியா மாகாணத்தின் பிரதமரும், ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்க்கலின் நீண்ட கால விமர்சகருமான, ஹொர்ஸ்ட் சீஹோஃபர் , ஜெர்மனியின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவேண்டும் என்று 
கூறியுள்ளார்.
ஜெர்மனியில் கடந்த வாரம் நடந்த நான்கு தாக்குதல் சம்பவங்களில் மூன்று தஞ்சம் கோரிகளால் நிகழ்த்தப்பட்டவை என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 23 ஜூலை, 2016

பலர்மர்ம நபர் துப்பாக்கிச் சூடுட்டில் ஜெர்மனியில்பலியானதாக தகவல்

தெற்கு ஜெர்மன் நகரான மியூனிக்கில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் நகர காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் மூவர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவித்திருக்கும் காவல்துறை அவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையும் மற்ற பாதுகாப்பு படைகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மூனிக் நகரின் வடமேற்கு மாவட்டமானT மூஸச் மாவட்டம் முற்றாக காவல்துறையால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
நகரின் எல்லா பொதுப்போக்குவரத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
பவேரிய மாநில அரசாங்கம் நெருக்கடிகால கூட்டத்தை நடத்திவருகிறது.
ஒலிம்பியா வணிக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ளவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், அந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சம்பவத்தை இடத்தில் ஹெலிகாப்டர்கள் பறப்பதாகவும், கடைகளில் உள்ள ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் தெரிகிறது.
மேலும் தாக்குதல் நடக்கலாம் என எச்சரித்துள்ள காவல்துறை, பொதுமக்கள் வீடுகளை விட்டு வீணாக பொது இடங்களில் நடமாட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திங்கட்கிழமையன்று பவேரியாவில் குடியேறி ஒருவர் ரயிலில் ஐந்து பேரை குத்தியதை அடுத்து நாடளாவிய அளவில் பாதுகாப்பு படைகள் எச்சரிக்கப்பட்டிருந்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 19 ஜூலை, 2016

நாய்களை பாம்புக் கடியிலிருந்து பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு!

ஆஸியில் விசப்பாம்புக் கடிக்கு உள்ளாகும் ஆயிரக் கணக்கான நாய்களை சிசிச்சையளிப்பதற்கென Anti-Venom கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
CSIRO scientists, சிறிய பயோடெக் நிறுவனமான Padula Serums உடன் இணைந்து Eastern Brown மற்றும் Tiger பாம்புக்கடிக்கெதிராக சிகிச்சையளிப்பதற்கென Anti-Venom தயாரிக்கும் பணிகளில்
 ஈடுபட்டிருந்தனர்.
ஆஸியானது உலகத்திலேயே மிகக் கொடிய 10 பாம்புகள் வசிக்கும் இடமாக உள்ளது.
இது வரையிலும் Anti-Venom ஆனது மனிதர்களுக்கு சிகிச்சையளிக்கவே பயன்படுத்தப்பட்டு வந்தது, வளர்ப்புப் பிராணிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
ஆனாலும் தற்போது இது நாய்கள் மற்றும் பூனைகளுக்கென பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் மேற்படி உற்பத்தி நிறுவனத்தின் பணியாளர் George Lovrecz கூறுகையில், தற்போது தயாரிக்கப்பட்டுள் Anti-Venom ஆனது முற்றாக பரிசோதிக்கப்பட்ட, தூய பதார்த்தம், இது பாம்புக்கடிக்குள்ளான நாய்களுக்கு நேரடியாக உட்செலுத்த முடியும் என்கிறார்.இது திறனுள்ளதும், பாதுகாப்பானதும் என்பதுடன் மிக குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சொல்லப்படுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 15 ஜூலை, 2016

வன்முறை கவலை அளிக்கிறது: ஐ.நா.விற்கு பாகிஸ்தான் கடிதம்

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக ஐ.நா.விற்கு எழுதியுள்ள கடிதத்தில் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் காமண்டர் பர்கான் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வன்முறை சம்பவங்கள்
  நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 30-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி 
வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக ஐ.நா.விற்கு எழுதியுள்ள கடிதத்தில் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளார் பான் கி மூன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் கோரோ பெஸ்ஸோ, இஸ்லாமிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இயட் பின் அமின் மதானி மற்றும் மனித உரிமைக்கான ஐ.நா. உயர் ஆணையர் ஜியத் ராத் அல் ஹூசைன் ஆகியோருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கடிதம்
 எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடிதத்தில் காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாகவும், மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் காமண்டர் பர்கானை பிரதமர் நவாஸ் ஷெரீப் தியாகியாக அறிவித்துள்ளார். மேலும் ஜூலை 19-ம் தேதி கருப்பு தினமாக கருதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 11 ஜூலை, 2016

மீண்டும் வடகொரியா அத்துமீறல்: தென்கொரியா குற்றச்சாட்ட?

அணு ஆயுத பசியால் அலையும் வடகொரியா இன்று கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதித்ததாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் 
உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.
வடகிழக்கு ஆசிய நாடுகளான தென்கொரியாவும், வடகொரியாவும் தங்களது ஆயுத பலத்தை நிலைநாட்ட பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து
 வருகிறது. 
அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.
இதன்காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.
அவ்வகையில், வடகொரியா இன்று கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதித்ததாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. அந்த ஏவுகணை எவ்வளவு தூரம் பறந்தது? எங்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை தாக்கியது? என்ற தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
வடகொரியாவின் தொடர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் கவன்களை (பொறி) நிலைநிறுத்த அமெரிக்காவும் தென்கொரியாவும் சமீபத்தில் தீர்மானித்தன. இந்நிலையில், வடகொரியா இன்று நடத்தியுள்ள இந்த ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கத் 
தோன்றுகிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பாராளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி: மால்கோம் டர்ன்புல் மீண்டும் பிரதமராக பதவி !

ஆஸ்திரேலியா நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் போதிய மெஜாரிட்டி கிடைக்காத நிலையிலும் ஆளும்கட்சியான லிபரல் கட்சி மீண்டும் அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் போதிய மெஜாரிட்டி கிடைக்காத நிலையிலும் ஆளும்கட்சியான லிபரல் கட்சி மீண்டும் அங்கு ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் 1987–ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முதலாக பாராளுமன்றத்தின் இருசபைகளையும் கலைத்து 2–ந் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபை என்னும் கீழ்சபையின் 150 இடங்களுக்கும், செனட் சபை என்றழைக்கப்படுகிற மேல்–சபையின் 76 இடங்களுக்கும் கடந்த 2-ம் தேதிதேர்தல் நடந்தது.
ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான தேசிய கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே ‘நீயா, நானா’ என்கிற அளவில் கடுமையான போட்டி நிலவியது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மாலையிலேயே ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே முடிவுகள் இழுபறியாக ஊசலாட்டத்துடனே வெளியாகின. 
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஆஸ்திரேலியாவில் பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக பிரதமர் மால்கம்டர்ன்புல் அறிவித்து இருந்தார். அதற்கு பொது மக்களிடம் ஆதரவு இருந்தது. எனவே, இக்கட்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 
அதற்கேற்ப, இன்று நடைபெற்ற இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 150 இடங்களை கொண்ட ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் 76 இடங்களை பிடிக்கும் கட்சிதான் அங்கு ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி தற்போது 74 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் இரு இடங்களில் இக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி வெற்றி பெறாவிட்டாலும், ஆளும்கட்சிக்கு ஆதரவான மூன்று எம்.பி.க்கள் துணையுடன் ஆஸ்திரேலியாவில் மால்கோம் டர்ன்புல் தலைமையிலான மந்திரிசபை மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகி விட்டது.
எதிர்க்கட்சியான தொழிற்கட்சி 66 இடங்களை பிடித்துள்ள நிலையில் லிபரல் கட்சியின் வெற்றியை ஏற்றுக் கொண்டுள்ள தொழிற்கட்சி தலைவர் பில் ஷார்ட்டன் ஆஸ்திரேலியாவின் எதிர்கால பிரதமர் மால்கோம் டர்ன்புல்-லை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து 
தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 7 ஜூலை, 2016

பங்களாதேஷில் மீண்டும் குண்டு வெடிப்பு!

பங்களாதேஷில் ரம்ழான் தொழுகை நடந்த இடம் அருகே குண்டு வெடித்ததில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் இதில் 11 பேர் படுகாயமடைந்தனர். அண்மையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியானார்கள்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இன்று காலை இவ்வாறு குண்டு வெடித்துள்ளது. மேலும் குண்டு வெடித்த இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி 
வருகிறார்கள்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 1 ஜூலை, 2016

இத்தாலியில் வட்டி அறவிட்ட இலங்கையர் கைது!

இத்தாலியின் மெசீனா நகரில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இலங்கையர்கள் பலரிடம் கொடுத்த பணத்திற்கு வட்டி பணம் பெற்றுக்கொண்டிருந்த போதே இத்தாலி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யும் போது இவரிடம் வட்டிபணம் 250 யூரோக்கள் இருந்ததாகவும், அத்துடன் கடவுச் சீட்டுக்கள் பலவற்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபரின் வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார் அதிலிருந்து கத்தி மற்றும் துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>