தெற்கு ஜெர்மன் நகரான மியூனிக்கில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் நகர காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் மூவர் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவித்திருக்கும் காவல்துறை அவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையும் மற்ற பாதுகாப்பு படைகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
மூனிக் நகரின் வடமேற்கு மாவட்டமானT மூஸச் மாவட்டம் முற்றாக காவல்துறையால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
நகரின் எல்லா பொதுப்போக்குவரத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
பவேரிய மாநில அரசாங்கம் நெருக்கடிகால கூட்டத்தை நடத்திவருகிறது.
ஒலிம்பியா வணிக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ளவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், அந்தப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சம்பவத்தை இடத்தில் ஹெலிகாப்டர்கள் பறப்பதாகவும், கடைகளில் உள்ள ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் தெரிகிறது.
மேலும் தாக்குதல் நடக்கலாம் என எச்சரித்துள்ள காவல்துறை, பொதுமக்கள் வீடுகளை விட்டு வீணாக பொது இடங்களில் நடமாட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திங்கட்கிழமையன்று பவேரியாவில் குடியேறி ஒருவர் ரயிலில் ஐந்து பேரை குத்தியதை அடுத்து நாடளாவிய அளவில் பாதுகாப்பு படைகள் எச்சரிக்கப்பட்டிருந்தனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 comments:
கருத்துரையிடுக